Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தக்காளி ஜூஸ்!!!
உங்களது ஆரோக்கிய நலனுக்கு எப்போதும் ஏற்ற பழரசமாக திகழ்வது தக்காளி ஜூஸ். இதில் வைட்டமின் ஏ மற்றம் சியின் சத்து மிகுதியாக இருக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இது பெரும் பங்கு வகிக்கிறது.
ஆய்வுகளில் புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்த தக்காளி ஜூஸ் பயன்படுவதாகக் கூறப்படுகிறது. தக்காளியில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கின்றது. இது, உங்கள் உடலை நோய் தொற்றுகளிடம் இருந்தும், உடல்நலக் குறைவுப் பிரச்சனைகளில் இருந்தும் காக்க உதவுகிறது.
சரி, இனி தக்காளி எந்த வகையில் அதிக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்று பார்க்கலாம்....

வைட்டமின் ஏ மற்றுன் சி
தக்காளியில் அதிகப்படியான வைட்டமின் ஏ மற்றும் சி சத்து இருக்கின்றது. எனவே, தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் பருகுவது உங்கள் உடலை நன்றாக வைத்துக் கொள்ள உதவும். தக்காளி ஜூஸை வடிகட்டாமல் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்
ஆய்வுகளில் தக்காளியில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

நச்சுகளை அழிக்கும்
தக்காளியில் இருக்கும் மூலப் பொருட்கள், உடலில் உள்ள நச்சு தன்மையுடைய கிருமிகளை அழிக்க உதவுகிறது. மற்றும் உடலை சுத்தம் செய்கிறது.

இதய நோய்களை குறைக்கும்
தக்காளியில் இருக்கும் வைட்டமின் பி6, ஃபோலேட் போன்றவை இதய நோய்களை 30% வரை குறைக்க உதவுகிறது.

புற்றுநோய்
தக்காளியில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், புற்றுநோயை உண்டாக்கும் நச்சுகளை தடுக்கவல்லது. மற்றும் இது முக்கியமாக மார்பக புற்றுநோயை எதிர்த்து போராட கூடியது.

நோய் தொற்று
தக்காளியில் இருக்கும் உயர்ரக ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி உங்கள் உடலை தாக்கும் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவும். இதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தக்காளி ஜூஸ் உதவுகிறது.



Click it and Unblock the Notifications
