மற்ற வகை மேகியை சாப்பிட போகிறீர்களா? ஒரு நிமிடம் இத படிச்சுட்டு போங்க…

By: Ashok CR
Subscribe to Boldsky

கடந்த சில நாட்களாக 2 நிமிட மேகி மசாலா நூடுல்ஸ் பற்றி தான் சூடான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. பூமியில் உள்ள அனைவரும் குவிந்து கிடைக்கும் மேகி நூடுல்ஸை என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதால் சந்திக்கும் சில ஆரோக்கிய குறைபாடுகள்!!!

ஆனால் மேகி ஓட்ஸ், மேகி ஆட்டா நூடுல்ஸ், கர்ரி அல்லது மசாலா நூடுல்ஸ் போன்ற பிற வகைகளை கொண்டு சமாளித்துக் கொள்ளலாம் என நீங்கள் நினைத்தால், எதற்கும் உஷாராக இருங்கள்! இதோ நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகமான சோடியம்

அதிகமான சோடியம்

ஒரு கப் நூடுல்ஸ் (90 மி.கி), 1090 மி.கி. அளவிலான சோடியத்தை அளிக்கிறது. அதாவது நமது அன்றாட சோடிய தேவையில் 50% இதுவே அளித்து விடுகிறது. அப்படியானால் உங்கள் மதிய உணவு, இரவு உணவுகள் மற்றும் நொறுத்துக் தீனிகளுக்கு வெறும் அரை ஸ்பூன் உப்பு மட்டுமே பயன்படுத்தியாக வேண்டும். மேலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

மிகுந்த கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்ஸ்

மிகுந்த கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்ஸ்

மேகியின் மூலப் பொருள் மைதா (தூய்மைப்படுத்திய மாவு). இது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் ஆகும். மேலும் அனைத்து வகை மேகியிலும் பூரித்த கொழுப்பு அதிகமாக உள்ளது. மேகி ஆட்டா நூடுல்ஸில் 84.25% ஆட்டாவும், மேகி ஓட்ஸ் நூடுல்ஸில் 78.4% பலதானிய மாவும் உள்ளது. இதில் 52% மட்டும் தான் ஓட்ஸ் மாவு. நீங்கள் உண்ணும் அனைத்து வகை மேகிகளிலும் இது போலவே தான் மூலபொருட்கள் உள்ளது.

ஊட்டச்சத்து, நார்சத்து மற்றும் புரதச்சத்தில் குறைபாடு

ஊட்டச்சத்து, நார்சத்து மற்றும் புரதச்சத்தில் குறைபாடு

நூடுல்ஸில் உள்ள உலர்ந்த காய்கறியினால் ஆரோக்கியம் கிடைக்கும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. நிஜத்தில் பார்க்கப்போனால், மேகியில் ஊட்டச்சத்தும் நார்ச்சத்தும் குறைந்த அளவிலேயே உள்ளது. அதே போல் புரதச்சத்தும் குறைந்த அளவிலேயே உள்ளது. நம்ப முடியவில்லையா? நூடுல்ஸின் பின் பக்கம் போட்டுள்ள ஊட்டச்சத்து விவரத்தை படித்து பாருங்கள். மேகியை தவிர வேறு நிறைய 2 நிமிட நொறுக்குத்தீனி உள்ளது.

சுலபமாக செரிப்பதில்லை

சுலபமாக செரிப்பதில்லை

மேகியில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் வளமையாக இருப்பதால், வயிறு கனமாக இருக்கும். இதனால் சுலபமாக அவை செரிமானம் ஆவதில்லை. தினமும் வயிற்று வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் தினமும் எவ்வளவு மேகி சாப்பிடுகிறீர்கள் என்பதை பாருங்கள்.

அதிகமான பதப்பொருட்கள்

அதிகமான பதப்பொருட்கள்

மேகியில் உள்ள பதப்பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதை நீங்கள் அறிவீர்களா? இதில் சோடியம் அதிகமாக உள்ளதால், உயர் ரத்த அழுத்தம், இதய கோளாறுகள் மற்றும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Planning To Eat Other Maggi Varieties? Wait A Minute…

If you feel that you can live on other varieties like Maggi oats, Maggi atta noodles, curry noodles or masala noodles, better beware. Here’s what you need to know.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter