Latest Updates
-
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க
உடலில் கொழுப்பின் உண்மையான வேலை என்னவென்று தெரியுமா?
நிறைய மக்கள் கொலஸ்ட்ராலை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். ஆனால் கொலஸ்ட்ரால் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது என்பது தெரியுமா? கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL). மேலும் கொலஸ்ட்ரால் உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும். அது இல்லாவிட்டால், உடலியக்கம் சீராக இருக்காது.
கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்!!!
அதில் நல்ல கொலஸ்ட்ரால் இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் தமனிகளின் சுவர்களில் படிந்து, பல்வேறு இதய நோய்க்கு வழிவகுக்கும். உடலுக்கு வேண்டிய கொலஸ்ட்ரால் இரு வழிகளில் நமக்கு கிடைக்கிறது. அதில் உடல் தானாக உற்பத்தி செய்து கொள்ளும் மற்றும் உணவுப் பொருட்களில் இருந்து பெற்றுக் கொள்ளும்.
கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...
சரி, கொலஸ்ட்ராலின் பணி தான் என்ன? என்று கேட்கிறீர்களா? அதை தெரிந்து கொள்ள வேண்டுமெனில் தொடர்ந்து படியுங்கள்.

ஹார்மோன் உற்பத்தி
கொலஸ்ட்ரால் உடலில் ஹார்மோன் உற்பத்திக்கு பெரிதும் உதவி புரிகிறது. அதிலும் ஈஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டிரோன், புரோஜெஸ்டிரோன், அல்டோஸ்டெரோன் மற்றும் கார்டிசோன் போன்ற முக்கியமான ஹார்மோன்களை கொலஸ்ட்ரால் தான் உற்பத்தி செய்கிறது.

வைட்டமின் டி உற்பத்தி
எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு காரணமான வைட்டமின் டியை சூரியக் கதிர்கதிர்களிடமிருந்து உடல் உறிஞ்சுவதற்கு கொலஸ்ட்ரால் தான் பெரிதும் உதவியாக உள்ளது.

செரிமானம்
கல்லீரலில் சுரக்கப்படும் செரிமான திரவமான பித்த நீரை உருவாக்குவதற்கு கொலஸ்ட்ரால் பயன்படுத்தப்படுகிறது. இதனால் செரிமானம் தங்கு தடையின்றி ஆரோக்கியமாக நடைபெறும்.

உயிரணு மென்படலத்திற்கு ஆதரவு
கொலஸ்ட்ரால் உயிரணுக்களின் ஓர் கட்டமைப்பு கூறுகளாகும். கொலஸ்ட்ரால் தான் செல்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்குகிறது. எப்போது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ, செல்கள்/உயிரணுக்கள் பாதிக்கப்படும். இந்த மாற்றத்தினால் உடலுக்கு வேண்டிய ஆற்றல் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதனால் உடலின் சீரான செயல்பாடுகளான செரிமான மண்டலம் பாதிக்கப்படும்.

நோயெதிர்ப்பு மண்டலம்
நோயெதிர்ப்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு கொலஸ்ட்ரால் மிகவும் அத்தியாவசியமானது. நம் நோயெதிர்ப்பு செல்களானது தொற்றுகளை எதிர்த்துப் போராவும் மற்றும் போராட்டத்திற்குப் பின் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளவும் கொலஸ்ட்ராலை சார்ந்துள்ளது. அதுமட்டுமின்றி கெட்ட கொலஸ்ட்ராலானது நேரடியாக தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன இணைந்து, அதனை செயலிழக்கச் செய்து, உடலுறுப்புக்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் கெட்ட கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பவர்கள் தான் நோய்த்தொற்றுகளுக்கு அடிக்கடி உள்ளாவார்கள். உடலினுள் ஏதேனும் புதுப்பிக்க வேண்டிய வேலைகள் இருந்தால், உடலானது கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்து, அதனை பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி சரிசெய்யும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்
கொலஸ்ட்ரால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றும் செயலாற்றி, ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும்.

குறிப்பு
எனவே கொலஸ்ட்ராலை தவறாக எண்ண வேண்டாம். உடலுக்கு கொலஸ்ட்ராலும் மிகவும் அவசியம். எனவே கொலஸ்ட்ரால் உள்ள உணவை முற்றிலும் குறைத்துவிடாமல், எந்த ஒரு உணவையும் அளவாக சாப்பிட்டு, உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரித்து வாருங்கள்.



Click it and Unblock the Notifications
