Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-புதனின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
அட்டகாசமான சேலம் ஸ்டைல் கதம்ப சட்னி ரெசிபி -
செஃப் தீனா பகிரும் செட்டிநாடு பேமஸ் உக்கரை ரெசிபி -
தமிழ்நாடு 234 தொகுதிகள் இருப்பதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி, ட்ரை பண்ணி பாருங்க! -
தேங்காய் சட்னி அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் -
செவ்வாய்-குருபகவான் உருவாக்கும் கேந்திர யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
எடையை குறைக்க உதவும் தினை அவல் கஞ்சி - எப்படி செய்றது-ன்னு பாத்து தினமும் குடிங்க! -
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு வெற்றி தேடிவருமாம்
உணவின் மூலம் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் இருக்க அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!!!
நீங்கள் சாப்பிடும் உணவில் தொற்று அல்லது அசுத்தம் ஏற்பட காரணம் சாப்பிடத் தேர்ந்தெடுத்த இடம் மட்டுமே என நினைத்தால், அது முற்றிலும் தவறு! உணவுப் பாதுகாப்பு பற்றிய அடிப்படை விதிகள் உங்களுக்குத் தெரியாவிட்டால், வீட்டில் தயாரிக்கும் உணவும் கூட பாதுகாப்பானதாக இருப்பதில்லை.
அது எப்படியென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். இங்கு உணவில் எப்படி தொற்று ஏற்படுகிறது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

சுத்தமும், சுகாதாரமும்
உணவில் தொற்று ஏற்பட சாதாரணமாக சொல்லப்படும் காரணங்களில் ஒன்றாக இருப்பது முறையான சுத்தமும், சுகாதாரமும் போதுமான அளவு இல்லாமலிருப்பது தான். பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சியில் வைரஸ்கள் எளிதில் புகுந்து விடும் என்பதை நினைவில் கொண்டு, உங்களுடைய கைகளை உணவுப் பொருட்களைத் தொடும் முன்னரும், பின்னரும் நன்றாகக் கழுவுங்கள். அதுமட்டுமின்றி, காய்கறிகள் மற்றும் பழங்களை சமைப்பதற்கு முன் நன்கு கழுவுங்கள்.

உணவில் தொற்று ஏற்பட சாதாரணமாக நாம் செய்யும் தவறுகள்
* கழிவறைக்குச் சென்று வந்த பின்னரும், குப்பைத் தொட்டிகளைத் தொட்ட பின்னரும், தரையில் கிடப்பவற்றை எடுத்த பின்னரும் மற்றும் இறைச்சியை கைகளில் தொட்ட பின்னரும் கைகளை கழுவாமல் இருத்தல்.
* ஹெபடைட்டிஸ் ஏ போன்ற வைரஸ் காய்ச்சல் இருக்கும் போதும், தோலில் வெட்டு, தோல் தொற்றுகள் அல்லது தோலில் திறந்த நிலையில் சொறி இருக்கும் போதும் உணவுப் பொருட்களைக் கையாளுதல்
* தொற்று ஏற்பட்ட இடங்களைத் தொடுதல், கையுறையுடன் இருமுதல் மற்றும் உணவைக் கையாளும் போது கையுறை அணியாமல் இருத்தல்

உணவில் ஏற்படும் குறுக்கு தொற்றுகள்
வைரஸ் அல்லது பாக்டீரியாவானது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கோ, மனிதருக்கோ அல்லது வேறெங்குமோ பரவிச் செல்வது தான் குறுக்கு தொற்று (Cross Contamination) என்று அழைக்கப்படுகிறது. இறைச்சி வெட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பலகையில் பிற உணவுப் பொருட்களை வைத்து வெட்டும் போது பாக்டீரியாக்கள் பரவும். இந்த வகையான தொற்றுகள் உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளன. இவற்றை முறையாக கவனிக்காமல் விட்டால் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இந்த தொற்றுகளை தவிர்க்கக்கூடிய வழிமுறைகளத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தொற்றுகளை தவிர்க்க சில வழிமுறைகள்
* பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சி, மீன், கோழி அல்லது முட்டையை வெட்டுவதற்கு தனித்தனியான தட்டுகள், கத்திகள் மற்றும் வெட்டும் பலகைகளை பயன்படுத்துங்கள்.
* சமைக்காத உணவையும், சமைத்த உணவையும் தனித்தனியே வைத்திருங்கள்.
* வெட்டும் பலகைகளை சூடான தண்ணீர் மற்றும் கிருமிநாசினிகளைக் கொண்டு தொடர்ந்து கழுவிடுங்கள்.

உணவை முறையாக சமைக்காதிருத்தல்
உணவை சரியான வெப்பநிலையில் சமைப்பதன் மூலம் பாக்டீரியா மற்றும் இதர நுண்ணுயிரிகளின் தாக்குதலில் இருந்து உணவைப் பாதுகாத்திட முடியும். எனவே, உணவை சரியான வெப்பநிலையில் சமைத்து, தீங்கு தரும் பாக்டீரியாக்களைக் கொன்று தொற்றுகளால் பாதிக்கப்படுவதில் இருந்து தப்பி விடுங்கள். இது மட்டுமல்லாமல், எப்பொழுதும் உங்களுடைய உணவு சூடாக இருக்கும் போதே சாப்பிடுங்கள், மீதமாகும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்திடுவது நல்லது.

உணவை முறையாக சேமித்தல்
உணவை அறையின் வெப்பநிலையில் எடுத்து வைத்திருக்கும் போது, பெரும்பாலான பழங்கள், காய்கறிகள் மற்றும் சமைத்த உணவுகளிலும் கூட தொற்று ஏற்படும். இதன் காரணமாகத் தான் உணவை குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும், சைவம் மற்றும் அசைவ உணவுகளை தனித்தனியான பாத்திரங்களில் வைப்பதன் மூலம் அவை தொற்று ஏற்படுவதையும், கெட்டுப் போவதையும் தவிர்த்திட முடியும்.
எனினும், குளிர்பதனப் பெட்டியிலிருந்த உணவை எடுத்து சாப்பிடும் முன்னர் அதனை சற்று சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், குளிர்பதனப் பெட்டியில் இருந்து எடுத்த உணவை வெகு நேரத்திற்கு அறை வெப்பநிலையில் வைக்க வேண்டாம்.

குளிர்பதன பெட்டி சுத்தம்
உங்களுடைய உணவுகளை நீங்கள் குளிர்பதனப் பெட்டியில் வைப்பீர்களா? ஆம் என்று பதிலளித்தால் அடுத்த கேள்வி - உங்களுடைய குளிர்பதனப் பெட்டியை எவ்வளவு நாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்வீர்கள்? உணவை சரியான இடத்தில், சரியான வெப்பநிலையில் சேமித்து வைப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த இடத்தை சுத்தமாக வைத்திருப்பதும் அதே அளவு முக்கியமானது.

சமையலறை சுத்தம்
சமையலறையில் வேலைகளை முடித்த பின்னர் எப்பொழுதும் சுத்தம் செய்வதன் மூலம் எறும்புகள், கரப்பான் பூச்சிகள், பல்லிகள் மற்றும் எலிகள் போன்றவற்றால் ஏற்படும் தொற்றுகளைத் தவிர்த்திட முடியும். ஏனெனில், சுத்தம் செய்யப்படாத இடத்தில் தான் இந்த பூச்சிகளும், எலிகளும் வசிப்பிடத்தை ஏற்படுத்தி வாழும்.



Click it and Unblock the Notifications











