Latest Updates
-
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
பீட்ரூட் ஜூஸ் குடித்தால் தசைகளின் வலிமை அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்!
பீட்ரூட் சாப்பிட்டால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதற்கு காரணம் அதில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. ஆனால் அந்த பீட்ரூட் ஜூஸை குடித்தால், தசைகளின் வலிமை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!
குறிப்பாக இதய கோளாறு உள்ளவர்கள், இந்த ஜூஸைக் குடித்தால், தசைகளின் வலிமை அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வாஷிங்டன் பல்கலைக்கழகம்
வாஷிங்டன் பல்கலைக்கழகம் பள்ளியில் இணை பேராசிரியராக இருக்கும் மூத்த எழுத்தாளரான லிண்டா பீட்டர்சன் என்பவர் பீட்ரூட் ஜூஸ் குறித்து சிறு ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.

இரண்டு மணிநேரத்தில் நல்ல மாற்றம்
இந்த ஆராய்ச்சியில் இதய கோளாறு கொண்டவர்கள் பங்கு கொண்டனர். அவர்களுக்கு இந்த பீட்ரூட் ஜூஸ் கொடுக்கப்பட்டது. அதில் பீட்ரூட் ஜூஸை குடித்த இரண்டு மணிநேரத்தில் நினைக்கமுடியாத அளவில் தசைகளின் சக்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

நைட்ரேட்
பீட்ரூட் ஜூஸில் நைட்ரேட் அதிகமாக இருப்பது தான், தசைகளின் வலிமை அதிகரிப்பதற்கான காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பசலைக்கீரை
பீட்ரூட்டில் இருப்பது போன்றே பசலைக்கீரையிலும் நைட்ரேட் அதிகமாக உள்ளது. இந்த நைட்ரேட் உடலினுள் செல்லும் போது நைட்ரிக் ஆசிட்டாக மாறி, இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்கிறதாம்.

பக்கவிளைவு இல்லை
அதுமட்டுமின்றி, இந்த ஆராய்ச்சியில் பங்கு கொண்டோருக்கு பீட்ரூட் ஜூஸினால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படவில்லை. குறிப்பாக அவர்களின் இதயத் துடிப்பு அதிகரிக்கவோ அல்லது இரத்த அழுத்தம் குறையவோ இல்லை.



Click it and Unblock the Notifications
