குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை இயற்கையான வழியில் அழிக்க உதவும் உணவுகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

குடலில் உள்ள ஒட்டுண்ணிகள் உங்கள் இரைப்பை குடலில் தொற்றுக்களை ஏற்படுத்தும். அவைகள் உடலில் பகுதியில் வேண்டுமானாலும் வாழும். ஆனால் குடல் சுவர்களை தான் அவை விரும்பும். அரை வேக்காட்டு இறைச்சி, மாசுபட்ட தண்ணீர் அல்லது கைகள் மற்றும் சருமம் உறிஞ்சுதல் போன்ற வழிகளில் இவை உடலுக்குள் புகுந்து விடும். மோசமான சுகாதாரமும் துப்புரவும் தான் குடல் சார்ந்த ஒட்டுண்ணிகள் உருவாகுவதற்கான காரணம்.

குடல் ஒட்டுண்ணிகளை இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கலாம். முதலாமானது நாடாப்புழுக்கள், ஊசிப்புழுக்கள், நாக்குப் பூச்சிகள் மற்றும் முதலுயிரி (ப்ரோடோசுவோ) போன்ற ஒட்டுண்ணி புழுக்கள் (ஹெல்மிந்த்ஸ்). மற்றொரு வகை மனித உடலில் பலவகையாக பெருக்கெடுத்து, தீவிர தொற்றுக்களை உருவாக்கும். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட குழந்தைகளும் பெரியர்வர்களும் இவ்வகையான தொற்றுக்களால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். எந்த ஒரு அறிகுறியையும் காட்டாமல் அவைகளால் வருடக்கணக்கில் வாழ முடியும்.

இருப்பினும் வயிற்று வலி, வயிற்று போக்கு, குமட்டல் அல்லது வாந்தி, வயிற்றுக் கடுப்பு, மலக்குடலில்சொறி அல்லது அரிப்பு, வயிறு வலி அல்லது மென்மையாதல், சோர்வு, உடல் எடை குறைவு, மற்றும் மலத்துடன் சேர்ந்து புழுக்கள் வெளியேறுதல் போன்றவைகள் இந்த பிரச்சனையால் ஏற்படும் அறிகுறிகளாகும். இந்த பிரச்னையை போக்க பல மருந்துகள் வந்து விட்டன. ஆனாலும் இவைகளை இயற்கையான வழிகளிலேயே போக்கி விடலாம். அது என்ன உணவுகள் என தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

பல மருத்துவ குணங்களை கொண்டுள்ள சக்தி வாய்ந்த மூலிகை தான் பூண்டு. உடலில் இருந்து ஒட்டுண்ணிகளை வெளியேற்ற இது குறிப்பாக பயன்படுகிறது. பூண்டை ஊறுகாய் போன்று பயன்படுத்தலாம் அல்லது உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதனை தினசரி அடிப்படையில் உண்ணுங்கள். குடல் ஒட்டுண்ணிகளுக்கு சிறந்த சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

வெங்காயம்

வெங்காயம்

இதிலுள்ள சல்ஃபர் பொருட்கள் ஒட்டுண்ணி எதிர்ப்பியாக செயல்படுகிறது. குடல் ஒட்டுண்ணிகளை போக்க வெங்காய ஜூஸ் சிறப்பாக செயல்படும்; குறிப்பாக நாடாப்புழுக்கள் மற்றும் நூல் புழுக்களை அழிக்க. 2 டீஸ்பூன் வெங்காய ஜூஸை தினமும் இரண்டு வேளை குடியுங்கள். இதனை 2 வாரங்களுக்கு தொடரவும். இது ஒட்டுண்ணிகள் கொன்று விடும். குடல் ஒட்டுண்ணிகள் சிகிச்சைக்கான சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

குடல் ஒட்டுண்ணிகளுக்கான சிகிச்சைகளில் ஒன்றாக விளங்குகிறது தேங்காய் எண்ணெய். தேங்காயில் பல வித ஊட்டச்சத்து பயன்களும் இயற்கையான சாச்சுரேட்டட் கொழுப்புகளும் அடங்கியுள்ளது. தேங்காய் எண்ணெயில் உள்ள இந்த கொழுப்புகள் நம் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை வெளியேற்றும். உங்கள் உடல் அமைப்பில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். இதனால் மேலும் பிற தொற்றுக்கள் உருவாகாமல் அது தடுக்கும். இந்த எண்ணெய்யை ஸ்மூத்தி மற்றும் பிற பானங்களில் சேர்த்து கொள்ளலாம். இதனை சமையலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் விதைகளில் உங்கள் செரிமான அமைப்பில் உள்ள ஒட்டுண்ணிகளின் மீது இயற்கையான எதிர்ப்பியாக செயல்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். குடல் ஒட்டுண்ணிகளை அவை குணமாக்கும். உடலில் இருந்து அவைகளை வெளியேற்ற இது உதவும். இந்த விதைகளில் உள்ள பொருட்களால் இந்த ஒட்டுண்ணிகள் செயல்படாமல் போகிறது. குடல் ஒட்டுண்ணிகளுக்கான சிறந்த சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும்.

பப்பாளி விதைகள்

பப்பாளி விதைகள்

குடல் ஒட்டுண்ணிகளை நீக்க பப்பாளி விதைகள் சிறந்து செயல்படுகிறது. இந்த விதையில் லேசான காரமான சுவை உள்ளது. இதனை அப்படியே பச்சையாக உண்ணலாம். அல்லது சாலட் மற்றும் பிற உணவுகளில் தூவியும் உண்ணலாம். குடல் ஒட்டுண்ணிகளுக்கான சிறந்த சிகிச்சைகளில் கண்டிப்பாக இதுவும் ஒன்று.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

இந்த பழத்தில் ப்ரோம்லைன் என்ற செரி நொதி உள்ளது. இது நாடாப்புழுக்கள் போன்ற ஒட்டுண்ணி தொற்றுக்களை நீக்க உதவும். அன்னாசிப்பழத்தை ஜூஸாக அல்லது அப்படியே கூட தினமும் உட்கொள்ளலாம். இது குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை வெளியேற்றி விடும்.

பாதாம்

பாதாம்

குடல் ஒட்டுண்ணி சிகிச்சைக்கு பாதாம்களையும் பயன்படுத்தலாம். பாதாமில் ஒட்டுண்ணி எதிர்ப்பி குணங்கள் உள்ளது. இது குடல் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் குடல் ஒட்டுண்ணி வளர்ச்சியையும் தடுக்கும். பாதாம்களில் உள்ள கொழுப்பமிலத்தின் உயரிய செறிவே இதற்கு காரணமாகும். தினமும் விடியற்காலையில் பாதாம் உண்ணுங்கள்.

கற்றாழை

கற்றாழை

இந்த மூலிகையிலும் பல உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இதில் உள்ள பேதி ஊக்கி குணங்கள் ஒட்டுண்ணிகளை உங்கள் உடலிலிருந்து வெளியேற்றும். இது பல வடிவங்களில் கிடைக்கும். அதில் மிகவும் புகழ் பெற்றதாக விளங்குவது ஜூஸ், ஜெல், பொடிகள் மற்றும் மாத்திரைகள். அதனை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். ஆனால் அதன் ஜூஸ் தான் மிகவும் சிறந்த பலனை அளிக்கும்.

மாதுளைப்பழம்

மாதுளைப்பழம்

மாதுளைப்பழ மரத்தில் உள்ள பட்டை வயிற்று போக்கு அல்லது வயிற்று கடுப்பிற்கு அடிக்கடி பயன்படுத்துவதுண்டு. துவர்ப்பி தன்மையை இது கொண்டுள்ளதால், குடல் ஒட்டுண்ணிகளை இது உடலில் இருந்து வெளியேற்றும். ஆனால் இதனை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ வல்லுனரை கலந்தாலோசிப்பது நல்லது. மாதுளைப்பழ ஜூஸில் ஒட்டுண்ணி எதிர்ப்பி குணம் இருப்பதால் அதனை பயன்படுத்தலாம்.

கற்பூரவள்ளி எண்ணெய்

கற்பூரவள்ளி எண்ணெய்

ஒட்டுண்ணிகள் சிகிச்சைக்கு இந்த எண்ணெயும் சிறந்து செயல்படும். ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த எண்ணெய்யை சில சொட்டுகள் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை தினமும் மூன்று முறை குடிக்கவும். இந்த கல்வியில் வைட்டமின் வேண்டுமானால் அதனுடன் கொஞ்சம் எலுமிச்சை ஜூஸையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கருப்பு வால்நட்

கருப்பு வால்நட்

இந்த மூலிகையில் உள்ள மலமிளக்கி குணம், உங்கள் உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகளை வெளியேற்றும். இந்த மூலிகையில் உள்ள பிற பொருட்கள் ஒட்டுண்ணிகளை கொல்லும். கர்ப்பிணி பெண்களும் நோயாளிகளும் கூட கருப்பு வால்நட்டை தவிர்க்க வேண்டும். உடல்நல வல்லுனரின் கவனத்துடனே இதனை பயன்படுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 11 Foods To Kill Intestinal Parasites Naturally

There are some foods to treat intestinal parasites. There are some best home remedies for intestinal parasites. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter