Latest Updates
-
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
ராஜ்மாவை ஒருடைம் இப்படி கிரேவி செய்யுங்க.. மட்டன் கிரேவியே தோத்துப் போயிடும்...
Rajma Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி, பூரி செய்வீர்களா? அவற்றிற்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? அதுவும் உருளைக்கிழங்கு, பட்டாணி, மீல் மேக்கர் போன்றவற்றைக் கொண்டு தான் மசாலா/கிரேவி செய்வீர்களா? சற்று வித்தியாசமான ருசியை சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ராஜ்மாவைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த ராஜ்மா கிரேவியை செய்தால் மட்டன் கிரேவி செய்தது போன்று வீடே மணக்கும் மற்றும் சுவையும் பிரமாதமாக இருக்கும்.

இந்த ராஜ்மா கிரேவி ரெசிபி குறித்து ஈரோடு அம்மாச்சி சமையல் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு ராஜ்மா கிரேவி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராஜ்மா கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்ப்ட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 10 பல்
* முந்திரி - 4
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* பெரிய வெங்காயம் - 1/2
கிரேவிக்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* பட்டை - 2 சிறிய துண்டு
* கல்பாசி - 1 துண்டு
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 2
* சோம்பு - 2 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 1/2 (நறுக்கியது)
* தக்காளி - 4 (நறுக்கியது)
* ராஜ்மா - 100 கிராம் (8 மணிநேரம் ஊற வைத்தது)
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - சிறிது
* அரைத்த விழுது
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ராஜ்மாவை நீரில் 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, முந்திரி, புதினா, கொத்தமல்லி,
பாதி பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பிரியாணி இலை, அன்னாசிப்பூ, பட்டை, கல்பாசி, கிராம்பு, ஏலக்காய்,
சோம்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய 1 1/2 வெங்காயத்தை சேர்த்து, வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்த ராஜ்மாவை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து ஒருமுறை கிளறி, அத்துடன் காஷ்மீரி
மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கிளறி, தேவையான
அளவு நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, பின் குக்கரை மூடி, 5-6
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, ராஜ்மாவை மசித்து விட்டால்,
சுவையான ராஜ்மா கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
