Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
நம்மை அறியாமலேயே நாம் அன்றாடம் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!
நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் தான் காரணம். நாம் மேற்கொள்ளும் தவறான செயல்களின் மூலமே நமக்கு உடலில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக, நம் கண்களில் ஏதேனும் தூசி விழுந்துவிட்டால், உடனே நம் கண்களை கடுமையாக தேய்க்க ஆரம்பிப்போம். இப்படி கண்களை கடுமையாக தேய்ப்பதால் கண்களுக்கு தான் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். இதுப்போன்று நிறைய தவறுகளை நாம் அன்றாடம் செய்து வருகிறோம்.
வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!
இங்கு நாம் அன்றாடம் நம்மை அறியாமலேயே செய்யும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் படியான தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து இனிமேலாவது அவற்றைத் தவிர்த்திடுங்கள்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

கண்களைத் தேய்த்தல்
கண்களில் தூசி விழுந்துவிட்டது என்று கடுமையாகத் தேய்த்தால், கண்களில் அழுத்தம் அதிகரித்து, நரம்புகள் பாதிக்கப்படும், ஏன் சில நேரங்களில் விழித்திரை கிழியவும் செய்யும். அதிலும் நீங்கள் கண்களுக்கு லென்ஸ் அணிந்திருப்பவராயின், இந்த மாதிரியான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், அது கண் பார்வைக்கே உலை வைத்துவிடும்.

சிறுநீரை அடக்குவது
சிறுநீர் வரும் போது அதனை அடக்காமல் வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் ஆண்குறியுடன் தொடர்புடைய குழாய்களில் அழுத்தம் அதிகம் ஏற்பட்டு, அதனால் அவைகளில் தொற்றுக்கள் ஏற்படும். எனவே சிறுநீர் வருவது போல் உணர்வு ஏற்பட்டால், சற்றும் யோசிக்காமல், அவற்றை வெளியேற்றிவிட வேண்டும்.

மூக்கை நோண்டுவது
குறிப்பாக இம்மாதிரியான செயல்களை ஆண்கள் தான் அதிகம் செய்வார்கள். பொது இடம் என்று கூட பார்க்காமல் சில ஆண்கள் இச்செயலை மேற்கொள்வார்கள். இப்படி எந்நேரமும் மூக்கை நோண்டினால், மூக்கில் காயங்கள் ஏற்பட்டு, தொற்றுகள் ஏற்படக்கூடும்.

வாயுவை அடக்குவது
வாய்வு வெளியேறுவது என்பது ஓர் இயற்கை நிகழ்வு. இதனை அடக்கினால், குடலில் அழுத்தம் அதிகரித்து, குடலில் சிறுசிறு காற்றுப்பைகள் உருவாக்கப்பட்டு, அதன் காரணமாக கடுமையான வயிற்று வலி மற்றும் அடி வயிற்று வலியை உணரக்கூடும்.

பருக்களை உடைப்பது
ஆண்களுக்கு அழகைப் பராமரிப்பதற்கு அவ்வளவு நாட்டம் காட்டமாட்டர்கள். மேலும் தங்கள் முகத்தில் பருக்கள் ஏதேனும் வந்துவிட்டால், அதனை கைகளால் உடைத்துவிடுவார்கள். ஆனால் இப்படி செய்வதால், நிலைமை இன்னும் மோசமாகத் தான் செய்யும். எப்படியெனில் இப்படி செய்யும் போது பருக்களில் இருந்த சீழ் சருமத்தின் மற்ற பகுதிகளில் படிந்து, அதனால் பருக்கள் பரவ ஆரம்பிக்கும். எனவே முதலில் இப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

காலை உணவைத் தவிர்ப்பது
காலை உணவைத் தவிர்த்துவிட்டு அன்றைய நாளைத் தொடங்குவது என்பது, வண்டியில் பெட்ரோல் போடாமல் வண்டியை ஓட்ட நினைப்பது போன்றதாகும். காலை உணவை உண்ணாமல் இருந்தால், நாள் முழுவதும் சோம்பேறித்தனமாக இருக்கக்கூடும். மேலும் காலை உணவைத் தவிர்த்து வந்தால், சர்க்கரை நோய் மோசமாவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே அலுவலகத்திற்கு எவ்வளவு தாமதமானாலும், காலை உணவை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

மோசமான நிலையில் அமர்வது
நாள் முழுவதும் யாராலும் நேராக உட்கார முடியாது. இருப்பினும் உட்காரும் போது குனிந்த நிலையில் இருப்பதைத் தவிர்த்தால் தான், முதுகு வலி, கழுத்து வலி போன்றவை வராமல் இருக்கும். இல்லாவிட்டால், முதுகு, கழுத்து வலியுடன், உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவற்றிற்கு உள்ளாகக்கூடும்.

திடீரென்று மருந்து மாத்திரைகளை நிறுத்துவது
சிலர் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வருவார்கள். ஆனால் திடீரென்று அதனை நிறுத்திவிடுவார்கள். ஏன் என்று கேட்டால், நான் நன்றாக உள்ளேன் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி திடீரென்று மருத்துவர் சொல்லாமல் மருந்து மாத்திரைகளை நிறுத்தினால், உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் எந்த மருந்தை எடுப்பதாக இருந்தாலும் சரி, நிறுத்துவதாக இருந்தாலும் சரி, மருத்துவரின் அனுமதியின்றி செய்யக்கூடாது.



Click it and Unblock the Notifications