Latest Updates
-
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட்
உடம்பில் அமிலத் தன்மை அதிகம் உள்ளதை எப்படி தெரிந்துகொள்வது?
உங்கள் உடம்பு எவ்வளவு அமிலத் தன்மை கொண்டிருக்கிறது என்பதை எப்படி அறிவது என்ற கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கும்.
நம் உடல் திரவங்கள் இன்றியமையாதவை. இவை உடல் இயக்கத்தை சீராக வைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை செரிமானத்தை மேம்படுத்தவும், ஊட்டச் சத்துக்களையும் உயிர்க் காற்றையும் உடலெங்கும் எடுத்துச் செல்லவும் உதவுகின்றன.

உடல் திரவங்களில் பி எச் அளவு குறைவாக இருந்தால் அதில் ஆக்சிஜன் அளவு குறைவாகவும் அமில அளவு அதிகமாக இருப்பதைக் குறிக்கும். சாதாரணமாக பி எச் அளவு 7.௦ என இருப்பது சராசரி அளவாக கருதப்படுகிறது.
அமிலத்தன்மை மிகுந்த உடலானது இந்த பி எச் அளவு குறையும்போது வெளிப்படையானது தெரியும். பெரும்பாலான மக்கள் இந்த அமிலத் தன்மையை பற்றி அறிந்திருப்பதில்லை என்பதோடு பி எச் அளவையும் பரிசோதனை செய்வதில்லை. இதை பற்றி மேலும் அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1. உடல் எடை கூடுதல்
உங்கள் உடலில் காரத்தன்மை குறைவாக இருந்தால் உடலில் உள்ள கழிவுகள் தேங்கி அதிக கழிவுகள் சேராத தொடங்கும். இது உடலின் அமிலத்தன்மையை அதிகரித்து நச்சுக்களை நீக்கும் செயலில் உள்ள உறுப்புகள் அதிகம் செயல்பட நேரிடும்.
அதனால் அதிகபட்ச அமிலங்களை உடலில் இருந்து வெளியேற்ற இந்த உறுப்புகள் திணறும். அதனால் இந்த அமிலங்கள் கொழுப்புச் செல்களுடன் சேர்ந்து உடல் எடையைக் கூட்டும்.

2. பலவீனமான எலும்புகள்
உடம்பில் அதிக அமிலம் சேர்ந்திருப்பதால் வெளிப்படையான அறிகுறி பலவீனமான எலும்புகள். உடம்பு அதிக அமிலத் தன்மையுடன் இருந்தால் உடலை சுறுசுறுப்புடன் வைக்க முக்கிய தாதுப் பொருட்கள் உடல் திசுக்கள் மற்றும் உறுப்புகளில் இருந்து வீணாகும்.
இதனால் எலும்புகள் பலவீனமடைந்து எளிதில் உடையும் தன்மையுடன் மாறும். முக்கியமாக வீணாகும் தாது கால்சியம் என்பதால் எலும்புகள் பலவீனமடைகின்றன.

3. பற்கள் தொடர்பான குறைபாடுகள்
பற்களில் ஏற்படும் குறைபாடுகள் இந்த அமிலத்தன்மையின் ஒரு முக்கிய அறிகுறி. எலும்பைப் போலவே பற்களில் உள்ள கால்சியம் சத்தும் வீணாகி தாதுக் குறைப்பாடு ஏற்படுகிறது. இதனால் வாயில் அதிக நுண்ணுயிர்கள் உற்பத்தியாவதோடு பற்குழி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

4. சோர்வு
அமிலத் தன்மை உடலில் வைரஸ்,தோற்று மற்றும் பாக்டீரியா கிருமிகள் பெறுக இடமளிக்கும். இந்த நுண்ணுயிர்கள் வளர அமிலத்தன்மை காரணமாகிறது.
இதனால் உடல் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து உடலை சோர்வடையச் செய்கிறது. அமிலத் தன்மை கொண்ட உடம்பின் முக்கிய அறிகுறி இந்த சோர்வு.

5. சருமப் பிரச்சனைகள்
அமிலத் தன்மை உடலில் நச்சுக்களை சேர்த்து சருமத்திற்கு கேடு விளைவிக்கும். இது இரத்த ஓட்டத்தை பாதித்து சருமம் வேர்வை மூலம் நச்சுக்களை வெளியேற்றுவதைத் தடுக்கும். அதனால் பல சரும சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

6. கபம்
அமிலத் தன்மையின் மற்றுமொரு பக்க விளைவு கபம் சேருதல். மியூகஸ் எனப்படும் கபம் உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியில் தள்ளும்.
உடல் அமிலத் தன்மையோடு இருக்கும் பட்சத்தில் மூச்சுப் பாதை அடைபட்டு இந்த கபம் வெளியேற இயலாமல் உள்ளேயே அடைபடும். இதனால் மூச்சுக்கு கோளாறுகள், மார்பு வலி மற்றும் அது தொடர்பான குறைபாடுகள் ஏற்படலாம்.

7. தசை வலி
அதிக அமிலச் சேர்ப்பால் தசைகள் இறுகி உடல் ஆக்சிஜனை இரத்தக் குழாய்களுக்கு அனுப்ப இயலாமல் போகும். அமில உடலின் முக்கியமான அறிகுறி இதனால் ஏற்படும் தசைவலி. எனவே தசைகளுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் போவதால் மேலும் வலியும் வேதனையும் அதிகமாகும்.

8. தூக்கமின்மை :
சோர்வு, சக்தி இழப்பு மற்றும் களைப்பு ஆகியவை உடலில் பி எச் அளவுகள் குறைந்திருப்பதன் அறிகுறி. உடலில் கால்சியம் குறைபாடு இருப்பதால் இவை ஏற்படுகின்றன. இதனால் கடுமையான சோர்வு ஏற்படக்கூடும்.



Click it and Unblock the Notifications