Latest Updates
-
செஃப் தீனா பகிரும் செட்டிநாடு பேமஸ் உக்கரை ரெசிபி -
தமிழ்நாடு ஏன் 234 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி, ட்ரை பண்ணி பாருங்க! -
தேங்காய் சட்னி அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் -
செவ்வாய்-குருபகவான் உருவாக்கும் கேந்திர யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
எடையை குறைக்க உதவும் தினை அவல் கஞ்சி - எப்படி செய்றது-ன்னு பாத்து தினமும் குடிங்க! -
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு வெற்றி தேடிவருமாம் -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும்! -
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கணுமா? அப்ப அரிசி கழுவிய நீரை இப்படி யூஸ் பண்ணுங்க! -
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுது!
புகைப்பிடித்தால் சர்க்கரை நோய் விரைவில் வருமாம்- அதிர்ச்சி தகவல்!
புகைப்பிடிப்பது மிகவும் மோசமான மற்றும் உயிரையே பறிக்கக்கூடிய அளவிலான ஒரு கெட்ட பழக்கம். இப்பழக்கத்தினால் ஒவ்வொரு வருடமும் ஆறு மில்லியன் மக்கள் இறந்து வருகின்றனர்.
எத்தனை நாள் உயிரோட இருக்க போறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா?
உலக சுகாதார அமைப்பானது, புகைப்பிடிப்பதால் வருடத்திற்கு 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறப்பதாகவும், புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பவர்கள் 600,000 அதிகமாக இறப்பதாகவும் கூறுகின்றன.
சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா...
சாதாரணமாக புகைப்பிடித்தால் உடலில் உள்ள பெரும்பாலான பாகங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அதிலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் புகைப்பிடித்தால், நிலைமை இன்னும் மோசமாகும். மேலும் மருத்துவர்களும் நீரிழிவு நோயாளிகள் புகைப்பிடிப்பதைத் தவிர்க்குமாறு கூறுகின்றனர்.
புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்கள்!!!
ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் புகைப்பிடிக்கின்றனர். அதிலும் பொது இடம் என்று சிறிதும் பார்க்காமல், ஆண்களைப் போன்றே சாலையில் நின்று கொண்டு புகைக்கின்றனர். பெண்கள் இப்படி சிகரெட் பிடிப்பதால் தான், தற்போது பல பெண்கள் கருத்தரிக்கவே முடியாமல் தவிர்க்கின்றனர்.
ஆண்களே! புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட சில சூப்பர் டிப்ஸ்...

நிக்கோட்டின்
சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமாம். எனவே நீரிழிவு நோயாளிகள் சிகரெட்டி பிடித்தால், நீரிழிவு முற்றி, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் நரம்பு சேதம் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

புகையிலை நீரிழிவை அதிகரிக்குமா?
ஆம், புகையிலை உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, இன்சுலின் சுரப்பை தடுத்துவிடும். மேலும் ஆய்வுகளிலும், சிகரெட் பிடிக்காதவர்களை விட, சிகரெட் பிடிப்பவர்களுக்கு 3 மடங்கு அதிகமாக நீரிழிவு வரும் வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

புகைப்பிடிப்பது ஏன் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல?
நீரிழிவு நாள்பட்ட நோய் என்பதால், சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்து வர வேண்டும். இல்லாவிட்டால், அதுவே உயிரைப் பறிக்கும் பிரச்சனைகளான இதய நோய், சிறுநீரக நோய், நரம்பு நோய், கண் நோய் மற்றும் பாத நோய்ககளை ஏற்படுத்திவிடும். அதிலும் புகைப்பிடித்தால், இதனால் இன்னும் நிலைமை மோசமாகத் தான் செய்யும்.

இரத்த நாளங்கள் சேதமடையும்
நீரிழிவு நோயாளிகள் புகைப்பிடித்தால், அதனை வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, உள் காயங்கள் அதிகரித்து மற்றும் இரத்த நாளங்களின் உட்சுவர் சேதமடையும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் வேறு சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

நீரிழிவு நோயாளிகள் புகைப்பிடித்தால் எப்படி இதய நோய் வரும்?
பொதுவாக புகைப்பிடித்து 20% மக்கள் இதய நோயினால் தான் இறக்கின்றனர். அதிலும் நீரிழிவு இருந்து, புகைப்பிடித்தால், 3 மடங்கு அதிகமாக இதய நோய்க்கு உள்ளாகி இறக்க நேரிடும். ஏனெனில் புகைப்பிடிப்பதால் இரத்த நாளங்கள் சேதமடைந்து, அதனால் இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து, அதனால் இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, சில நேரங்களில் இரத்தம் உறைந்து, மாரடைப்பு ஏற்படும்.

குறிப்பு
புகைப்பிடிப்பதை நிறுத்துவது என்பது கடினமானது தான். ஆனால் முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை. இப்போது கூட எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. உடனே புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள். இதனால் சில நோய்களுடன், வாழ்நாளின் அளவை அதிகரித்து வாழலாம். இல்லாவிட்டால், விரைவில் மரணத்தை தழுவ நேரிடும்.

புகைப்பிடிப்பதை நிறுத்த சில டிப்ஸ்
* மருத்துவரிடம் பேசி, புகைப்பிடிப்பதை எப்படி நிறுத்துவது என்று ஒரு திட்டத்தை தீட்டிக் கொள்ளுங்கள். மேலும் நிகோடின் மாற்றீடு சிகிச்சை பற்றியும் கேளுங்கள்.
* நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் புகைப்பிடிப்பதை நிறுத்தும் விஷயத்தை சொல்லி, அவர்களை உங்களுக்கு உறுதுணையாக இருக்குமாறு உதவி கேளுங்கள்.

புகைப்பிடிப்பதை நிறுத்த சில டிப்ஸ்
* எப்போதும் பிஸியாக இருங்கள். போடித்தால், உடனே வாக்கிங் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
* புகைப்பிடிக்கும் இடங்களில் இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
* எலக்ட்ரானிக் சிகரெட் ஆரோக்கியமானது என்று எங்கும் நிரூபிக்கப்படவில்லை. எனவே சிகரெட் பிடிப்பதை நிறுத்த எலக்ட்ரானிக் சிரெட்டை மாற்றாக நினைக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications











