Latest Updates
-
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்..
தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் எப்படி மகிழ்ச்சி அதிகரிக்கும்?
மிகவும் சோர்வாக தளர்ந்து போய் இருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள்! செய்யும் வேலை மிகவும் அழுத்தம் தருவதாக உள்ளதா? யோசிக்க வேண்டாம்! நாள் முழுவதும் பலவீனமாக இருப்பதாக உணர்கிறீர்களா? தொடர்ந்து முன்னேறுங்கள்! படிகளில் ஏறிச் செல்லும் போது கூட சோர்வடைந்து விடுகிறீர்களா? அதுவும் மலையேறிச் செல்வதைப் போல! வாழ்க்கை முழுவதும் எந்த உடற்பயிற்சியை செய்ய முடியும் என்பது ஒரு திகைப்பான விஷயமாகும்.
மேலும் அது சிறந்த வகையில் மனநிலையில் செல்வது மட்டுமல்ல. உடற்பயிற்சி, வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சிகரமாக உருவாக்கும் செயலாகவும் இருக்கிறது. நம்மால் எளிதில் நடக்க முடியும் போது, நாம் விரும்பியதை செய்வது எளிதாக இருக்கும்! இங்கு தரப்பட்டுள்ள பட்டியலில், எந்த அனுபவத்தை நீங்களும் பெற்றுள்ளீர்கள் என்று பரிசோதித்துப் பாருங்கள்.

சிறந்த மனநிலை
இதய தசைகளுக்கு கார்டியோவாஸ்குலர் பயிற்சியளித்த 5 நிமிடங்களில், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உணருவீர்கள்! இதை நீங்கள் செய்யத் துவங்கியவுடன், செரோடோனின், டோபாமைன் மற்றும் நோரெபைநெப்ரின் ஆகியவை மூளையிலிருந்து வெளிப்படத் துவங்குகின்றன. இவை உங்களை சிறந்த மனநிலையை உணரச் செய்கின்றன. எனவே, நீங்கள் எதையும் செய்யும் மனநிலையில் இல்லாமலிருந்தாலும், சாதாரணமாக நடை பயிற்சி செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

மனஅழுத்தம் குறைதல்
இணையம் வழியாக நடத்தப்பட்டதொரு ஆய்வில், தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களில் 14 சதவீதம் பேர் மன அழுத்தத்தை வெற்றிகரமாக சமாளிக்கிறார்கள். முன்பே குறிப்பிட்டபடி, நன்றாக இருப்பதை உணர 5 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாக உள்ளது மற்றும் இதற்காக நாம் தீவிரமான உடற்பயிற்சி எதையும் செய்ய வேண்டியதில்லை. உண்மையில், மிகவும் தீவிரமான உடற்பயிற்சிகளை விட, மென்மையான மற்றும் மிதமான உடற்பயிற்சிகளே நம்முடைய மன அழுத்தத்திற்கு மாற்று மருந்தாக உள்ளன.
ஏனெனில் உடற்பயிற்சி செய்யும் போது, மன அழுத்தம் தரும் ஹார்மோன்கள் வெளிப்படுவது குறைகிறது. மன அழுத்தம் என்பது உணர்வு சார்ந்தது மட்டுமல்ல, உடல் சார்ந்ததும் தான். மேலும் மன அழுத்தத்திற்குப் பின்னர் வரும் மாற்றங்களை உடற்பயிற்சிகள் எப்படி பாதிக்கின்றன என்பது பற்றி சமீபத்தில் ரன்னர்ஸ் வேர்ல்டு என்ற இதழில் கட்டுரையாகப் படித்தேன். நடைப்பயிற்சி, ஓட்டம் மற்றும் யோகா ஆகியவை இது பரிந்துரைக்கும் முதன்மையான தேர்வுகளாகும்.

மிகுந்த மன அமைதி
நீங்கள் உடற்பயிற்சிகளை செய்து உடலை வளப்படுத்தும் போது, மனரீதியாகவும் உறுதியடைவீர்கள். நீங்கள் மன ரீதியாக உறுதியாக இருக்கும் போது, அதிகமான மன அழுத்தத்தையும் கூட கையாள முடியும். சில மனிதர்கள் மன அமைதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று உணர்விற்கு அடிமையாகி விட்டிருப்பார்கள். இதில் உங்களுடைய குறிக்கோளை நீங்கள் அடைந்திடவும் மற்றும் வேறு என்னென்ன உங்களால் செய்ய முடியும் என்று ஆச்சரியப்படவும் முடியும்! ஓட்டம், தற்காப்புக் கலைகள், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, மேலும், மேலும் முன்னேறிச் செல்வார்கள். இந்த வகையில் மன உறுதி பெறுவது, வாழ்க்கையின் பிற பகுதிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு செய்வதால் உங்களால் அதிகமான பாரத்தை சுமக்க முடியும்.

எளிது! எளிது! வாழ்க்கை எளிது!
ஒரு நாள் முழுவதும் உங்களால் மிகவும் எளிதாக நடக்க முடியும் என்றால், அது சிறந்த அனுபவமல்லவா? குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்லவோ, காய்கறி கடைக்கும் செல்லவோ அல்லது வீட்டிலுள்ள பொருட்களை அங்கங்கே தள்ளி ஒழுங்குபடுத்தி வைக்கவோ முடிந்தால், அதுவும் மகிழ்ச்சியான விஷயமல்லாவா! இவற்றையெல்லாம் நீங்கள் செய்யும் உடற்பயிற்சி நனவாக்கிடும்! உடற்பயிற்சி வலிமையை அதிகரிக்கவும், உங்களுடைய இதய தசைகளின் நிலையை மேம்படுத்தவும் மற்றும் வாழ்க்கையை எளிதாக உணர வைக்கவும் செய்யும் மருந்தாகும்! எனவே, சோர்ந்திருப்பதைப் பற்றி நாம் பேசக் கூட வேண்டாம்!

நோய் எதிர்ப்பு சக்தி – மேலே மேலே..
உடற்பயிற்சிகள் எந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற கேள்விகளும் உண்டு. உடற்பயிற்சிகள் நம்முடைய நுரையீரல்களில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றும் மற்றும் உங்களுடைய நிணநீர் அமைப்பில் உள்ள புற்றுநோய் காரணிகளையும் அது வெளியேற்றும். இதன் மூலம் உங்கள் உடலிலுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்படும்.
உடலில் இரத்த ஓட்டம் உந்தப்படும் போது, உடலிலுள்ள உடற்பாதுகாப்பு பொருட்களும், இரத்த வெள்ளை அணுக்களும் உடல் முழுவதும் ஓடத் துவங்குகின்றன. இவை நோய்களை கண்டறியவும், அழிக்கவும் செய்கின்றன. இதைவிட வேறென்ன உங்களுடைய உடலுக்குள் நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
மென்மையிலிருந்து மிதமான உடற்பயிற்சிகள் வரை அனைத்து உடற்பயிற்சிகளும், நோய் எதிர்ப்பு சக்திகளை மேம்படுத்துகின்றன. தீவிரமான, கடினமான உடற்பயிற்சிகள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதுடன், மன அழுத்த ஹார்மோன்கள் சுரப்பதற்கும் காரணமாகி விடுகின்றன. நீங்கள் ஜலதோஷத்துடன் போராடிக் கொண்டிருந்தால், நடை பயிற்சி அல்லது மெதுவான ஓட்டம் (ஜாக்கிங்) போன்றவை அங்கே பலனளிக்கும். நீங்கள் மராத்தான் ஓட்டத்திற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாலோ அல்லது இப்பொழுது தான் ஒரு அதிவேக ஓட்டத்தை நிறைவு செய்துள்ளீர்கள் என்றாலோ, அதைச் செய்த சில மணி நேரங்களுக்கு, நோயுள்ள மனிதர்களிடமிருந்து விலகியே இருங்கள். இந்த நேரத்தில், முறையான ஊட்டச்சத்தும், ஓய்வும் கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் பங்கேற்றுக் கொள்ளுங்கள்
நீங்கள் செய்ய விரும்பியதை எல்லாம் செய்ய முடியும் போது, வாழ்க்கையில் மகிழ்ச்சி தானாக எட்டிப் பார்க்கும். குழந்தைகளுடனோ அல்லது பேரப்பிள்ளைகளுடனோ, நண்பர்களுடனோ இணைந்து நீங்கள் பல்வேறு விதமான விளையாட்டுகளை விளையாடி வந்தால், உங்களுடைய வாழ்க்கை ஒரு வரமாக இருக்கும். அடிப்படையான பயிற்சிகளை செய்வதற்கு நீங்கள் உடற்தகுதியுடன் இருக்கிறீர்களா என்று நினைக்க கூட அங்கு நேரம் இருக்காது. வாழ்க்கை மிகவும் சுருக்கமானது! அதனை மகிழ்ச்சியுடன் கழித்திடுங்கள்!

ஆரோக்கியமான மூப்பு
உடற்பயிற்சியின் மூலமாக ஆரோக்கியமான எடையை பராமரிக்க முடியும். உங்களுக்கு வயாதாக ஆக இவ்வாறு உடற்பயிற்சி இல்லாமல், எடையை பராமரிப்பது மிகவும் கடினமாகிவிடும். உங்களுடைய முதுகுத்தண்டின் இயக்கத்திற்கும் உடற்பயிற்சி உதவுவதால், உங்களுடைய உடல் முறையாக இயங்கும். உங்களுடைய சூழலுக்கு ஏற்ற வகையில் தசைகள் இயங்கினால், வாழ்க்கை முழுவதும் வயதாகாமல் வாழ முடியும்.

சிறந்த உறக்கம்
நீங்கள் உறங்கும் போது உங்களுடைய உடல் வெப்பநிலை குறையும். இவ்வாறு வெப்பநிலை குறைந்தால் தான் உங்களால் உறங்க முடியும். உறங்கச் செல்வதற்கு 5-6 மணிநேரங்களுக்கு முன்னர் நீங்கள் 20-30 நிமிடங்கள் உடற்பயற்சி செய்தால், உங்களுடைய உடல் வெப்பநிலை தூங்க ஏற்ற அளவிற்கு குறைந்திருக்கும். இதன் மூலம் சிறந்த உறக்கத்தை தழுவ முடியும்.

அதிக சக்தி!
உடற்பயிற்சிக்குப் பின்னர் நீங்கள் சோர்வாக இருந்தாலும், அது உங்களுக்கு அளவற்றி சக்தியைத் தருகிறது. இந்த சக்தி நாள் முழுவதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம்!

மன தளர்ச்சி மற்றும் பதட்டம் குறைதல்
சோர்ந்திருக்கும் மனிதர்களை விட, உடற்பயிற்சி செய்து சுறுசுறுப்பாக இருக்கும் மனிதர்களுக்கு மன அழுத்தமும், பதட்டமும் மிகக் குறைவாக உள்ளது என்று ஒரு நோயியில் துறை தகவல் தெரிவிக்கிறது. சுறுசுறுப்பாக இருந்து விட்டு, உடற்பயிற்சி செய்வதை நிறுத்தியவர்கள், மிகவும் அதிக மன அழுத்தத்துடன் உள்ளார்கள் என்றும், உடற்பயிற்சிக்கான திட்டத்தை தொடங்கி பராமரித்து வர வேண்டும் என்றும் டியூக் பல்கலைக்கழகத்தில், மருத்துவ உளவியல் பிரிவில் முனைவராக இருக்கும் ஜேம்ஸ் ப்ளூமென்தால் குறிப்பிடுகிறார். எனவே, உடற்பயிற்சிகள் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்க உதவுவதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், மீண்டும் பின்வாங்கிச் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும் உதவுகின்றன.
எனவே, உடற்பயிற்சி செய்யுங்கள்! எந்தவொரு காரணத்தையும் சொல்லி உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டாம்! 5 நிமிட நடைப்பயிற்சி, யோகாசனம், ஓட்டம் போன்றவற்றை திறம்பட செய்து ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவியுங்கள்.



Click it and Unblock the Notifications











