Latest Updates
-
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. இன்றைய சமுதாயத்தில் ஆண்களுக்கு உள்ள பொதுவான பிரச்சனை என்னவெனில் ஒன்று முடி கொட்டுவது, மற்றொன்று பாலியல் தொடர்பான பிரச்சனைகள். இதற்கு காரணம் தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் தான். அதுமட்டுமின்றி, அலுவலகத்தில் வேலை அதிகம் உள்ளதால், பல ஆண்கள் சரியான தூக்கத்தை மேற்கொள்வதில்லை.
ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு இந்த உணவுகள் கை கொடுக்கும்!
இதனால் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்காமல், உடலில் ஆற்றல் இல்லாமல் எந்த ஒரு வேலையையும் சுறுசுறுப்புடன் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஒருவேளை நம்மால் படுக்கையில் கூட நம்மால் சிறப்பாக செயல்பட முடியாமல் போகுமோ என்ற அச்சமும் எழுகிறது.
ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள்!!!
எனவே ஆண்களே கண்டதை நினைத்து மனதைக் குழப்பிக் கொள்ளாமல், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை மனதில் கொண்டு பின்பற்றி வந்தால், நிச்சயம், உங்களால் உங்கள் துணையை படுக்கையில் சந்தோஷப்படுத்தலாம்.
தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

எதிர்பார்ப்புக்கள் வேண்டாம்
படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட நினைத்தால், முதலில் பாலியல் எதிர்பார்ப்புக்களைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் எதிர்பார்ப்புக்களுடன் இருப்பது, உங்களின் செயல்திறனில் தேவையில்லாத அழுத்தத்தை உருவாக்கும்.

ஆணுறை
ஜர்னல் ஆஃப் செக்ஸ் மெடிசின் மேற்கொண்ட ஆய்வின் படி, ஆண்களுள் யார் ஆணுறையைப் பயன்படுத்தாதவர்களை விட, நன்கு உயவூட்டும் ஆணுறைகளைப் பயன்படுத்தியவர்கள் படுக்கையில் நீண்ட நேரம் நன்கு செயல்பட முடிந்தது தெரிய வந்தது.

முன் விளையாட்டுக்கள்
எடுத்த எடுப்பிலேயே உடலுறவில் ஈடுபடாமல், உணர்ச்சிகளைத் தூண்டும் முன் விளையாட்டுக்களை துணையுடன் விளையாடி, பின் களம் இறங்கினால், நீண்ட நேரம் உறவில் ஈடுபடலாம்.

அடிக்கடி உடலுறவு
படுக்கையில் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில், அடிக்கடி உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடுங்கள். இதனால் நாளடைவில் உங்களால் உங்கள் துணையை நீண்ட நேரம் சந்தோஷப்படுத்தலாம்.

சுய இன்பம்
உடலுறவில் ஈடுபடும் முன், சுய இன்பம் கண்டு, பின் களத்தில் குதியுங்கள். இதனாலும் உங்களால் நீண்ட நேரம் செயல்பட முடியும்.

இடுப்பு தசைகளை வலிமைப்படுத்தவும்
உடலுறவின் போது இடுப்புத் தசைகள் அதிகம் ஈடுபடும். எனவே உங்களின் இடுப்புத் தசைகளின் வலிமையை அதிகரித்தால், படுக்கையில் நீண்ட நேரம் செயல்படலாம்.

ஸ்குவாட்ஸ்
புதிதாக திருமணமானவர்கள், படுக்கையில் சிறப்பாக செயல்பட ஸ்குவாட்ஸ் செய்து வாருங்கள். அதிலும் எந்த ஒரு எடையையும் தூக்கி ஸ்குவாட்ஸ் செய்யாமல், உங்கள் உடலை நீங்களே தாங்கும் அளவிலான ஸ்வாட்ஸ் உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள். இதனால் உடலின் ஸ்டாமினா அதிகரிக்கும்.

பென்ச் பிரஸ்
பென்ச் பிரஸ்

கேகல் உடற்பயிற்சி
இடுப்புத் தசைகளை வலிமையடைச் செய்ய சிறந்த மற்றும் எளிமையான வழி கேகல் உடற்பயிற்சிகளை செய்வது. உங்கள் இடுப்புத் தசைகளை கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தால், நீண்ட நேரம் உடலுறவில் சிறப்பாக செயல்படலாம்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துங்கள்
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஓர் வழி தான் உடற்பயிற்சி. எனவே தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வாருங்கள். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடலின் ஸ்டாமினாவும் அதிகரிக்கும்.

ஆல்கஹாலை தவிர்த்திடுங்கள்
நீங்கள் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட நினைத்தால், முதலில் ஆல்கஹால் அருந்துவதை நிறுத்துங்கள்.

ஸ்ட்ரெட்ச்சிங்
தினமும் கால்கள் மற்றம் கைகளுக்கான ஸ்ட்ரெட்ச்சிங் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இதனால் உடலுறவின் போது அப்பகுதிகளில் பிடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

புரோட்டீன் எடுங்கள்
அன்றாடம் உண்ணும் உணவில் எடுத்துக் கொள்ளும் புரோட்டீன்களின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள். இதனால் உடலின் செயல்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கிடைக்கும். அதற்கு புரோட்டீன் நிறைந்த உணவுப் பொருட்களான முட்டையின் வெள்ளைக்கரு, கொழுப்பு குறைவான பால் மற்றும் பால் பொருட்கள், மீன் மற்றும் சிக்கனை முடிந்த அளவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உடல் எடை
உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக அல்லது அளவுக்கு குறைவான உடல் எடையுடன் இருந்தால், உடனே அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இதனால் உடலின் பாலியல் ஸ்டாமினா மேம்படும்.

சரிவிகித டயட்
பாலியல் ஸ்டாமினாவை அதிகரிக்க, வெறும் முன் விளையாட்டுக்களில் மட்டும் ஈடுபடாமல், சரிவிகித உணவுகளை உட்கொண்டு வந்தால் தான், உடல் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்கும். எனவே பழங்கள், காய்கறிகள், தோல் நீக்கப்பட்ட இறைச்சிகள், குறைந்த கொழுப்புள்ள உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொள்ளுங்கள்.

துணையின் கையால் மசாஜ்
அவ்வப்போது உங்கள் துணையின் கையால் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனால் உடல் அழுப்பு நீங்குவதோடு, உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, இருவருக்குள்ளும் உள்ள பிணைப்பு அதிகரிக்கும்.

நல்ல தூக்கம்
ஒருவருக்கு போதிய தூக்கம் இல்லாவிட்டால், உடலுறவில் நாட்டம் குறைந்துவிடும். எனவே படுக்கையில் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், அன்றாடம் போதிய அளவில் தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மன அழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள்
மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, பாலியல் நாட்டத்தையும் அழிக்கும். எனவே மன அழுத்தத்தில் இல்லாமல் இருக்க, அன்றாடம் தியானம், யோகா போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள்.



Click it and Unblock the Notifications