For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் இடது கைப்பழக்கம் உள்ளவரா? உங்களைப் பற்றி சில உடல் நல விஷயங்கள்!!

இடது மூளை, வலது மூளை ஆகியவை பொதுவான பண்புகளையும் உடல் அமைப்பையும் மனிதர்களுக்கு தரும். அதுபோல் இடது கைபழக்கம் இருப்பவரகளுக்கு வரும் சில உடல் பாதிப்புகளைப் பற்றி காண்போம்

|

ஒட்டு மொத்த மக்கள் தொகையில் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் 10 சதவீதம் இருக்கின்றனர். பில் கிளிண்டன் முதல் ஒபாமா வரை பலரும் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள்தான்.

8 things say about you if you are left handedness

இடது கை செயல்பட்டால் பொதுவாக அவர்களுக்கு வலது மூளை நன்றாக செயல்புரியும். அதுபோல இடது கைப்பழக்கம் இருப்பவர்களுக்கென்று சில உடல் பாதிப்புகள் பொதுவாக இருக்கின்றது. பல மருத்துவ ஆராய்ச்சியில் தெரியப்பட்ட விஷயங்கள் உங்களுக்காக இங்கே. தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன நல பாதிப்புகள் :

மன நல பாதிப்புகள் :

இடது கை பழக்கம் இருப்பவர்களுக்கு மன அழுத்தம், மன நிலை கோளாறு வருகிறது. ஒரு ஆராய்ச்சியில் மூளைக் கோளாறினால் பாதிக்கப்படவ்ரகள் 40 % பேர் இடது கைப்பழக்கம் இருப்பவர்கள் என தெரிய வந்துள்ளது.

மார்பக புற்று நோய் :

மார்பக புற்று நோய் :

லண்டனில் 2007 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் இடது கை பழக்கம் இருக்கும் பெண்களுக்கு அதிகம் மார்பக புற்று நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

நீங்கள் இடது கை பழக்கம் இருப்பவரென்றால், உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்று நோய் இருந்ததென்றால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ஜீரண நோய்கள் :

ஜீரண நோய்கள் :

இடது கை பழக்கம் இருப்பாவர்களுக்கு ஜீரண மண்டலத்தில் கோளாறுகள் அதிகம் வர வாய்ப்புகள் இருக்கின்றன என 2001 ஆம் ஆண்டு நடந்த ஒரு பிரட்டன் ஆய்வு தெரிவிக்கின்றது.

மல்டிபிள் ஸ்கெலரோஸிஸ் :

மல்டிபிள் ஸ்கெலரோஸிஸ் :

இடது கை பழக்கம் இருக்கும் பெண்களுக்கு 60 % மல்டிபிள் ஸ்கெலரோஸிஸ் வரும் வாய்ப்புகள் உள்ளன என ஹார்வார்டு ஆய்வுகள் சொல்கின்றன.

 தூக்கமின்மை :

தூக்கமின்மை :

தூக்கமின்மையான இன்சோம்னியா போன்ற தூக்க வியாதிகள் இடது கைப் பழக்கம் இருப்பாவர்களுக்கு அதிகம் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.

கற்கும் திறன் :

கற்கும் திறன் :

பொதுவாக இடது கைப்பழக்கம் இருப்பவர்களுக்கு கற்கும் திறனும் குறைவாகத்தான் இருக்குமாம்.

சம்பாதிக்கும் திறன் :

சம்பாதிக்கும் திறன் :

வலது கைப்பழக்கம் இருப்பவர்களை விட இடது கைப்பழக்கம் இருப்பவர்களுக்கு 12 % சம்பாதிக்கும் ஆற்றல் குறைவாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

சமூக பழக்க வழக்கங்கள் :

சமூக பழக்க வழக்கங்கள் :

சமூகத்தில் இவர்கள் சகஜமாக கலக்க மாட்டார்கள். ஒதுங்கியே இருப்பார்கள். இரண்டு கைப்பழக்கம் இருப்பவர்கள் மிகவும் அமைதியாகவும் யாருடனும் பேசாமலும் இருப்பார்கள் என 2012 ஆம் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 things say about you if you are left handedness

8 things say about you if you are left handedness
Story first published: Thursday, December 15, 2016, 15:09 [IST]
Desktop Bottom Promotion