காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் தான், அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், ஆற்றலுடனும் செயல்பட முடியும். ஆனால் இன்றைய நவீன உலகில் நாம் உண்ணும் உணவுகளில் ஏற்பட்ட மாற்றங்களால், இதுவரை இட்லி, உப்புமா உட்கொண்டு வந்த நாம், பிரட் ஜாம், பர்கர் என சாப்பிட ஆரம்பித்துள்ளோம்.

இதனால் நம் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உடலை வருத்தும் பல நோய்களால் கஷ்டப்பட நேரிடுகிறது. அதுமட்டுமின்றி பசி அதிகம் எடுத்து, கண்ட உணவுகளை கண்ட நேரங்களில் உட்கொள்கிறோம். இந்நிலையைத் தடுக்க வேண்டுமானால், ஒருவர் காலையில் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ளக் கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரட் மற்றும் ஜாம்

பிரட் மற்றும் ஜாம்

காலையில் பிரட் மற்றும் ஜாம் சாப்பிடுவது, உங்களது நேரத்தை இருக்கலாம். ஆனால் ஜாம் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. வேண்டுமானால் பிரட் உடன் முட்டையை வேக வைத்து சாப்பிடலாம். இல்லையெனில், காலையில் பிரட்டையும் தவிர்த்து, முட்டையை வேக வைத்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பாலைக் குடியுங்கள். இதை விட சிறந்த காலை உணவு எதுவும் இருக்காது.

டோனட்ஸ்

டோனட்ஸ்

டோனட்ஸ், பாஸ்ட்ரிஸ் அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுகள் அனைத்துமே தீங்கு விளைவிப்பவை. இவை இந்தியாவில் இல்லாவிட்டாலும், வெளிநாடுகளில் இருப்பவர்கள், இம்மாதிரியான உணவுகளை காலையில் உட்கொள்ளாதீர்கள்.

பர்கர்

பர்கர்

சிலர் காலையில் நேரமாகிவிட்டது என்று பர்கரை சாப்பிடுவார்கள். ஆனால் அந்த பர்கரில் பதப்படுத்தும் பொருட்கள், சாஸ் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதால், இது உடலுக்கு தீங்கை தான் ஏற்படுத்தும்.

டப்பாவில் அடைக்கப்படும் ஜூஸ்கள்

டப்பாவில் அடைக்கப்படும் ஜூஸ்கள்

டப்பாவில் அடைத்து விற்கப்படும் ஜூஸ்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒரே நேரத்தில் அதிகரித்து, அதனால் அபாயகரமான விளைவை சந்திக்க வேண்டிவரும்.

இனிப்பு பண்டங்கள்

இனிப்பு பண்டங்கள்

காலையில் வெறும் வயிற்றில் எந்த ஒரு இனிப்பு பலகாரத்தையும் உட்கொள்ளாதீர்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவு திடீரென்று அதிகரித்து, உடலுக்கு எதிர்பாராத அளவில் தீங்கை ஏற்படுத்தும்.

செரில்கள்

செரில்கள்

கடைகளில் விற்கப்படும் செரில் பொருட்கள் தானியங்களால் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும், சிலவற்றில் க்ளுட்டனும், இன்னும் சிலவற்றில் சர்க்கரையும் இருக்கும். எனவே இது காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற உணவல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வேண்டுமானால் மற்ற நேரங்களில் உட்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods Not To Eat In The Morning

You can start your day with a healthy food. That will energise your entire day. But there are also some foods not to eat in the morning. What are they?
Story first published: Saturday, January 30, 2016, 9:00 [IST]
Subscribe Newsletter