நம்மை அறியாமல் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் அன்றாட செயல்கள்!!!

By Maha

வாழும் நாட்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியமாக நோயின்றி இருக்க வேண்டுமென்றால், அன்றாடம் உடலுக்கு வேண்டிய போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கச் செய்வதோடு, உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

ஆனால் தற்போதைய நவீன காலத்தில் எங்கும் ஜங்க் உணவுகள் ஆக்கிரமித்துள்ளதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும் அளவில் சக்தி இல்லாமல் உடல் பலவீமடைகிறது.

குறிவைத்து உங்கள் ஆயுளைக் குறைக்கும் கெட்டப் பழக்கங்கள்!!

அதுமட்டுமின்றி, இப்படி நம் உடல் பலவீனமடைவதற்கு, நாம் மேற்கொள்ளும் ஒருசில செயல்களும் காரணம். அது என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்றுவதை நிறுத்தினால், நிச்சயம் உடலைப் பாதுகாக்கலாம்.

மன அழுத்தத்தை அதிகரிக்கும் 10 கெட்ட பழக்கங்கள்!!!

சரி, இப்போது நம் உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் நம்மை அறியாமல் நாமே செய்யும் தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அளவுக்கு அதிகமான டிடர்ஜெண்ட்

அளவுக்கு அதிகமான டிடர்ஜெண்ட்

துணியில் உள்ள அழுக்குகளைப் போக்க பயன்படுத்தும் டிடர்ஜெண்ட், உங்களுக்கு தெரியாமலேயே மறைமுகமாக உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது தெரியுமா? ஆம், சில டிடர்ஜெண்ட்டுகள் துணியை சுத்தம் செய்வதாக பொய்த்தோற்றத்தை உருவாக்கும். இப்படி பொய்த்தோற்றத்தை உருவாக்கும் டிடர்ஜெண்ட்டுகளில் உள்ள நச்சுமிக்க கெமிக்கல்கள், ஆண்களுக்கு மலட்டுத்தன்மையையும், கடுமையான கண்கள், சருமத்தில் அலர்ஜியையும் ஏற்படுத்தும்.

நகங்களைக் கடிப்பது

நகங்களைக் கடிப்பது

சிலருக்கு நகங்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கும். உடலிலேயே நகங்களின் இடுக்குகளில் தான் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். அப்பேற்பட்ட நகங்களைக் கடிப்பதால், அங்குள்ள பாக்டீரியாக்கள் நகங்களைச் சுற்றி தொற்றுக்களை ஏற்படுத்துவதோடு, அந்த பாக்டீரியாக்கள் வாயின் மூலம் குடலை அடைந்து, அதனால் வயிற்றில் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

அதிகளவு ஆல்கஹால் குடிப்பது

அதிகளவு ஆல்கஹால் குடிப்பது

ஆல்கஹாலை அளவாக குடித்தால் நன்மையைப் பெறலாம். அதையே அளவுக்கு அதிகமாக குடித்தால், தீவிரமான பக்கவிளைவுகளான கல்லீரல், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் இதர பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அடிக்கடி ஆல்கஹால் குடிக்காமல் என்றாவது ஒருநாள் குடிக்கும் போது, ஒரே கல்ப் அடிப்பவராயின் அதனாலும், உடல் வேகமாக பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக இறப்பை சந்திக்கக்கூடும். ஏனெனில் ஆல்கஹால் ஏராளமான அளவில் டாக்ஸின்கள் உள்ளது. இதனை வேகமாக குடிக்கும் போது, இரத்தத்தில் டாக்ஸின்களின் அளவு ஒரே நேரத்தில் அதிகரிக்கும். இதன் காரணமாக குழப்பமான மனநிலை, மேலோட்டமாக சுவாசித்தல் மற்றும் இறப்பு அல்லது கோமாவிற்கு கூட செல்லக்கூடும்.

மன அழுத்தத்தில் இருப்பது

மன அழுத்தத்தில் இருப்பது

சிலருக்கு தாம் மன அழுத்தத்தில் இருப்பது தெரியாமல் இருக்கும். இப்படியே எந்நேரமும் மன அழுத்தத்தில் இருந்தால், உடலுறுப்புக்களின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டு பாதிக்கப்படக்கூடும். முக்கியமாக மன அழுத்தத்தினால் ஒருவர் நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வந்தால், அல்சைமர் நோய், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே உங்களுக்கு மனநிலையில் சரியில்லாதவாறு தோன்றினால், மனதை சந்தோஷமாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுங்கள்.

சோடா குடிப்பது

சோடா குடிப்பது

பெரும்பாலான மக்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கு சோடா பானங்களைக் குடிப்பார்கள். இப்படி தினமும் சோடா பானங்களை குடித்து வந்தால், அதனால் நீரிழிவு, ஞாபக மறதி மற்றும் உடல் பருமன் போன்ற பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும். சோடாக்களில் உள்ள காராமல் என்னம் நிறமூட்டி புற்றுநோய்களையும், பாஸ்பேட்டுகள் முதுமையை அதிகரிக்கும் மற்றும் சோடாவில் உள்ள BPA ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

குடிநீரில் குளோரின்

குடிநீரில் குளோரின்

குளோரின் கலந்த நீரைக் குடிப்பதால் அல்லது குளிப்பதால், உங்கள் உடல் பாதிக்கப்படுகிறது என்று தெரியுமா? நீரில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதற்காகத் தான் குளோரின் சேர்க்கப்படுகிறது. ஆனால் அந்த குளோரின் கலந்த நீரைக் குடிப்பதால், வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிவிற்கு உள்ளாகி, நோயெதிர்ப்பு சக்தி குறைந்து, ஆஸ்துமா, நீரிழிவு மற்றம் ஆட்டிசம் போன்ற நோய்கள் தூண்டப்படுகிறது. எனவே கவனமாக இருங்கள்.

வை-பை

வை-பை

தற்போது வீடு, அலுவலகம் என்று எங்கும் வை-பை தொழில்நுட்பம் உள்ளது. என்ன தான் இது நமக்கு மிகவும் பயனுள்ள தொழில்நுட்பமாக இருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா? குறிப்பாக தூக்கமின்மை, குழந்தைகளின் வளர்ச்சியில் இடையூறு, செல்களின் வளர்ச்சியில் தடை, மூளையின் செயல்பாடு குறைவது, ஏன் மலட்டுத்தன்மையைக் கூட ஏற்படுத்தும். வை-பை வெறும் கோப்புகளை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் மட்டும் பயன்படுவதில்லை, அதில் உள்ள கதிர்வீச்சுக்கள் நமக்குத் தெரியாமல் உடலை அழிக்கவும் செய்கிறது.

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை உணவுகள்

மக்கள் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் சர்க்கரை கலக்கப்பட்டுள்ளது. இப்படி சர்க்கரை கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை அதிகளவு உட்கொண்டால், இதய நோய், ஆர்த்ரிடிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பை நோய்கள் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

லேப்டாப்

லேப்டாப்

எங்கு பார்த்தாலும் மொபைல் போனைப் போலவே லேப்டாப்பையும் வைத்து நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக லேப்டாப்பை மடியில் வைத்து எப்போதும் பயன்படுத்துவதால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமான காற்று, சரும பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, ஆண்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தியை குறைத்து, அதனால் சிலருக்கு மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. எனவே லேப்டாப்பைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். முக்கியமாக மடியில் வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion