Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
"கொர்ர்... கொர்ர்ர்.." சத்தம் உயிரைப் பறிக்கும் - குறட்டை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்!!!
திருமணமான பெண்களின் உறக்கத்தை கெடுக்கும் மாபெரும் சக்தி "குறட்டைக்கு" இருக்கிறது. மன அழுத்தத்தினால் ஏற்படும் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்களை விட கணவர்மார்களின் குறட்டை சத்தத்தினால் தூக்கம் இன்றி தவிப்பவர்கள் தான் அதிகம்.
உங்க ஆரோக்கியத்தைப் பத்தி உங்க நாக்கு என்ன வாக்கு சொல்லுதுன்னு தெரியுமா!!!
பலரது வாழ்க்கையைக் கேலி, கிண்டல்களுக்கு உண்டாக்கும் இந்த பிரச்சனைப் பற்றிய தெளிவான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம் என்று கூறுகின்றனர் நரம்பியல் துறை வல்லுனர்கள். நாம் நினைப்பது போல குடிப்பழக்கம் இருப்பதனால் மட்டும் குறட்டை வருவதில்லை.
உங்களுக்கு 'அங்க' ரொம்ப அரிக்குதா? அதுக்கு இதெல்லாம் தான் காரணம்!
உங்கள் உடலில் ஏற்படும் உடல்நலக் குறைவின் எதிரொலியாக எழுவது தான் குறட்டை என்று நரம்பியல் துறை வல்லுனர்கள் ஓர் புதிய ஆராய்ச்சியில் கண்டுப்பிடித்துள்ளனர். இனி குறட்டை வர காரணமாக இருக்கும் உடல்நலப் பிரச்சனைகள் பற்றிக் காணலாம்...

வாதம்
அமெரிக்காவின் டேட்ராய்ட் எனும் பகுதியிலிருக்கும், ஹென்றி ஃபோர்ட் ஹெல்த் சிஸ்டம்ஸ் (Henry Health Ford Systems) எனும் குழுமம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் தமனி (arterial) சேதம் அடைவதனால் கடுமையான குறட்டை ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர். தமனி சேதம் அடைவதால் முடக்கு வாதம் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

உடல் பருமன்
உங்கள் உடல் எடை அளவிற்கு அதிகமாக அதிகரிக்கும் பட்சத்தில் இந்த குறட்டை தொல்லை ஏற்படுகிறது. உடல் பருமன் அதிகரிப்பதால், இதயப் பாதிப்புகளும், ஆண்மைக் குறைவு பாதிப்பும் ஏற்படும் அபாயம் இருகின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

புற்றுநோய்
அமெரிக்காவில் இருக்கும் விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மூச்சு திணறல் காரணமாக ஏற்படும் குறட்டை பிரச்சனையால் தமனி மற்றும் இரத்த நாளங்களில் புற்றுநோய் கட்டிகள் வளரும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

இரத்த அழுத்தம்
அதிகமான குறட்டை மூச்சுத் திணறலுக்கு காரணமாக இருகின்றது. 70% மூச்சுத் திணறல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்று மருத்துவார்கள் கூறுகின்றனர்.

உடலுறவில் பிரச்சனை ஏற்படும்
குறட்டைப் பிரச்சனை பெரும்பாலான இல்லற வாழ்க்கையைக் கெடுக்கிறது. முக்கியமாக உடலுறவின் மகிழ்ச்சியை பாதிக்கிறது என்று கூறப்படுகிறது.

மூளையை சோர்வடைய செய்கிறது
பெரும்பாலும் பகல் தூக்கம் தூங்குபவர்களுக்கு குறட்டைப் பிரச்சனை இருக்கும். இந்த குறட்டைப் பிரச்சனை மூளையை சோர்வடைய செய்வதை கூறப்படுகிறது. இதற்கு நல்ல மூச்சுப் பயிற்சி செய்வது அவசியம் (CPAP - Continuous Positive Airway Pressure).



Click it and Unblock the Notifications