"ரெட் புல்", "மான்ஸ்டர்" போன்ற எனர்ஜி ட்ரிங்க்ஸில் காளை மாட்டின் விந்தணு கலப்புள்ளதா?- அதிர்ச்சி!!

By: John
Subscribe to Boldsky

இன்றைய அதிவேகமான வாழ்வியல் முறையில் நாம் நமது அன்றாட வாழ்க்கை முறையிலேயே அக்கறை எடுத்துக்கொள்ள தவறிவிடுகிறோம். சாப்பிடக் கூட நேரமின்றி கணினியின் முன்னே அமர்ந்து ஆன்-லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் முறை பலதரப்பட்ட மக்களிடையே பரவி வருகிறது.

ப்ளீஸ்... பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி குடிக்காதீங்க!!!

இதில், நாம் சாப்பிடும் உணவுகளில், பானங்களில் என்னென்ன கலப்படம் செய்யப்பட்டுள்ளது, அதில் என்ன சத்து இருக்கிறது, அது நமது உடலுக்கு நன்மை விளைவிக்குமா, தீமை விளைவிக்குமா என்ற ஆராய்ச்சி செய்வதற்கு எல்லாம் நமக்கு நேரமில்லை.

மற்ற வகை மேகியை சாப்பிட போகிறீர்களா? ஒரு நிமிடம் இத படிச்சுட்டு போங்க...

கடந்த சில வாரங்களாக அனைவரும் விரும்பி உண்ணும் "மேகி" உணவு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று உத்தரப்பிரதேசம், கேரளா போன்ற மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் மேகிக்கு தடைவிதித்துள்ளன. இந்த நேரத்தில் புதியதாய் ஓர் பூதம் கிளம்பியுள்ளது அது தான், "ரெட் புல்", "மான்ஸ்டர்" போன்ற எனர்ஜி ட்ரிங்க்ஸில் காளை மாட்டின் விந்து கலந்துள்ளதா? என்ற செய்தி.....

ஆர்.ஓ குடிநீர் குடிப்பது பொது மக்களின் உடல்நலத்துக்கு தீங்கானதா? - அதிர்ச்சி ரிப்போர்ட்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லாங்ஹார்ன் கால்நடை நிறுவனம்

லாங்ஹார்ன் கால்நடை நிறுவனம்

லாங்ஹார்ன் கால்நடை நிறுவனம் (Longhorn Cattle Company) நடத்திய ஓர் ஆராய்ச்சியில் பிரபல எனர்ஜி ட்ரின்க் பானங்கள் எல்லாம் சோதனை செய்யப்பட்டது, அப்போது உலக அளவில் மிகவும் பிரபலமாகவும், அதிகமாகவும் விற்கப்படும் ரெட் புல், மான்ஸ்டர்.. போன்ற பல எனர்ஜி பானங்களில் காளை மாட்டின் விந்தணு கலப்படம் உள்ளதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

லத்தின் வார்த்தை

லத்தின் வார்த்தை "Taurine"

பல எனர்ஜி பானங்களில் லத்தின் வார்த்தை "Taurine" மூலப்பொருளாக சேர்க்கப்பட்டுள்ளது என்று அந்த ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. இந்த வார்த்தையின் பொருளானது, காளையின் கல்லீர, சிறுநீர், விந்தணு போன்றவற்றை குறிக்கிறது.

கலப்படம்

கலப்படம்

பிரபல எனர்ஜி பானங்களில் காளையின் விதைப்பைகளில் இருந்து எடுக்கப்படும் துணைப்பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக லாங்ஹார்ன் கால்நடை நிறுவனம் தங்களது ஆராய்ச்சியின் முடிவில் கூறியுள்ளனர்.

விக்கி தளத்திலும்

விக்கி தளத்திலும்

எனர்ஜி பானங்களில் காளை மாட்டின் விந்தணு கலப்புக் குறித்து பிரபல இணையமான விக்கி பதில்களும் (Wiki Answers), நம்பகமான பதில்களை கூறியுள்ளதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காட்டுதீப் போல பரவி வருகிறது

காட்டுதீப் போல பரவி வருகிறது

முகப்புத்தகம், ட்விட்டர் போன்ற சமூக இணையங்களில் காட்டுத்தீப் போல இந்த செய்தி பரவி வருகிறது. இதனால், ரெட் புல், மான்ஸ்டர் போன்ற பானங்களை விரும்பி பருகி வந்தவர்கள் இப்போது அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

"ரெட் புல்" பதில்

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த செய்தியைக் கண்டு ரெட் புல் நிறுவனம், " எங்கள் எனர்ஜி ட்ரின்க் பசையும் (Gluten), கோதுமை மற்றும் பால் பொருட்களின் கலப்படம் அற்றது. இது, முழுக்க ஒரு எனர்ஜி பானம் மட்டுமே என்று கூறியுள்ளது.

காளையின் விந்தணு குறித்த பதில்

காளையின் விந்தணு குறித்த பதில்

மேலும், காளையின் விந்தணு கலப்படம் குறித்து அவர்கள் கூறிய பதிலில், "எங்கள் எனர்ஜி பானத்தில் எந்த ஒரு மிருகத்தின் உடல் ரீதியான மூலப்பொருள் கலப்பு இல்லை. அந்த ஆராய்ச்சி நிறுவனம் தவறுதலாக இந்த செய்தியை பரப்பியதால், சமூக வலைதளங்களில் இச்செய்தி பரவியுள்ளது என்றும் கூறியுள்ளனர்."

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Energy Drinks Contain Ingredient Extracted From Bull Sperm

Do You Know Energy Drinks Contain Ingredient Extracted From Bull Sperm? Read Here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter