பலரும் அறிந்திராத தைராய்டு பிரச்சனைகள் குறித்த உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் எனப்படும் என்டோக்ரைன் (Endocrine System) சுரப்பியிலேயே பெரிய சுரப்பி தைராய்டு தான். இது நமது கழுத்தின் கீழ் பகுதியில் உள்ளது. இதனுள் தைராக்ஸின் மற்றும் ட்ரியோடோதைரோனைன் எனப்படும் இரண்டு முக்கிய ஹார்மோன்கள் இருக்கின்றன. இதை மருத்துவ பெயரில் T3 & T4 என குறிப்பிடுகின்றனர்.

தைராய்டை சரிசெய்யும் 13 ஆரோக்கிய உணவுகள்!!!

இவைகளின் முக்கிய பணியே உடல் எடையை கட்டுப்படுத்துதல், உடலிற்கு தேவையான சக்தியை உபயோகப்படுத்துதல், நமது உறங்கும் தன்மைக்கு வழிசெய்தல், உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்துதல் போன்றவை ஆகும். தைராய்டு பிரச்சனை ஏற்படும் போது மேல் கூறியவற்றில் எல்லாம் கோளாறுகள் ஏற்பட வாய்புகள் இருக்கின்றன. இந்த கட்டுரையின் மூலமாக, இதுவரை நீங்கள் அறிந்திராத தைராய்டு பிரச்சனைகள் குறித்து தெரியப்படுத்தவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடை குறைதல்

உடல் எடை குறைதல்

உங்களுக்கு ஹைப்பர் தைராய்டு என்பதை அறிவுறுத்தும் அறிகுறிகளில் ஒன்று உடல் எடை குறைதல். பசியின்மை ஏற்படும் காரணத்தால் உடல் எடை குறைவு ஏற்படும். இதனால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். வியர்வை அதிகரிக்கும், படபடப்பு மற்றும் கை நடுக்கம் ஏற்படும்.

உடல் எடை அதிகரித்தல்

உடல் எடை அதிகரித்தல்

தைராய்டின் இன்னொரு பிரச்சனை உடல் எடை அதிகரித்தல். அதிலும் ஹைப்போ தைராய்டு உடல் எடையை அதிகரிக்க செய்யும். இது இரண்டு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வகையில் இதயத்துடிப்பை குறைய செய்கிறது, கைகளில் உணர்வின்மை அடைய செய்கிறது, உங்கள் கழுத்தை பெரிதாய் ஆக்குகிறது. மற்றும் பெண்களுக்கு மாதவிடாயை அதிகரிக்கவும் செய்யும்.

ஆன்டி-தைராய்டு

ஆன்டி-தைராய்டு

ஹைப்போ தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்த, மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கும் மருந்துகளை நேரம் தவறாது உட்கொள்ள வேண்டும். மற்றும் ஹைப்பர் தைராய்டைக் கட்டுப்படுத்த ஆன்டி-தைராய்டு மாத்திரைகளும், கதிரியக்க (Radioactive) அயோடின் சிகிச்சை முறையும் இருக்கின்றன. மற்றும் உங்கள் மருத்துவர் தரும் மாத்திரைகளின் மூலமாக தான் இவற்றின் அறிகுறிகளான இதயத்துடிப்பு அதிகரித்தல், குறைதல் போன்ற கோளாறுகளை சரி செய்ய இயலும்.

தைராய்டு புற்றுநோய்

தைராய்டு புற்றுநோய்

உங்கள் தொண்டை பகுதியில் வீக்கம் ஏற்படுதல், சுவாசிக்கும் போதும், சாப்பிடும் போதும் வலி ஏற்படுதல் மற்றும் தொண்டை கரகரப்பு ஏற்படுதல் போன்றவை எல்லாம் தைராய்டு புற்றுநோய்க்கான அறிகுறிகள். இப்படி எதாவது ஏற்படும் போது கதிரியக்க ஐயோடின் சிகிச்சை மூலமாக தைராய்டு பகுதியை அகற்றிவிடுவார்கள்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

தைராய்டு காரணமாக டைப் 1 நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது மன அழுத்தத்தை அதிகரிக்கவும் செய்கிறது. ஆண்களை விட பொதுவாக பெண்களுக்கு தான் அதிகமாக தைராய்டு பிரச்சனைகள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 பரிசோதனை

பரிசோதனை

தைராய்டை கண்டறிய தைராய்டு ப்ரோபைல் (Thyroid Profile) பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஹார்மோனில் தைராய்டின் தூண்டுதல் எந்த அளவு இருக்கிறது என கண்டறியப்படுகிறது. இதில் தைராய்டின் தூண்டுதல் மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் அது ஹைப்போ தைராய்டு என கூறப்படுகிறது. தைராய்டின் தூண்டுதல் குறைவாக இருக்கும் பட்சத்தில் அது ஹைப்பர் தைராய்டு என கூறப்படுகிறது.

அனைவரும் கட்டாய பரிசோதனை

அனைவரும் கட்டாய பரிசோதனை

முப்பத்து ஐந்து வயதிற்கு மேல் ஒவ்வொருவரும் கட்டாய தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் இந்த பரிசோதனையை செய்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

சிகிச்சை

சிகிச்சை

உங்களுக்கு தைராய்டு இருக்கிறது என கண்டறியப்பட்டால், மருத்துவர் தரும் மருந்துகளை கட்டாயம் நேரம் தவறாமல் உட்கொள்ள வேண்டும். நீங்கள் சரிவர மருந்துகளை உட்கொள்ளவில்லை எனில், அது இதய பாதிப்புகளையும், மலட்டுத்தன்மையும் ஏற்பட காரணமாகிவிடும்.

ஊட்டச்சத்து உணவு

ஊட்டச்சத்து உணவு

தைராய்டினை சரியான நிலையில் கட்டுக்குள் வைக்க, நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். முக்கியமாக, அயோடின் மற்றும் செலினியம் சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சைவம் உண்பவர்கள், கீரை, பூண்டு, எள்ளு போன்றவைகளை உணவுக்கட்டுப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றும் மீன், காளான், சோயா பீன்ஸ் போன்றவற்றை சாப்பிட்டால் உடலுக்கு செலினியம் சத்து நிறைய கிடைக்கும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்திய என்டோகிரினாலஜி (Endocrinology) மாத இதழில் வெளிவந்த கணக்கெடுப்பின் படி, தைராய்டு பிரச்சனையின் காரணமாக ஹைப்போதைராய்டிஸம் இருப்பதாய் கண்டரியப்பட்டவர்களில் 5,376'ல் 10.95% பேர் தான் தப்பிப் பிழைத்துள்ளனர். எனவே, ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி, சரியாக நேரம் தவறாமல் மருந்துகள் உட்கொள்ளவேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Quick Facts About Thyroid Disease You Are Not Aware Of!

Do you know about 10 quick facts about thyroid disease you are not aware of. If no, please check it out
Story first published: Wednesday, February 18, 2015, 17:21 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter