நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால் தான் நாம் வலிமையாக இருக்க முடியும். சிலருக்கு லேசான மழையில் நடந்து வந்தால் கூட சளி, காய்ச்சல் வந்துவிடும். சிலர் கொட்டும் மழையில் ஆட்டம் போட்டுக் கொண்டு வந்தாலும் ஒன்றுமே ஆகாது. இதற்கு காரணம் அவரவர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமை தான்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பானங்கள்!!!

இதற்கு நீங்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும், சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒன்றும் தேவை இல்லை. ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலே போதுமானது. அதிலும் முக்கியமாக எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் அவசியம் என தேவை அறிந்து உட்கொள்ள வேண்டும்....

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க சில அற்புதமான வழிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரதம்

புரதம்

தசைகளை வலுவாக்க உதவும் ஊட்டச்சத்து புரதம். இது உடல் வலிமை அதிகரிக்க பயனளிக்கிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும் உதவுகிறது. முட்டை, பால் உணவுகளில் புரதம் அதிகமாக கிடைக்கிறது.

ப்ரோ-பயோடிக்

ப்ரோ-பயோடிக்

தயிர் ஓர் சிறந்த ப்ரோ-பயோடிக் உணவு. இதிலிருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உடலில் உள்ள தீய பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. தீய பாக்டீரியாக்கள் அழியும் போது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தானாக வலுவாகிறது.

வைட்டமின் சி

வைட்டமின் சி

சிட்ரஸ் பழங்கள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பலங்களில் வைட்டமின் சி சத்து அதிகமாக கிடைக்கிறது. சளி, ஃப்ளூ காய்ச்சல் ஏற்படும் போது வைட்டமின் சியின் உதவி நிறைய தேவைப்படுகிறது. முக்கியமாக மழைக் காலங்களில் வைட்டமின் சி உணவுகள் தவறாமல் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின்

வைட்டமின்

சர்க்கரைவள்ளி கிழங்கு, கேரட், முட்டை போன்ற உணவுகளில் வைட்டமின் ஏ சத்து நிறைய கிடைக்கிறது. மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளின் வழியாக உடலுக்குள் பாக்டீரியா தாக்கம் எளிதாக அதிகரிக்கும். வைட்டமின் ஏ இந்த பகுதிகளை வலுவாக்க உதவுகிறது.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ

கீரை, பாதாம் போன்ற உணவுகளில் வைட்டமின் ஈ சத்து அதிகமாக இருக்கிறது. உடலில் வலுவிழந்து இருக்கும் செல்கள் புத்துணர்ச்சி அடைய வைட்டமின் ஈ உதவுகிறது. செல்களின் வலிமையை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது வைட்டமின் ஈ உணவுகள்.

வைட்டமின் டி

வைட்டமின் டி

வைட்டமின் டி சத்து உடலில் குறைய ஆரம்பித்தால், சுவாசப் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்சனை வராமல் இருக்க நீங்கள் சூரியனுக்கு வணக்கம் கூறினால் போதும். ஆம், அதிகாலை சூரிய ஒளி நமது உடலில் பட்டாலே போதும். இதன் மூலமாக நமது உடலுக்கு நிறைய வைட்டமின் டி சத்து கிடைக்கிறது. மேலும், பால் மற்றும் தானிய உணவுகளிலும் வைட்டமின் டி சத்து கிடைக்கிறது.

ஜிங்க் - துத்தநாக சத்து

ஜிங்க் - துத்தநாக சத்து

கடல் உணவுகள், சிக்கன், சுண்டல் போன்ற உணவுகளில் ஜிங்க் (Zinc) சத்து நிறைய இருக்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள ஜிங்க் சத்து உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Immune Boosting Nutrient Based Foods

Do you know about the Immune Boosting Nutrient Based Foods? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter