Latest Updates
-
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
தினமும் காலையில் நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள்!!!
தண்ணீர் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது என்று அனைவருக்குமே தெரியும். மேலும் தண்ணீரை தினமும் அதிக அளவில் குடித்து வர வேண்டியது அவசியம் என்றும் தெரியும். ஏனெனில் உடலானது 80 சதவீத நீரால் ஆனது. மேலும் உடலில் சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை சுமந்து செல்வதற்கு தண்ணீர் தான் உதவுகிறது.
ஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!
அத்தகைய தண்ணீரை இன்னும் சிறப்பான வழியில் எப்படி குடிப்பது? நீருடன் தேனைக் கலந்து குடித்தால், இன்னும் ஏராளமான பலனைப் பெறலாம். ஏனெனில் தேனும் மருத்துவ குணம் நிறைந்த ஓர் மருத்துவ பொருள். அத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் இன்னும் மேம்பட்டு, நோய்களின்றி இருக்கும்.
உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும் அற்புத ஜூஸ்!
சரி, இப்போது தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்...

வாய்வு குறையும்
நீங்கள் வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபட இந்த தேன் கலந்த நீர் உதவும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள வாய்வு நடுநிலைப்படுத்தப்பட்டு, வயிற்று உப்புசம் குறைந்து, ரிலாக்ஸாக இருப்பதை உணர்வீர்கள்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்
தேனிற்கு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் சக்தி உள்ளது. அதிலும் அந்த தேனை தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

டாக்ஸின்கள் வெளியேறும்
வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து தினமும் குடிக்கும் போது, உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும். அதிலும் அந்நீருடன் சிறிது எலுமிச்சையை சேர்த்துக் கொண்டால், சிறுநீர் பெருக்கத்தினால், எளிமையாக டாக்ஸின்களை வெளியேற்றலாம்.

பொலிவான சுத்தமான சருமம்
தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, கழிவுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து, சுத்தமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவும். எனவே உங்களுக்கு நல்ல பொலிவான முகம் வேண்டுமானால், நீரில் தேன் கலந்து தினமும் குடித்து வாருங்கள்.

எடையைக் குறைக்கலாம்
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் இனிப்பு சுவைக்கு தேனை பயன்படுத்திக் கொள்ளலாம். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து குடித்து வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

தொண்டைப்புண்
குளிர் அல்லது மழைக்காலங்களில் வெதுவெதுப்பான நீரில் தினமும் காலையில் தேன் கலந்து குடித்து வந்தால், தொண்டையில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் புண்கள் குணமாக்கப்படும். மேலும் இக்கலவை சளி, இருமல், சுவாசக்கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியும் கூட.

சீரான இரத்த சர்க்கரை அளவு
உங்கள் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க நினைத்தால், வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வாருங்கள். மேலும் எந்த ஒரு இனிப்பு பொருட்களிலும் சர்க்கரையைத் தவிர்த்து, தேனைக் கலந்து எடுத்து வாருங்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்படுவதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.

இதய நோயைத் தடுக்கும்
தற்போது இதய நோயால் தான் நிறைய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த இதய நோய் தாக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வாருங்கள். இதனால் அவற்றில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோயின் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தரும்.



Click it and Unblock the Notifications
