Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
பேஷ் பேஷ்... எது ரொம்ப நன்னாருக்கு? ப்ளாக் காபியா, ரெகுலர் காபியா?
காபியைப் பற்றி ஆயிரம் பேர் அப்படி இப்படின்னு ஆயிரம் கூறினாலும். நாம் எப்போதும் அதை விரும்பிக் குடித்துக் கொண்டு தான் இருக்கிறோம், இல்லையா? சிலருக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காபி குடிக்கவில்லையெனில் தலையே வெடித்துவிடும் என்பார்கள்.
அதிலும் ஃபேஸ்புக், ஆல்கஹால், இவ்வளவு ஏன், செக்ஸ் கூட வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால் காலையில் ஒரு கப் காபி குடிக்கும் பழக்கத்தை மட்டும் விடவே மாட்டார்கள்!
காபியிலும் இரண்டு வகை உள்ளது: ப்ளாக் காபி & ரெகுலர் காபி. இந்த இரண்டில் எது பெஸ்ட் என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

ஆய்வுகளின் முடிவுகள்
"காபி உண்மையிலேயே உடம்புக்கு நல்லது தானா?" என்று கேட்டால், "ஆம்" என்றே சொல்லலாம். ஏனெனில் நுரையீரல் புற்றுநோய் முதல் நம் ஞாபக சக்தியை வளர்ப்பது வரை காபி நல்லது தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

எடையைக் குறைக்க ப்ளாக் காபி
நாம் நம் உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால், அதற்கு ப்ளாக் காபி தான் சிறந்தது. ரெகுலர் காபியை விட இதில் குறைந்த அளவு கலோரி தான் உள்ளது. ஒரு கப் பால் கலந்த ரெகுலர் காபியில் 56.6 கலோரிகள் என்றால், ப்ளாக் காபியில் 4.7 கலோரிகள் மட்டுமே உள்ளது.

மாலையில் ரெகுலர் காபி ஓ.கே.
காலையில் ப்ளாக் காபியும், மாலையில் ரெகுலர் காபியும் குடிப்பது நல்லது. மாலையில் 50 கலோரிக்கு மேல் கிடைக்கும் ரெகுலர் காபி நல்லது தான் என்றாலும், நீங்கள் தூக்கம் வராமல் அவதிப்பட்டால் காபியை அறவே தவிர்ப்பது அதைவிட நல்லது. இரவில் கண் விழித்து ஏதாவது முக்கியமான வேலை பார்க்க வேண்டியுள்ளதா? அதற்கு ப்ளாக் காபி தான் பெஸ்ட்.

அசிடிட்டி தொந்தரவா? இரண்டும் நாட் ஓ.கே.
உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனைகள் இருந்தால், இரண்டு காபிகளையுமே தவிர்ப்பது நல்லது. முக்கியமாக, ப்ளாக் காபியைத் தொடவே கூடாது. இந்த சமயங்களில் நிறைய தண்ணீர் குடிப்பதே மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications
