மரிஜுவானா எனப்படும் கஞ்சாவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

"கஞ்சா.." என்று எங்காவது போது இடத்தில் கூறினாலே உங்களை சுற்றி இருபவர்களின் முகம் கண்டமேனிக்கு சுளியும். ஆம், போதை பழக்கத்திலேயே மிகவும் கொடியது மற்றும் இதற்கு அடிமையானால் சாவு நிச்சயம். அது மட்டுமின்றி இதைப் பயன்படுத்துவது சட்ட விரோத செயல்.

வெள்ளை பிரட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்!!!

ஆனால், இதிலும் மருத்துவ நற்குணங்கள் இருக்கின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கின்றது. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, அளவிற்கு குறைந்த நஞ்சும் அமிர்தமாக கருதப்படுடிறது மருத்துவ உலகில்.

எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் எடுப்பவரா நீங்கள்? அப்ப அவசியம் இத படிங்க...

இதில் இருக்கும் மருத்துவ குணங்கள், புற்றுநோய், எலும்பு சார்ந்த பிரச்சனைகள், நுரையீரல் வலுவடைய செய்வது என்று பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவல்லதாம் . சரி இனி, மரிஜுவானா எனப்படும் கஞ்சாவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அல்சைமர் (ஞாபக மறதி)

அல்சைமர் (ஞாபக மறதி)

ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் (Scripps Research Institute) சமீபதில் பிரசுரம் செய்ததில், ஞாபக மறதிக்கு மரிஜுவானா எனப்படும் கஞ்சா உதவுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இது ஞாபக மறதியைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைக்க உதவுகிறதாம்.

 கவலை

கவலை

ஹார்வார்ட் மருத்துவ பள்ளி, மரிஜுவானா எனப்படும் கஞ்சா கவலையை குறைக்க உதவுவதாய் கண்டுப்பிடித்துள்ளனர். நினைவில் இருக்கட்டும் அதிகமாக உட்கொள்ளுதல் கேடு விளைவிக்கும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

மூட்டு வலி

மூட்டு வலி

மரிஜுவானா எனப்படும் கஞ்சா, உங்கள் மூட்டு வலியைப் போக்கவும், மூட்டு வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுகிறதாம்.

புற்றுநோய்

புற்றுநோய்

புற்றுநோயை பரவ செய்யும் "Id-1" எனும் மரபணுவை செயலிழக்க மரிஜுவானா எனப்படும் கஞ்சா உதவுவதாக, புற்றுநோய் மூலக்கூறு ஆராய்ச்சி நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கால் கை வலிப்பு

கால் கை வலிப்பு

விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைகழகத்தின் ஓர் ஆய்வில், மரிஜுவானா எனப்படும் கஞ்சா கை கால் வலிப்பைத் தடுக்க பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கண் அழுத்த நோய்

கண் அழுத்த நோய்

கண்ணில் ஏற்படும் அழுத்தத்திற்கு மருந்தாய் கஞ்சாவை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில், இது கண்ணில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க வாய்புகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. கண் அழுத்த நோய் அதிகமானால் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு...

நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு...

அமெரிக்க மருத்துவ சங்கத்தின் ஆய்வில், நுரையீரலின் ஆரோக்கியத்திற்கும், நுரையீரலின் வலிமையை அதிகரிக்க செய்யவும் மரிஜுவானா எனப்படும் கஞ்சா உதவும் என்று கூறப்படுகிறது.

தண்டுவட வலி

தண்டுவட வலி

கனடாவின் மருத்துவ சங்கத்தினர் அவர்களது ஆய்வறிக்கையில், தண்டுவட வலியைக் குறைக்க மரிஜுவானா எனப்படும் கஞ்சா பயனளிக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eight Health Benefits of Marijuana

Do you know about the eight health benefits of marijuana? read here.