இரவு மிகவும் தாமதமாக உணவு உட்கொள்வதனால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்!!!

Posted By: John
Subscribe to Boldsky

உணவு உட்கொள்வது என்பது கூட ஓர் இலக்கணம் போல தான். அதைத் தவறி செய்யும் போது, நமது உடலில் பல விஷயங்கள் தவறாக நடக்கிறது. எப்படி உங்கள் பைக், கார்களை சரியான நேரத்திற்கு சர்வீஸ் செய்ய வேண்டுமோ. அதே போல உங்களது வயிற்றுக்கும் சரியான நேரத்தில் உணவளிக்க வேண்டும்.

உண்ணா நோம்பு இருப்பதற்குக் காரணம் கடவுள் நம்பிக்கை அல்ல, அது உங்கள் உடல் பாகத்திற்கு சிறிய இடைவேளை போன்றது. சிலர், உண்ணா நோம்பு இருக்கும் போது பால், பழங்கள் மட்டும் சாப்பிடுவார், சிலர் இது தான் விரதமா? என்று நக்கலாக கூறுவார்கள்.

ஆனால், வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் உடல் இயக்கத்தை சீராக பராமரிக்க இலகுவான உணவுகள் மட்டும் சாப்பிட்டு, உடல் பாகங்களுக்கு ஓய்வளிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் உங்கள் உடல்நலமும், ஆரோக்கியமும் நல்ல முறையில் இருக்கும்.

இனி, இரவு வேளைகளில் தாமதமாக உணவு சாப்பிடுவதனால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் பற்றிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறக்கம் கெடும்

உறக்கம் கெடும்

சிலர் நாள் முழுதும் சாப்பிடக் கூட நேரம் ஒதுக்காமல் வேலை செய்துவிட்டு, நள்ளிரவு கடும் பசி என்று நிறைய சாப்பிட்டுவிடுவார்கள். இதனால், உங்கள் வயிறு உப்புசம் அடைந்து உறக்கம் தான் கெடும். இரவு நேரங்களில் பொதுவாகவே கடின உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

உடல் பருமன்

உடல் பருமன்

இரவு மிகவும் தாமதமாக உணவு உட்கொள்வதால், உங்கள் உடல் பருமன் தான் அதிகரிக்கும். நாம் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவு கலோரிகள் கரைய வேலை செய்தல் அவசியம். ஆனால், நாம் இரவு தாமதமாக சாப்பிட்டுவிட்டு குப்புறப்படுத்து தூங்கிவிடுவோம். இதனால், உடல் எடை தான் அதிகரிக்கும்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

இரவு தாமதமாக சாப்பிடும் போதுக் கடினமான, காரமான, வாயு அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும்.

அமில எதிர்விளைவுகளில்

அமில எதிர்விளைவுகளில்

எப்போதும் நாம் சாப்பிட்ட உடனேயே தூங்குவது தவறான அணுகுமுறை ஆகும். சாப்பிட்ட பிறகு சிறிது நேரமாவது வேறு வேலைகள் செய்ய வேண்டியது அவசியம். இல்லையெனில் செரிமானம் ஆகும் போது ஏற்படும் அமில எதிர்விளைவுகள் காரணமாக வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இரவு தாமதமாக சாப்பிடக் கூடாது என்பதற்கு இதுதான் முக்கியக் காரணம்.

செரிமானக் கோளாறுகள்

செரிமானக் கோளாறுகள்

சிலருக்கு காலை வேளையில், காலைக்கடன் கழிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இரவு தாமதமாக சாப்பிடுவதும் கூட அதற்கு ஓர் காரணமாக இருக்கின்றது. எனவே, முடிந்த வரை இரவு வேளைகளில் தாமதமாக சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டால் பழங்கள், பால் போன்ற எளிய உணவுகளை உட்கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Late Night Dinner Has Side Effects For Hormones And Health

Having your dinner are late night will leads you to bad health and hormone problems. Read here for further info.