அடிக்கடி கொட்டாவி விட்டு வாய் வலிக்குதா? அதை நிறுத்த சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

நம் உடலில் ஏற்படும் இயற்கை நிகழ்வுகளில் ஒன்று தான் கொட்டாவி விடுவது. பொதுவாக கொட்டாவியானது பல காரணங்களால் வரக்கூடும். அதில் அளவுக்கு அதிகமாக சோர்வை உணர்ந்தாலோ அல்லது தூக்கம் வரும் வேளையிலோ தான் வரும். மேலும் இந்த கொட்டாவியானது நன்கு தூங்கி எழுந்தால் நின்றுவிடும்.

இருப்பினும் நிபுணர்கள் சிலர், கொட்டாவி வருதற்கான வேறு சில காரணங்களையும் கூறுகின்றனர். அதில் உடலுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருந்தால், அந்நேரம் கொட்டாவி வரும் என்று சொல்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் கொட்டாவி அதிக அளவில் வந்தால், வாய் வலிக்க ஆரம்பிக்கும். ஆகவே இந்த கொட்டாவியை நிறுத்த ஒருசில வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், கொட்டாவி அதிகம் வருவதைத் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனிமையில் இருப்பதை தவிர்த்திடுங்கள்

தனிமையில் இருப்பதை தவிர்த்திடுங்கள்

தனியாக இருந்தால், போர் அடிக்க ஆரம்பிக்கும். எந்த ஒரு வேலையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்த வண்ணம் இருந்தால், கொட்டாவி வரும். எனவே எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு, பிஸியாக இருங்கள். இதனால் கொட்டாவி வருவதைத் தவிர்க்கலாம்.

தண்ணீர் குடியுங்கள்

தண்ணீர் குடியுங்கள்

அளவுக்கு அதிகமான உடல் சோர்வும் கொட்டாவிக்கான காரணங்களுள் ஒன்று. அதனை தவிர்க்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் கொட்டாவியைத் தவிர்க்கலாம். எப்படியெனில் தண்ணீர் குடிப்பதால், உடல் புத்துணர்ச்சி அடைந்து, அதனால் கொட்டாவி வருவது தடுக்கப்படும்.

ஆழ்ந்த மூச்சு விடுங்கள்

ஆழ்ந்த மூச்சு விடுங்கள்

ஆக்ஸிஜன் உடலில் குறைவாக இருந்தாலும் கொட்டாவி வரும். எனவே இதனை நிறுத்த, அவ்வப்போது மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளி விடுங்கள். இதனால் கொட்டாவி நிற்கும். அதிலும் மூச்சை உள்ளிழுக்கும் போது, சிறிது நேரம் தாக்குபிடித்து, பின் வெளிவிடுங்கள். இப்படி விடுவதால் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் சீரான முறையில் செல்லும்.

மன அழுத்தத்தைக் குறைக்கவும்

மன அழுத்தத்தைக் குறைக்கவும்

அளவுக்கு அதிகமான வேலைப்பளு மற்றும் குறைவான துக்கம் இருந்தாலும், கொட்டாவி அதிகம் வரும். ஏனெனில் இந்த நிலையில் தான் மன அழுத்தம் அதிகமாகும். எனவே இவற்றை தவிர்க்க, போதிய நேரத்தில் தூங்கி எழுவதோடு, அவ்வப்போது உடற்பயிற்சியையும் செய்து வாருங்கள்.

கொட்டாவி விடுபவர்களைப் பார்க்காதீர்கள்

கொட்டாவி விடுபவர்களைப் பார்க்காதீர்கள்

அருகில் யாரேனும் கொட்டாவி விட்டால், அது அப்படியே அருகில் உள்ளோரையும், தொற்றிக் கொள்ளும். எனவே கொட்டாவி விடுபவரைப் பார்க்கவோ அல்லது அவர்களது அருகில் இருப்பதையும் தவிர்த்திடுங்கள்.

இதய நோய்கள்

இதய நோய்கள்

பல மருத்துவர்கள் இதயம் மற்றும் நுரையீரலில் பிரச்சனைகள் இருந்தால், அடிக்கடி கொட்டாவி வருவதாக கூறுகின்றனர். அதிலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் மற்றும் இதய நோயாளிகளுக்கு கொட்டாவி அதிகம் வரும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். எனவே எதற்கும் ஒருமுறை மருத்துவரை பரிசோதித்துப் பாருங்கள்.

இதற்காக அஞ்ச வேண்டாம். கொட்டாவி ஒரு இயற்கை நிகழ்வே. இதனால் பலரும் பல முக்கியமான நேரங்களில் கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டிருப்போம். ஆனால் மேற்கூறிய சில டிப்ஸ்களை பின்பற்றி வந்தால், அடிக்கடி கொட்டாவி வருவதைத் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Ways To Get Rid Of Yawning

Here are the ways to get rid of yawning. You have to try these tips to get rid of excessive yawning. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter