Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வாயில் வரும் வெண்புண்களை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்கள்!!!
வாய் வெண்புண் என்பது வெள்ளை படலம் போல் திட்டுக்களானது வாயின் உட்பகுதியில் ஏற்படுவதே ஆகும். இத்தகைய வெண்புண் கேண்டிடா ஆல்பிக்கென்ஸ் என்ற பூஞ்சையால் ஏற்படுகிறது. இதை மேலும் விட்டால் சிவப்பு நிறத்தில் புண்கள் வர வாய்ப்புகள் அதிகம். மேலும் இவை நாக்கு மற்றும் தொண்டைகளில் ஏற்படும் புண்களாகும்.
இதை நாம் பெருமளவில் குழந்தைகளிடம் காண முடியும் என்றாலும், பெரியவர்களுக்கும் வர வாய்ப்புகள் உள்ள பிரச்சனை தான். பெரியவர்கள் அதிக அளவு மருந்து உட்கொண்டால் பாக்டீரியாவை கொன்று இந்த வெண்படலம் உருவாகிறது.
இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள்!!!
இது மிக அதிகமாக இருந்தால் நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது. அடிக்கடி இந்த பிரச்சனை வந்தாலும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. அதே சமயத்தில் நாம் வீட்டிலிருந்த படி இதை குறைக்கும் முயற்சிகளை எடுக்க முடியும். இதற்கு ஒரு சில வழிகள் இதோ:

ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, வாயை கொப்பளித்து வந்தால், வாயில் உள்ள பூஞ்சையின் வளர்ப்பை கட்டுப்படுத்த முடியும். அதிலும் இதை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்வது நல்லது.

போரிக் அமிலம்
போரிக் அமிலம் மூலம் இந்த வாய் வெண்புண்ணை நீக்க முடியும். இந்த அமிலத்தை பெரியவர்களுக்கு பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு பயன்படுத்தக் கூடாது. ஒரு கப் தண்ணீரில் கால் டீஸ்பூன் போரிக் அமிலம் கலந்து மூன்று அல்லது நான்கு முறையாவது வாயை கழுவினால் இதை நீக்க முடியும். இதை பயன்படுத்தும் போது கவனத்துடன் செய்ய வேண்டும். இந்த கலவையை விழுங்கி விட்டால், அது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை கொண்டுவரும்.

பூண்டு
பூஞ்சை மற்றும் பாக்டீரியா ஆகியவற்றை அழிக்கக் கூடிய சக்தி பூண்டுக்கு உள்ளது. இரண்டு பூண்டு பற்களை எடுத்து நன்கு மசித்து பின்னர் அதை விழுங்கியோ அல்லது பூஞ்சை உள்ள இடங்களில் சிறிது நேரம் ஒதுக்கி வைத்து பின்னர் விழுங்குவதோ நல்லது. இவை பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும்.

தயிர்
உயிருள்ள அசிடோபில்லஸ் உள்ள தயிர் கடைகளில் கிடைக்கும். அதை இரண்டு ஸ்பூன் எடுத்து உண்பது வீக்கத்தையும் புண்களையும் குறைக்கும். இதை சுட வைக்காத பால் மூலம் செய்வார்கள். சுட வைத்த பாலில் அதிக அளவு லாக்டோபேசில்லஸ் இல்லாததால் பூஞ்சையை கட்டுப்படுத்த முடிவதில்லை. காய்ச்சாத பாலால் செய்யப்பட்ட தயிரை நீங்கள் குடிக்க விரும்பாவிட்டால், அசிடோபில்லஸ் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இவை பாக்டீரியாவை கட்டுப்படுத்த உதவும். இரண்டு அசிடோபில்லஸ் மாத்திரையை எடுத்து அதை உடைத்து ஆரெஞ்சு சாற்றுடன் கலந்து குடிக்கலாம்.

எண்ணெய்
லாவெண்டர் எண்ணெய், இலவங்க எண்ணெய், டீ மர எண்ணெய்களில் தொற்றுகளை தடுக்கும் சக்தி உள்ளது. இவை வாய் வெண்புண்களை குணமாக்க சிறந்த கருவிகளாக உள்ளன. இவைகளை எந்த ஒரு மளிகை கடைகளிலும் வாங்க முடியும். இந்த எண்ணெயை நாம் பயன்படுத்தும் பற்பசையில் இரண்டு அல்லது மூன்று சொட்டு விட்டு பற்களை துலக்கினால் பற்பசையும் எண்ணெய்யும் கலந்து வாய் முழுவதும் பரவி பின்னர் கழுவும் போது நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வெது வெதுப்பான தண்ணீரில் மேற்கூறிய எண்ணெய் வகைகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அந்த தண்ணீரில் சில சொட்டுக்களை விட்டு வாயை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொப்பளித்தாலும், இந்த படலத்தை நீக்க முடியும்.



Click it and Unblock the Notifications