Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
சொத்தைப் பற்களை வீட்டிலேயே சரிசெய்ய உதவும் சில வழிமுறைகள்!!!
பற்குழிகள் மற்றும் உடைந்த பற்கள் போன்றவற்றால் பற்களின் ஈறுகள் மற்றும் வேர்களுக்கிடையில் சீரற்ற நிலை ஏற்படுவதால், மிகவும் கடுமையான வலியை எதிர்கொள்வோம். இது உடைந்த பற்களின் கீழாக சீழ் கட்டி, பல் வலியை ஏற்படுத்துகிறது. சொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி, பற்களைத் தாங்கும் எலும்புகளில் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், உயிருக்கே உலை வைக்கவும் செய்யும்.
இதுப்போன்று வேறு: பற்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்!!!
சொத்தைப் பற்களால் ஏற்படும் வலி தாங்க முடியாததாகவும், பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தினாலும் நிவாரணம் கிடைக்காததாகவும் இருக்கும். நீங்கள் ஈறுகளை பாதிக்கும் இந்த நோயினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நாங்கள் தெளிவுப்படுத்துகிறோம். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, இந்த பிரச்சனைக்கான அறிகுறிகள் மற்றும் காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது தான்.
பயனுள்ள வேறு: பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கும் உணவுகள்!!!

சொத்தைப் பற்களுக்கான காரணங்கள்
* ஈறு நோய்
* மோசமான வாய் பராமரிப்பு
* நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல்
* பல் உடைதல்
* பல் ஈறு வீக்கம்
* பல் தொற்றுகள்
* பாக்டீரியா
* கார்போஹைட்ரேட்கள் மற்றும் ஒட்டும் உணவுகளை அதிகளவில் சாப்பிடுதல்

சொத்தைப் பற்களுக்கான அறிகுறிகள்
* நீங்கள் கடிக்கும் போது தொற்று ஏற்பட்டுள்ள பகுதியில் அரிப்பு ஏற்படுதல்
* பல் கூசுதல்
* மோசமான சுவையுடைய திரவம் வாயிலிருந்து வெளிப்படுதல்
* வாய் துர்நாற்றம்
* ஈறுகளில் சிவந்த நிறம் மற்றும் வலி இருத்தல்
* உடல்நிலை சரியில்லாததாக உணருதல்
* வாயை திறப்பது கடினமாக இருத்தல்
* பாதிக்கப்பட்ட இடத்தில் வீக்கம்
* முகத்தில் வீக்கம்
* எதிர்பாராத பல் அரிப்புகள்
* தூக்கமின்மை
* எதையும் முழுங்குவது கடினமாக இருத்தல்
* காய்ச்சல்

வீட்டு சிகிச்சைகள்
மேற்கண்ட அறிகுறிகளில் எதையாவது நீங்கள் உணர்ந்தால், சற்றே கவனமாகப் பார்த்து, வேகமாக சிகிச்சை பெறத் தொடங்குங்கள். அதிலும் உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே சொத்தைப் பற்களை சரிசெய்ய முடியும். கீழ்காணும் நிவாரணங்கள் உங்கள் சொத்தைப் பற்கள் பிரச்சனையை சரி செய்துவிடும்.

பூண்டு
பூண்டு ஒரு பாக்டீரியா கொல்லி ஆகும். பூண்டை உரித்து எடுக்கப்படும் சாறு, தொற்றுகளில் உள்ள கிருமிகளை கொல்லும் குணம் கொண்டதாகும். மோசமான பல் வலியை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தால், என்ன செய்ய வேண்டும் என்று இங்கே கொடுத்துள்ளோம். பூண்டை உடைத்து, அரைத்து சாறை எடுக்கவும். தொற்று உள்ள இடத்தில் இந்த சாற்றை தடவுங்கள். வீட்டிலேயே செய்யக் கூடிய இந்த நிவாரணம் பல் வலிகளை சரி செய்து விடும்.

கிராம்பு எண்ணெய்
கிராம்பு எண்ணெயும் கூட தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமைகளை கொன்று, பல்வலி மற்றும் ஈறு நோய்களை எதிர் கொள்ளும் மருந்தாகும். சிறிதளவு கிராம்பு எண்ணெயை எடுத்துக் கொண்டு, ஈறுகளில் மெதுவாக தேய்க்கவும். பாதிக்கப்பட்ட இடத்தில் தடவும் போது சற்றே கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுக்க வேண்டாம். அப்படி செய்தால் அதிகமான வலியை தான் உணர முடியும். சிறிதளவு கிராம்பு எண்ணெயை தடவி விட்டு, ஈறுகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள் போதும்.

ஆயில் புல்லிங்
இது மிகவும் பயனுள்ள கை வைத்தியமாகும். உங்களுக்கு தேவையானதெல்லாம் தேங்காய் எண்ணெய் மட்டுமே. ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை எடுத்து உங்களுடைய வாய்க்குள் கொண்டு சென்று, முழுங்கி விட வேண்டாம். 30 நிமிடங்கள் இவ்வாறு தேங்காய் எண்ணெயை வைத்திருங்கள். பின்னர் எண்ணெயை நன்றாக வாயை கொப்புளித்து துப்பவும். நிவாரணம் பெற்றதை நீங்கள் கண்டிப்பாக உணருவீர்கள்

புதினா எண்ணெய்
புதினா எண்ணெய் பல் வலிக்கு ஆச்சரியப்படும் வகையில் நிவாரணம் அளிக்கும். உங்களுடைய விரல் நுனியில் சிறிதளவு புதினா எண்ணெயை தடவிக் கொண்டு, பாதிக்கப்பட்ட இடத்தில் மெதுவாக தடவிக் கொடுக்கவும். சொத்தைப் பல்லினால் வந்த பல் வலிக்கு உடனடி நிவாரணம் கிடைத்ததை நீங்கள் உணருவீர்கள்.

உப்பு
வேகமாக வலியிலிருந்து நிவாரணம் பெற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உப்பை சிறந்த மருந்து எதுவும் இல்லை. ஒரு கிளாஸ் நிறைய உள்ள மிதவெப்பமான நீரில் உப்பை கலந்து, வாயை கொப்புளியுங்கள். முதலில் சில முறை செய்யும் போது, நீங்கள் வலியை உணருவீர்கள், பின்னர் நிவாரணத்தை உணருவீர்கள். இதனை சில தடவைகள் செய்வதன் மூலம் 90 சதவீதம் வலி குறைவதை உணருவீர்கள்.

டீ பேக்
டீ பேக் மற்றுமொரு இயற்கையான நிவாரணமாகும். பாதிக்கப்பட்ட இடத்தில் ஹெர்பல் டீ பேக்-ஐ தடவுங்கள். இதன் மூலம் சொத்தைப் பற்களால் ஏற்பட்ட வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஆர்கனோ எண்ணெய்
பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் மற்றும் ஆக்சிஜன் எதிர்பொருளாக அறியப்படும் ஆர்கனோ எண்ணெய் சொத்தைப் பற்களால் ஏற்படும் வலிக்கு நிவாரணம் தரும் மருந்தாகும். பல் மற்றும் ஈறுகள் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதில் மிகச்சிறந்த மருந்தாக ஆர்கனோ எண்ணெய் உள்ளது.

ஆப்பிள் சீடர் வினிகர்
சொத்தைப் பற்களால் வரும் வலியை தீர்க்கும் மற்றுமொரு வீட்டு நிவாரணமாக ஆப்பிள் சீடர் வினிகர் உள்ளது. இயற்கையான ஆப்பிள் சீடர் வினிகர் ஆச்சரியமான பலன்களைக் கொடுக்கும். ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். சில நிமிடங்களுக்கு உங்களுடைய வாயில் இதனை வைத்திருந்து விட்டு, துப்பி விடவும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள தொற்றுகளை நீக்க முடியும். இது சொத்தைப் பல் வலியால் வந்த வீக்கத்தை குறைக்கவும் உதவும்.

ஆன்டி-பயாடிக்ஸ்
சொத்தைப் பற்களுக்கு வீட்டில் காணப்படும் மற்றொரு நிவாரண முறையாக ஆன்டி-பயாடிக்ஸ் உள்ளன. இபுப்ரோபின் (Ibuprofen) தொற்றுகளை ஒழிக்கவும், வீக்கத்தை சரி செய்யவும் பயன்படுகிறது. பாராசிட்டாமல் (Paracetamol) வலியை குறைக்கும் மற்றுமொரு மருந்தாக உள்ளது. அமோக்ஸிசைலின் (Amoxicillin) மிகச்சிறந்த ஆன்டி-பயாடிக் ஆகவும் மற்றும் மருத்தவர்களால் அதிகளவு பரிந்துரைக்கப்பட்டதாகவும் உள்ளது.
குறிப்பு: சூடான தண்ணீர் அல்லது சூடான திரவங்கள் மற்றும் ஐஸ் பாக்கெட்டுகளை பயன்படுத்தினால் வலியின் தீவிரம் அதிகமாகிவிடும்.



Click it and Unblock the Notifications
