Latest Updates
-
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது!
நீங்க சர்க்கரையை அதிகமா சாப்பிடும் போது உங்க உடம்புல என்ன நடக்குதுன்னு தெரியுமா?
பலருக்கும் சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி நம்மால் நம்ப முடியாத அளவிலான பிரச்சனைகளையும் சர்க்கரை ஏற்படுத்தும் என்றால் பாருங்கள். மேலும் சர்க்கரை ஒருவரை அதற்கு அடிமையாக்கும். ஒருவர் உணவில் சர்க்கரையை அதிகம் சேர்த்து பழகிவிட்டால், பின் அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்வது என்பது கஷ்டமாகிவிடும்.
எனவே உணவில் சேர்க்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டியது மட்டுமின்றி, முற்றிலும் தவிர்க்க வேண்டியதும் அவசியம். ஒருவேளை உங்களுக்கு இனிப்பான தின்பண்டம் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருளை உட்கொள்ளாமல், உலர் பழங்களான பேரிச்சம் பழம், உலர்த்த அத்திப்பழம், ஆப்ரிக்காட், உலர் திராட்சை போன்றவற்றை உட்கொண்டு, உங்களுக்கு இனிப்பின் மேல் உள்ள மோகத்தைத் தணித்துக் கொள்ளுங்கள்.
சரி, இப்போது ஒருவர் அளவுக்கு அதிகமான சர்க்கரையை உணவில் சேர்ப்பதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் குறித்து காண்போம்.

ஆற்றல் குறைவு மற்றும் சோர்வு
இனிப்பான பொருளை உட்கொண்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். ஆனால் அந்த ஆற்றல் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே தவிர, அதன் பின் மிகுந்த சோர்வு, களைப்பு, கவனச்சிதறல் போன்றவை ஏற்படும். எனவே உங்களுக்கு அதிக களைப்பு ஏற்பட்டாலோ, எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் போனாலோ, அதற்கு ஓர் காரணமாக நீங்கள் அதிகமான அளவில் சர்க்கரையை எடுத்து வருவதும் உள்ளது.

சர்க்கரைக்கு அடிமை
நீங்கள் தினமும் இனிப்புக்களை உட்கொண்டு வருபவராயின், சர்க்கரைக்கு அடிமையாகிவிட்டீர்கள் என்று அர்த்தம். ஒருவர் தினமும் இனிப்பு பலகாரங்களை உட்கொண்டு பழகிவிட்டால், பின் அதனைக் நிறுத்துவது கடினமாகிவிடும். எனவே முதலில் இப்பழக்கத்தைக் கைவிடுங்கள்.

அடிக்கடி நோய்வாய்ப்படுதல்
மற்றொரு அதிர்ச்சிகரமான ஓர் உண்மை, அதிகமான அளவில் சர்க்கரையை உணவில் சேர்த்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்து, அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும். முக்கியமாக பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடும். எனவே இதனைத் தவிர்க்க, சர்க்கரையை உணவில் சேர்ப்பதை முதலில் நிறுத்துங்கள்.

கவலை மற்றும் மன இறுக்கம்
அதிகமான சர்க்கரை உடலளவில் மட்டும் சோர்வடையச் செய்யாமல், மனநிலையையும் பாதிக்கும். என்ன தான் மன அழுத்தத்தில் இருக்கும் போது இனிப்பு பலகாரங்களை உட்கொண்டாலும், தற்காலிக நிவாரணம் கிடைக்குமே தவிர, பின் மீண்டும் மன அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும். எனவே உணவில் சர்க்கரையை அதிகம் சேர்த்துப் பழகாதீர்கள்.

கருவளையங்கள் மற்றும் சரும பிரச்சனைகள்
உணவில் அளவுக்கு அதிகமான சர்க்கரை இருந்தால், உடல் நலம் மட்டுமின்றி, சருமத்திலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். யார் ஒருவர் அளவுக்கு அதிகமாக சர்க்கரையை சேர்க்கிறார்களோ, அவர்களுக்கு எண்ணெய் பசை சருமம் மற்றும் முகப்பரு போன்றவை வரும். மேலும் இனிப்பு பொருட்கள் அட்ரினல் சுரப்பியில் அதிக அழுத்தத்தைக் கொடுத்து, கருவளையங்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உடல் பருமன்
நம் உடலானது ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரை உறிஞ்சும் அளவில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. எப்போது ஒருவரின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அந்த சர்க்கரை கலோரிகள் கொழுப்புக்களாக மாற்றப்பட்டு, அதன் காரணமாக உடல் பருமன் ஏற்படும்.

உயர் இரத்த அழுத்தம்
எப்படி உப்பை அதிகம் உட்கொண்டால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறதோ, அதேப்போல் சர்க்கரையை உட்கொண்டாலும் ஏற்படும். மேலும் ஆய்வுகளிலும் சர்க்கரைக்கும், உயர் இரத்த அழுத்தத்திற்கும் நிறைய தொடர்புள்ளது என்று தெரிய வந்துள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உப்பின் மீது மட்டும் பழியைப் போடாமல், அதற்கு மற்றொரு காரணமாக இருப்பது சர்க்கரை என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

பல் பிரச்சனைகள்
சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டு பழகினால், பற்களில் சொத்தை ஏற்பட்டு, பல்வேறு பல் மற்றும் ஈறு பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். எனவே சர்க்கரை கலந்த உணவுகள் உட்கொள்வதை உடனே நிறுத்துங்கள்.



Click it and Unblock the Notifications