Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மஞ்சளை நாம் ஏன் உணவில் சேர்க்க வேண்டும்? இதோ 10 காரணங்கள்..!
'மசாலாக்களின் ராஜா' என்றாலே அது மஞ்சள் தான் என்று கூறலாம். சாம்பார் முதல் பல்வேறு உணவுகளில் நாம் மஞ்சளை சேர்த்துக் கொள்கிறோம். ஆயுர்வேத மருத்துவத்திலும் மஞ்சள் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.
பெண்கள் தங்களின் மேனியைப் பொலிவாக வைத்திருக்க மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள். சாதாரண காயங்களை ஆற்றுவதிலிருந்து புற்றுநோயைக் குணப்படுத்துவது வரை பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக மஞ்சள் விளங்குகிறது. இப்படி மஞ்சளின் மகிமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இத்தகைய மஞ்சளின் தாயகம் இந்தியா தான் என்பது நமக்குக் கூடுதல் பெருமை. இது நம்முடைய சொத்து தான் என்று மிகவும் கஷ்டப்பட்டு நிரூபித்து, மஞ்சளுக்கான காப்புரிமையை இந்தியா போராடிப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மஞ்சளை நாம் உணவில் எவ்வளவுக்கு எவ்வளவு சேர்த்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் ஆரோக்கியத்துக்கு அது நல்லது என்பதற்கான 10 காரணங்கள், இதோ உங்களுக்காக...

இயற்கை மருந்து
மஞ்சள் ஒரு இயற்கை நிவாரணியாகும். நம் தோல்களில் ஏற்படும் சிறு காயங்கள் முதல் பல வெட்டுக் காயங்கள் வரை ஆற்ற வல்லது இந்த மஞ்சள்.

எடை குறைய
நம் உடல் எடை அதிகமாவதற்குக் காரணமான கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் மஞ்சள் முக்கியப் பங்கை வகிக்கிறது.

புற்றுநோய் சிகிச்சைக்கு...
கணையப் புற்றுநோயிலிருந்து லூக்கேமியா என்னும் இரத்தப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வரை பல மருத்துவச் சிகிச்சைகளுக்கு மஞ்சள் பயன்படுகிறது. புற்றுநோயைத் தூண்டிவிடும் புதிய இரத்த அணுக்களின் வளர்ச்சியை அது கட்டுப்படுத்துகிறது.

நுரையீரலுக்கு நல்லது
நுரையீரல் சிறப்பாகச் செயல்பட இயற்கையிலேயே மஞ்சள் உதவுகிறது. நுரையீரலுக்குத் தேவையில்லாமல் வரும் நச்சுப் பொருட்களை மஞ்சள் கட்டுப்படுத்துகிறது.

ஆன்டி-ஆக்ஸிடண்ட்
மஞ்சளின் துணை உற்பத்திப் பொருளான க்ளூட்டோதியோன் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட் ஆகும். இது நம் ஆயுளைக் கூட்டுவதற்கு உதவும்.

அல்சைமர் நோய்க்கு...
நினைவாற்றலைக் குறைக்கச் செய்யும் அல்சைமர் நோயின் தாக்கத்தை மஞ்சள் வெகுவாகக் குறைக்கிறது.

வலி நிவாரணி
மஞ்சள் ஒரு இயற்கையான வலி நிவாரணி ஆகும். பல்வேறு வாத நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாக மஞ்சள் விளங்குகிறது.

நோய் எதிர்ப்பைத் தூண்டும்
பல அலர்ஜிகளுக்கு எதிராகப் போராடும் மஞ்சள், நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது.

இரத்தத்திற்கு நல்லது
இரத்தம் உறைதலை வெகுவாகக் குறைக்கும் மஞ்சள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.

செரிமானத்திற்கு நல்லது
உடல் செரிமானத்திற்கு மஞ்சள் ஒரு அருமையான மருந்தாகும். எனவே மஞ்சளை நம் உணவில் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications