உடலுறவு எப்படி உடலை வலுவாக்குகிறது?

By: Ashok CR
Subscribe to Boldsky

காலையில் ஜிம் சென்று உடற்பயிற்சியை செய்யவில்லையா? கவலை கொள்ளாதீர்கள். உங்கள் கலோரிகளை குறைக்க பல வழிகள் உள்ளது. உடலுறவில் ஈடுபடுவது உங்களை திடமாக வைத்து, உங்கள் தசைகளை ஆரோக்கியமாக்குவதால், உடலுறவு கூட ஒரு சிறந்த உடற்பயிற்சி வகை தான் என கூறப்படுகிறது. ஒரு மணிநேர உடலுறவு த்ரெட்மில்லுக்கு மாற்றாக அமையாவிட்டாலும் கூட, அது சில பயனை கண்டிப்பாக அளிக்கவே செய்யும்.

தினசரி உறவு வச்சுக்கிட்டா.. எவ்ளோ லாபம் கிடைக்குது பாருங்க!

உடலுறவு என்பது ஆக்கத்திறனை ஊக்குவிக்கும். ஒரு மணிநேர உடலுறவினால் நீங்கள் 500 கலோரிகள் வரை குறைக்கலாம். மேலும் உங்கள் தசைகளையும் அது டோன் செய்யும். உடலுறவு கொள்ளும் போது, நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 5 கலோரிகள் பயன்படுத்தப்படுகிறது. வெறுமனே அமர்ந்து உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி சேனலை பார்ப்பதோடு ஒப்பிடுகையில் இது நான்கு கலோரிகள் அதிகமாகும். உங்கள் உடலும் தசைகளும் வலுவடைவதோடு மட்டுமல்லாது உடலுறவினால் உங்கள் இதய துடிப்பு வீதமும் அதிகரிக்கும். இதனால் உங்கள் இதயம் ஆரோக்கியத்துடன் செயல்படும்.

பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!!!

வாரத்திற்கு மூன்று முறை அல்லது அதற்கு மேலாக உடலுறவு வைத்து கொள்ளும் தம்பதிகளுக்கு பல பயன்கள் கிட்டும். நல்ல தூக்கம், வயதாகும் அறிகுறிகளை குறைத்து அதனுடன் சண்டையிடுதல், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை ஊக்குவித்தல் போன்ற பல பயன்களை அளிக்கிறது. உடலுறவு கொண்டால் எப்படி நம் உடல் வலுவாகும் என்பது வியப்பாக உள்ளதா? அப்படியானால் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உடலுறவு எப்படி உங்கள் உடலை சில வழிகளில் வலுப்படுத்துகிறது என்பதை பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரிகளுக்கு குட்பை சொல்லுங்கள்

கலோரிகளுக்கு குட்பை சொல்லுங்கள்

வலுவை பெற வேண்டுமானால் ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபடுங்கள். ஆம், உடலுறவு உங்கள் வலுவை அதிகரிக்கும். இதனால் ஜிம்மில் நீண்ட நேர பயிற்சியில் ஈடுபடலாம். இதன் பயனாக உங்கள் உடல் எடையை குறைக்கவும் செய்யலாம். அதனால் உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாக செயல்படுகிறது.

யோனி தசைகள் இறுக்கமாகும்

யோனி தசைகள் இறுக்கமாகும்

பிரசவத்திற்கு பிறகு யோனியின் சுவர்கள் தளர்ந்திருக்கும். யோனி தசைகள் இறுக்கமாவதற்கு வாரம் ஒரு முறையாவது ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபட வேண்டும். புணர்ச்சி பரவச நிலையில், யோனியின் சுவர்கள் அனைத்தும் ஒன்றாக இழுக்கப்படும். அதனால் யோனி தசைகள் இறுக்கமடையும்.

மூட்டு வலியை குறைக்கும்

மூட்டு வலியை குறைக்கும்

நீங்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உடலுறவு உதவுகிறது. உடலுறவு கொள்ளும் போது உங்கள் மூட்டில் வலி எடுக்கலாம். ஆனால் உங்கள் தசைகள் திறம்பட செயல்பட இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விளங்கும்.

இடுப்பு தசைகளை வலுவடையச் செய்யும்

இடுப்பு தசைகளை வலுவடையச் செய்யும்

உடலுறவு கொள்ளும் போது அதற்கு பல தசைகள் பயன்படுகிறது. அதனால் திடமான இடுப்பு தசைகளை பெறுவதற்கு இது உதவி புரியும். மேலும் மைய மற்றும் மேல் முதுகையும் உடலுறவு வலுவடையச் செய்யும்.

பைசெப்ஸ் வளர்ச்சி

பைசெப்ஸ் வளர்ச்சி

பைசெப்ஸ் வளர்ச்சிக்கு சில நிலைகள் உதவி புரியும். உங்கள் பைசெப்ஸ் தசைகளை வளர்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட சில நிலைகளே உதவிடும் - தள்ளுவண்டி நிலையிலான உடலுறவு.

வயிற்று தசைகள் திடமாகும்

வயிற்று தசைகள் திடமாகும்

உடலுறவு கொள்வதால் உடல் வலுவடையும் போது சரியான வயிற்று தசைகளையும் பெறுவீர்கள். வலுவான டோன் செய்யப்பட வயிற்று தசைகளை பெற வேண்டுமானால், உடலுறவின் போது சில குறிப்பிட்ட நிலைகளில் ஈடுபட வேண்டும் - மிஷனரி நிலை.

ஸ்குவாட் பயிற்சியின் பிரதி

ஸ்குவாட் பயிற்சியின் பிரதி

இடுப்பு பகுதி கனமாக இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சியில் ஸ்குவாட் எனப்படும் குத்த வைத்து உட்காரும் உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும். இவ்வகை உடலுறவு உங்கள் உடலின் கீழ் பகுதியை வலுவடையச் செய்யும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Intercourse Strengthens Your Body

If you ever wondered how intercourse strengthens your body, you might want to take a look at these healthy tips which Tamil Boldsky shares with you.
Subscribe Newsletter