For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனப்பதட்டம் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் என ஆய்வு

By Hemalatha
|

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில், ஒரு ஆராய்ச்சி நடந்தது. இதில் 35 வயதிற்குட்பட்ட பெண்களே, ஆண்களை விட மனப்பதட்டத்திற்கு ஆளாகிறார்கள் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஆராய்ச்சி வளர்ந்த நாடுகளில் கணக்கெடுக்கப்பட்டது. ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த ஆய்வில் உள்ளடக்கம்.

பொதுவாக 30 வயதிற்குட்பட்ட பெண்கள் மிகுந்த பதட்டமான சூழ் நிலைகளுக்கு தள்ளப்படுவதாகவும், மன அழுத்தத்திற்கு பாதிக்கப்பட்ட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

Anxiety affects women more than men

அதேபோல், உடல் குறைபாடு, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இரு மடங்கு மனப்பதட்டம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக இதய நோய் உள்ளவர்களில் பத்தில் ஒருவருக்கு மனப் பதட்டம் இருப்பதாகவும், அதுவும் பெண்களின் சதவீதமே அதிகமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மல்டிபிள் ஸ்கெலரோஸிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கு மனப்பதட்டம் இருப்பதாக கூறுகின்றனர்.

மனப்பதட்டம் நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். இதனால் நிறைய தீவிரமான பிரச்சனைகளை கொண்டு சேர்க்கும். ஆகவே இவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆய்வாளர் ஒலிவியா ரேம்ஸ் கூறுகின்றார்.

இந்த எல்லா ஆய்வுகளையும் சேர்த்து பார்த்ததில் நோய்களால் பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு , ஏற்படும் மனப்பதட்டம், அவர்களுக்கு இன்னும் வாழ்க்கையில் பாரத்தைதான் தரும். வாழ்நாட்களின் எண்ணிக்கையை குறைக்கச் செய்யும் என்று கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியா, நியூஸ்லாந்து, தெருவோரம் இருக்கும் இளைஞர்கள், செக்ஸ் தொழிலாளர்கள் என இந்த ஆய்வு எல்லா விதமான மக்களையும் ஆய்வு செய்ததாக தெரிகிறது.

இதில் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களையும் தவிர்த்து, ஓரின சேர்க்கையாளர்கள், திரு நங்கைகள், செக்ஸ் தொழிலாளர்கள், ஆகியோர்களுக்கும் மனப் பதட்டம் அதிகமாகி வரும் சூழ் நிலை உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

English summary

Anxiety affects women more than men

Anxiety affects women more than men
Desktop Bottom Promotion