Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சாத்துக்குடி ஜூஸ் குடித்து உடல் எடையை குறைப்பது எப்படி???
இன்றைய நிலையில் உடல் பருமன் தான் பெரும்பாலானவர்களின் பெரும் தலைவலியாக இருக்கிறது. உடற்பயிற்சி, தீவிரமான டயட் என பலவற்றை பின்பற்றியும் உடல் எடை குறையாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஆனால், தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகுவதால் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும் என பலருக்கும் தெரிவதில்லை. ஏனெனில், சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால், பசியை கட்டுப்படுத்த முடியும், இதில் இருக்கும் அமில சத்து கொழுப்பை விரைவாக கரைக்க உதவுகிறது.
இது போன்ற சாத்துக்குடி ஜூஸின் பயன்கள், உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது....

பசியை போக்கும்
சாத்துக்குடி ஜூஸில் இருக்கும் சிட்ரிக் அமிலம் பசியை கட்டுப்படுத்த உதவும். பசிக்கும் போது உணவு சாப்பிடுவதை தவிர்த்து சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால் சீரான முறையில் உடல் எடையை குறைக்க முடியும்.

கலோரிகள் குறைவு
சாத்துக்குடி ஜூஸில் கலோரிகள் குறைவு. இதனால் வீண் கொழுப்பு உடலில் ஏறாது. குறைவான கலோரிகளால் பசியையும் போக்குவதால் உடல் எடை அதிகமாகாமல் இருக்க பயனளிக்கிறது சாத்துக்குடி ஜூஸ்.

ஊட்டச்சத்து நிறைந்தது
உடல் சக்தியை அதிகரிப்பதுமின்றி. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது சாத்துக்குடி ஜூஸ். இதில், பொட்டாசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின் சி, புரதம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.

நச்சுக்களை அழிக்கும்
அமில தன்மை உள்ளதால், உடலில் உள்ள நச்சுக்களை அழிக்கும் தன்மையுடையதாக திகழ்கிறது சாத்துக்குடி ஜூஸ். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை அழித்து, உடல் பாகங்களின் செயலாற்றலை ஊக்குவிக்கிறது. கொழுப்பை கரைத்து, உடல் எடை குறைய பயனளிக்கிறது சாத்துக்குடி ஜூஸ்.

கொழுப்பின் அளவு
சாத்துக்குடி ஜூஸின் மிக முக்கியமான சிறப்பு என்னவெனில், இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.

எவ்வாறு பருகுவது
தினமும் காலை,சாத்துக்குடி ஜூஸுடன் தேனும், நீரும் கலந்து குடித்து வந்தால் உடல் எடையை விரைவில் குறைக்க முடியும் என்று கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications