ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் காலையில் செய்ய வேண்டியவைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்குமே நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆசை இருக்கும். அதற்காக உண்ணும் உணவில் இருந்து ஒவ்வொன்றிலும் அதிக கவனம் செலுத்துவார்கள். ஏனெனில் தற்போது நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், எப்போது எந்த நோய் தாக்கும் என்று தெரியாது.

அதுமட்டுமின்றி இன்றைய தலைமுறையினர் 30 வயது வரை ஆரோக்கியமாக நோயின்றி வாழ்வது என்பது கடினமாக உள்ளது. ஆகவே உடலில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, தினமும் காலையில் எழுந்ததும் ஒருசில விஷயங்களை தவறாமல் பின்பற்றி வர வேண்டும்.

இங்கு அப்படி தினமும் காலையில் தவறாமல் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று படித்து அவற்றை பின்பற்றி அன்றைய நாளில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயில் புல்லிங்

ஆயில் புல்லிங்

காலையில் எழுந்ததும் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 5 நிமிடம் கொப்பளித்து, பின் பற்களை துலக்க வேண்டும். இப்படி செய்வதால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, பற்கள் வெண்மையாகும், பார்வை தெளிவாகும், தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்படும் மற்றும் நல்ல புத்துணர்ச்சியை உணரக்கூடும்.

வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ்

வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, உடலின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக செயல்படும். முக்கியமாக இதனை குடித்தால், அசிடிட்டி பிரச்சனை இருந்தால் குணமாகும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

தினமும் காலையில் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்து வந்தால், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக சென்று, உடல் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

தியானம்

தியானம்

காலையில் குளித்து முடித்ததும், சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்து, மனதை ஒருமுகப்படுத்தி வந்தால், மனம் ரிலாக்ஸ் ஆகும்.

ஆரோக்கியமான காலை உணவு

ஆரோக்கியமான காலை உணவு

காலை வேளையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டு வருவது நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும். அதிலும் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் போன்றவை நிறைந்த உணவுகளை உட்கொண்டு வருவது மிகவும் நல்லது. அதுவும் இட்லி, ஓட்ஸ் போன்றவை இன்னும் நல்லது.

ப்ளான் செய்யுங்கள்

ப்ளான் செய்யுங்கள்

காலை உணவை உண்ட பின்னர், அன்றைய தினத்தில் செய்ய வேண்டியவைகள் என்னவென்று சிறிது நேரம் யோசிக்க வேண்டும். இதனால் தேவையில்லாமல் டென்சன் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Must Do Morning Habits

A few tweaks are enough to upgrade your morning routine to help you achieve a healthier, more energised and determined version of yourself... even before you head out to work.
Story first published: Thursday, April 23, 2015, 18:07 [IST]
Subscribe Newsletter