For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படுவதற்கான காரணங்கள்!

By Maha
|

பெண்கள் சந்திக்கும் பிரச்சனையில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இந்த வெள்ளைப்படுதல் சில பெண்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும். இப்படி வெள்ளைப்படுதல் அதிகம் இருந்தால், அதனை சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் அது பெண்களின் உடலினுள் உள்ள ஒருசில பிரச்சனைகளை உணர்த்துவதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

எனவே ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருந்தால், அதனை சாதாரணமாக விடாமல், அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈஸ்ட் தொற்றுகள்

ஈஸ்ட் தொற்றுகள்

ஈஸ்ட் தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து சற்று கெட்டியாக திரவம் வெளியேறும். மேலும் அத்துடன் அரிப்பையும், வலியையும் சந்திக்கக்கூடும். சில சமயங்களில் அப்பகுதியில் வீக்கமும் இருக்கும்.

பாக்டீரியல் வஜினோஸிஸ்

பாக்டீரியல் வஜினோஸிஸ்

பெண்களின் பிறப்புறுப்புக்களில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக இருக்கும் போது, அப்பகுதியில் அழற்சி ஏற்படும். இந்நிலையை பாக்டீரியல் வஜினோஸிஸ் என்று அழைப்பர். இப்பிரச்சனை இருந்தால், பிறப்புறுப்பில் இருந்து வெளிவரும் திரவம் வெள்ளை, மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தில், துர்நாற்றத்துடன் இருக்கும்.

பால்வினை நோய்கள்

பால்வினை நோய்கள்

மேக வெட்டை நோய், ட்ரைக்கொமோனஸ் மற்றும் கிளமீடியா போன்றவை இருந்தாலும், வெள்ளைப்படுதல் அளவுக்கு அதிகமாக இருக்கும். இந்த தருணத்தில் யோனியில் இருந்து வெளியேறும் திரவம் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் இருக்கும். மேலும் சிறுநீர் கழிக்கும் போது வலியையும் உணரக்கூடும்.

சோப்புக்கள்

சோப்புக்கள்

நறுமணமிக்க சோப்புக்கள், டிடர்ஜென்ட் பவுடர் போன்றவையும் அசாதாரண யோனி வெளியேற்றத்திற்கு காரணமாகும். ஏனெனில் இந்த பொருட்களில் உள்ள கெமிக்கல்கள், பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாக்களை பாதித்து, அரிப்பு, எரிச்சல் போன்றவற்றுடன், அதிகப்படியான அளவில் வெள்ளைப்படுதல் ஏற்படவும் வழிவகுக்கும்.

கருப்பை வாய் அழற்சி

கருப்பை வாய் அழற்சி

கருப்பை வாய் அழற்சி இருக்கும் பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருப்பதோடு, இரத்தப்போக்கும் அதிகமாக இருக்கும். மேலும் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பின், அவர்களுக்கு வெள்ளைப்படுதல் மட்டுமின்றி, அத்துடன் இரத்தமும் கலந்து வெளியேறும். மேலும் மாதவிடாய் சுழற்சி மிகவும் வேகமாக நடைபெறும், உடல் எடை குறையும், முதுகு வலியை சந்திக்க நேரிடும் மற்றும் உடலுறவின் போது தாங்க முடியாத வலியை அனுபவிக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes Of Vaginal Discharge Every Woman Should Know About

These are the causes of abnormal vaginal discharge you should know about. Read on to know more...
Desktop Bottom Promotion