Latest Updates
-
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...! -
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கரும்புள்ளிகளை சாதாரணமா நினைக்காதீங்க.. அது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
பாபா வாங்காவின் தலைசுற்ற வைக்கும் உலக அழிவு பற்றிய கணிப்பு..எந்த வருடத்தில் உலகம் அழியப்போகுதாம் தெரியுமா? -
சுக்கிர பெயர்ச்சி: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகியுள்ள ராஜயோகம்..இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம்...! -
வெந்தய கஞ்சியும்.. கறிவேப்பிலை துவையலும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
நுகரும் திறனை வைத்து உங்கள் வாழ்நாளை எப்படி கணக்கிடுவது என உங்களுக்கு தெரியுமா??
உலகில் அனைத்து உயிரினங்களுக்கும் பிறக்கும் போதே அதன் இறப்பும் நிர்ணயம் செய்யப்பட்டுவிடுகிறது. இது, செடி, கொடிகளில் தொடங்கி, சிங்கம், புலி, மனிதர்கள் வரைக்கும் மாற்றம் ஏதும் இல்லாத ஒன்று. எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் கூட அவன் ஓர் நாள் இயற்கை மரணமாவது அடைந்து தான் ஆக வேண்டும் என்பது இயற்கையின் நியதி.
தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?
20 வருடங்களுக்கு முன்பு வரை புண்ணியம் என்று கருதப்பட்டு வந்த இயற்கை மரணங்கள் நிகழ்ந்து வந்தது. என்ன மாற்றம் நடந்ததோ, இன்று 99% நோய் காரணமாகவும், விபத்து காரணமாகவும் தான் மரணங்கள் நடக்கின்றன. நோய்களுக்கு மட்டும் தான் அறிகுறிகள் இருக்கிறது என நினைக்கிறீர்களா?
விந்தணுக்களால் பெண்களுக்குள் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள்!!!
இயற்கையாக ஒருவர் மரணமடைய போகிறார் என்பதை கூட சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம். ஒருசில பொருள்களின் நறுமணத்தை, வாசத்தை, உங்களால் நுகர முடியவில்லை எனில், நீங்கள் அதிக பட்சம் உங்களது கடைசி ஐந்து ஆண்டுகளை வாழ்ந்து வருகிறீர்கள் என அர்த்தம்.....
30 வயதிற்கு மேல் ஆண்கள் பின்பற்ற வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவைகள்!!!

முதல் எச்சரிக்கை
ஓர் மனிதன் அவனது கடைசி நாட்களில் வாழ்ந்து வருகிறான் என்பதற்கான முதல் எச்சரிக்கை, அவனது நுகரும் திறன் தான். எப்போது, ஒருவரது நுகரும் திறனில், குறைபாடு ஏற்படுகிறதோ, அவரது உடலில் ஏதோ மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது என்று அர்த்தம்.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆய்வு
நீண்ட நாட்களாக வயதான 3,000 நபர்களை வைத்து சிகாகோ பல்கலைகழகத்தினர் நடத்திய ஆய்வில். ஐந்து வகையான நறுமணங்களை அல்லது வாசத்தை நுகர முடியாது இருப்பவர்கள் அவர்களது கடைசி நாட்களில் வாழ்ந்து வருவதை கண்டறிந்தனர்.

57 - 85 வயது
சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்கள் அனைவரும் 57 - 85 வயது நிரம்பிய முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து வாசனைகள்
பொதினா, மீன், ஆரஞ்சு, ரோஸ் மற்றும் லெதர். இந்த ஐந்து பொருள்களின் நறுமணம் அல்லது வாசத்தை நுகர முடியவில்லை எனில், அவர்கள் அவர்களது கடைசி ஐந்து வருடங்களில் வாழ்ந்து வருகிறார்கள் என கண்டறிந்துவிடலாம்.

ஐந்து வருடங்கள்
ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் 3,005 நபர்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்விற்கு பதிலளித்த 430 நபர்கள் மரணமடைந்தனர். இது, சரியாக அவர்கள் பதிலளித்தது போலவே, அந்த ஐந்து பொருள்களின் நறுமணத்தை நுகரும் திறனுக்கு ஏற்பவும் இவர்களது மரணம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நுகரும் திறன்
இந்த ஐந்து பொருகளை,
சாதரணமாக நுகர்வது - 10% மரணம்
நுகர்வதில் கோளாறு - 19% மரணம்
நுகரவே முடியவில்லை - 39% மரணம்
இது அவரவர், வயது, பாலினம், போன்றவைக்கு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மரணத்தை குறித்த அறிகுறி அல்ல
இந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சியாளர்கள், " நுகரும் திறனில் குறைபாடு என்பது மரணத்திற்கான 100% அறிகுறி அல்ல, இது உங்கள் உடலுக்குள் ஏதோ மாற்றம் ஏற்படுவதையும், உடல்நலத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் குறைபாடுகளை எடுத்துக்காட்டும் அறிகுறி தான், இதை வைத்து, நீங்கள் உடனே விழித்துக்கொண்டு, உங்கள் உடல்நலம் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்." என கூறியிருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications











