பாய்களின் வகைகள் மற்றும் அவற்றின் மூலம் பெறும் உடல்நல நன்மைகள்!!

Posted By:
Subscribe to Boldsky

முதலிரவன்று மட்டும் மலர் படுக்கை அமைத்து அதில் மணமக்களை உடலுறவு கொள்ள வைத்தது என்பது வெறும் சம்பிரதாயமாக ஏற்படுத்தப்பட்டதல்ல. மலர் படுக்கையில் உறங்குவது ஆண்மையை அதிகரிக்குமாம். இதுமட்டுமல்ல, எந்தெந்த மாதிரி உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் எந்தெந்த பாய்கள் பயன்படுத்த வேண்டும் என்று "மருத்துவ திறவுகோல்" எனும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்றும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பாய் போட்டுப் படுத்தாலும் நோய் விட்டுப் போகும் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம் படுக்கைகள் பலவிதம் இருக்கின்றன, அவை என்னென்ன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் எனென்ன என்று இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலர்ப்படுக்கை

மலர்ப்படுக்கை

ஆண்களுக்கு ஏற்ற படுக்கை, மலர் படுகையை பயன்படுத்துவதால் ஆண்களுக்கு ஆண்மை அதிகரித்து, அந்த விளையாட்டில் நன்கு ஈடுப்பட முடியுமாம். இதனால் முதலிரவன்று மலர்களால் அலங்கரிக்க‍ப்பட்ட‍ப் படுக்கையில் தம்பதிகளை படுக்க வைக்கிறார்கள் என்று கூற்றும் இருக்கிறது.

இலவம் பஞ்சு படுக்கை

இலவம் பஞ்சு படுக்கை

இரத்தம் மற்றும் தாது பலம் குறைவாக இருப்பவர்கள் இலவம் பஞ்சு படுக்கையை பயன்படுத்த வேண்டும்.

இரத்தினக் கம்பளம்

இரத்தினக் கம்பளம்

நச்சுக்களால் ஏற்படும் நோய்கள் குணமாக இரத்தின கம்பள படுக்கை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஈச்சம் பாய்

ஈச்சம் பாய்

வாத நோய்களிலிருந்து குணமடைய, உடல் சூடு மற்றும் கபம் குறைய ஈச்சம் பாய் பயனளிக்கிறது.

கம்பளிப் படுக்கை

கம்பளிப் படுக்கை

கடும் குளிரால் ஏற்படும் காய்ச்சல், சளி ஏற்படாமல் இருக்க கம்பளிப் படுக்கை. குளிர் காய்ச்சல் இருப்பவர்கள் கூட கம்பளிப் படுக்கையை பயன்படுத்துவதால், இதன் மூலம் கிடைக்கும் இதமான சூட்டினால் சீக்கிரம் குணமடைய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

கோரைப் பாய்

கோரைப் பாய்

கோரைப் பாய், இது உடல் சூட்டை தணிக்கவும், காய்ச்சலில் இருந்து குணமடையவும், உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து நன்கு உறங்கவும் பயனளிக்கிறது.

தாழம்பாய்

தாழம்பாய்

வாந்தி ஏற்படும் உணர்வை சரி செய்யும், தலை சுற்றல் இருப்பவர்கள், மற்றும் பித்தம் அதிகம் உள்ளவர்கள் தாழம்பாய்யை பயன்படுத்துங்கள். இது நல்ல தீர்வை தரும்.

மூங்கில் பாய்

மூங்கில் பாய்

மூங்கில் பாயை பயன்படுத்துவதால், உடல் சூடு மற்றும் பித்தம் அதிகரிக்கும்.

பிரம்பு பாய்

பிரம்பு பாய்

சீதபேதியிலிருந்து முழவதுமாக குணமடையவும், செரிமானத்தை சீராக்கவும் பிரம்பு பாய் பயன் தரும் என்று கூறப்பட்டுள்ளது.

பேரீச்சம்பாய்

பேரீச்சம்பாய்

இரத்த‍ சோகையை குணப்படுத்தும் பேரீச்சம்பாய், உடலுக்கு அதிக உஷ்ணத்தை தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Types Of Mat And Its Health Benefits

Do you know about the types of mat and its health benefits? read here.