Latest Updates
-
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்!
உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா!!!
நல்ல ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா என நீங்கள் என்ன செய்து வந்தாலும் உங்களது இரத்த பிரிவை சார்ந்து சில நோய் தொற்றின் தாக்கம் அதிகமாகும். இந்த இரத்த பிரிவினருக்கு தான் இந்த நோய் தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் இல்லை. நோய் தொற்று என்பது அவரவர் உடல்நலம் மற்றும் சுற்றுசூழலை பொறுத்தது.
சத்தா சாப்பிடுவதை விட ரத்தத்துக்கு ஏத்த மாதிரி சாப்பிடுவது ரொம்ப முக்கியம் ராசா!
ஆயினும், ஏ பிரிவு மற்றும் ஓ பிரிவு இரத்தம் உள்ள நபர்களுக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது எனில், அதில் ஓ பிரிவினரைவிட ஏ பிரிவினருக்கு அந்த பிரச்சனை அல்லது நோயின் தாக்கம் அதிகமாக ஏற்படும். இது எங்கிருந்து எப்படி மூளையை கசக்கி மருத்துவர்கள் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை.
காட்டுத்தீ போல இளைஞர்களை பாதித்து வரும் மாரடைப்பு!
இவ்வாறு உங்கள் உடலுக்கு ஏற்படும் உடல்நல கோளாறுகள் அல்லது சில நோய்களின் தாக்கம் உங்கள் இரத்த பிரிவை பொறுத்து எந்த அளவு உங்கள் உடல்நலத்தை பாதிக்கும் என நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் நீங்கள் உங்கள் உடல்நலன் மீது எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிந்துக் கொள்ளலாம். எல்லா ஓரு பொது அறிவு தானே... தெரிஞ்சுக்குங்க...

ஞாபக மறதி
ஏ.பி. இரத்த பிரிவு உள்ளவர்களுக்கு தான் ஞாபக மறதி கோளாறின் தாக்கம் அதிகமாக ஏற்படுகிறதாம்.

இரத்த கட்டி
ஏ.பி, இரத்த பிரிவினர்களுக்கு இரத்த கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்புகளும் மற்ற இரத்த பிரிவினர்களோடு ஓப்பிடுகையில் அதிகமாக இருக்கிறதாம்

வயிற்று புற்றுநோய்
ஏ.பி இரத்த பிரிவினர் கொஞ்சம் உஷாராக தான் இருக்க வேண்டும். வயிற்று புற்றுநோயின் தாக்கம் ஏற்படும் அபாயத்திலும் இவர்கள் தான் முன்னிலையில் இருகின்றனர். மற்றவர்களைவிட வயிற்று புற்றுநோய் தாக்கத்திற்கான வாய்ப்பு இவர்களுக்கு 26% அதிகமாக இருக்கிறதாம். பி மற்றும் ஓ பிரிவினர்களுக்கு 20% வாய்ப்புகள் இருப்பதாய் கூறப்படுகிறது.

அல்சர்
ஏ மற்றும் ஏ.பி இரத்த பிரிவினருக்கு அல்சர் சார்ந்த பிரச்சனைகளின் தாக்கம் அதிகமாய் பாதிப்பை உண்டாக்குமாம். வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும் அதே கிருமியின் தாக்கம் தான் இதற்கு காரணமாய் இருக்கிறது.

இதய நோய்கள்
ஓ இரத்த பிரிவினர் கொடுத்து வைத்தவர்கள் பெரும்பாலும் அனைவரும் பயப்படும் இதய பாதிப்புகள் இவர்களுக்கு குறைவாக தான் ஏற்படுகிறதாம். ஏ.பி மற்றும் பி பிரிவு இரத்தம் உடையவர்களுக்கு தன இதய நோய்களின் தாக்கம் அதிகமாய் இருப்பதாய் கூறப்படுகிறது.

கணைய புற்றுநோய்
ஓ இரத்த பிரிவினர்களுக்கு கணைய புற்றுநோய் பாதிப்பும் குறைவாக தான் இருக்கிறது. இவர்கள் மற்ற பிரிவினர்களை விட 37% குறைவாக தான் ஏற்படுகிறதாம். பெரும்பாலும் ஓ இரத்த பிரிவினர்களுக்கு நோய் தொற்றின் மூலம் ஏற்படும் தாக்கம் குறைவாக தான் இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
