அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஐந்து உடல்நல குறிப்புகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உடலை பேணிக்காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை ஆகும். என்றோ ஒருநாள் மண் சாப்பிட போகும் உடல் என்பதற்காக, இன்றே இரையாக்கி விடலாம் என்பது போல தான் பலரும் அவர்களது உடலின் மீதும், நலத்தின் மீதும் அக்கறை இன்றி நடந்து வருகிறார்கள். இப்போது அதிகாரித்து வரும் உடல்நல கோளாறுகளுக்கு முக்கிய காரணம் நமது வேலை முறை மாற்றங்கள் தான்.

முன்பு விவசாயம் செய்துக் கொண்டிருந்த போது, வேர்க்க விறுவிறுக்க வேலை செய்து வந்தோம், வியர்வையில் குளித்து வந்தோம், ஆதலால் உடல்நலன் நன்றாக இருந்தது. இப்போது, வெளிவரும் ஓரிரு வியர்வை துளிகளை கூட ஏ.சி வேலைகள் தடுத்துவிடுகின்றன. உட்கார்ந்தே வேலை செய்வதால் கொழுப்பு அதிகரித்து வருகிறது.

உங்கள் உடல்நலம் நன்றாக இருக்க இந்த ஐந்து விஷயங்களை மட்டும் தவறாமல் கடைபிடித்தால் போதுமானது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை உணவு

காலை உணவு

காலை உணவு ஒவ்வொருவரின் உடல்நலனுக்கும் முக்கியமான ஒன்று. இரவு நீண்ட இடைவேளைக்கு பிறகு நீங்கள் காலை உணவையும் தவிர்ப்பது தவறானது. மற்றும் காலை வேளையில் கொழுப்பு குறைவான உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். இட்லி, வேகவைத்த தானியம், காய்கறிகள், கொழுப்பு நீக்கப்பட்ட பால் போன்றவை சிறந்த காலை உணவுகள் ஆகும்.

உணவு முறை

உணவு முறை

உடல் எடை என்பது மிகவும் அபாயமான ஒன்றாக உருவாகி வருகிறது. உட்கார்ந்தே வேலை செய்வது உடலை சோர்வடைய வைப்பது மட்டுமின்றி, வலுவிழக்கவும் செய்கிறது. நீங்கள் மூன்று வேலையும் அதிகப்படியான உணவை உட்கொள்வதற்கு பதிலாக, ஆறு வேளையாக பிரித்து கொஞ்சம், கொஞ்சமாக உட்கொள்ளலாம். இல்லையேல் இடைவேளை நேரங்களில் ஊட்டச்சத்து உணவுகளான நட்ஸ், பழங்கள் போன்றவற்றை சிறுதீனியாக சாப்பிடலாம்.

தானியம், காய்கறி, பழங்கள்

தானியம், காய்கறி, பழங்கள்

தானியம், காய்கறி, பழங்கள் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த வகை உணவுகள் உங்கள் உடல் சக்தியை அதிகரிக்க பெருமளவு உதவுகிறது.

உடற்பயிற்சி பின்பற்றுதல்

உடற்பயிற்சி பின்பற்றுதல்

உடற்பயிற்சி செய்ய நீங்கள் தலை தெறிக்க ஓட வேண்டும், ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. குறைந்த பட்சம் வாக்கிங், அதிகபட்சம் ஜாகிங்க் இதுவே சிறந்த உடற்பயிற்சி. அலுவலகத்தில் லிப்ட்டை பயன்படுத்தாமல், படிக்கட்டுகளை பயன்படுத்துவது இன்னமும் உத்தமம். இது கொழுப்பு சேராமல் தவிர்க்க முடியும். இருக்கையில் மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்ய வேண்டாம். ஒருமணி நேரத்தில் ஒருமுறையாவது பத்து நிமிடம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர்

தண்ணீர்

உணவின்றி கூட ஓரிரு வாரங்கள் தாக்குப்பிடிக்க முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் இரண்டு நாட்கள் கூட உங்களால் உயிர்வாழ முடியாது. நமது உடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ள உடலில் நீரின் அளவை சமநிலையில் பாதுகாக்க வேண்டும். உடலில் நீர்வறட்சி ஏற்படுவது உடல்நிலையை மிகவும் சோர்வாக உணர வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Important Health Tips Everyone Should Follow

Here we have discussed about the five important health tips everyone should follow, in tamil. take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter