For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்பிளில் மறைந்திருக்கும் பலருக்குத் தெரியாத ஆச்சரியப்பட வைக்கும் நன்மைகள்!!!

By Karthikeyan Manickam
|

'தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் போகத் தேவையில்லை' என்று அனைவரும் சொல்வதுண்டு. அந்த அளவிற்கு, நம் உடலுக்குத் தேவையான அபரிமிதமான சத்துக்கள் ஆப்பிள் பழத்தில் உள்ளன. நார்ச் சத்து, வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தி, இருதய நலம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

புற்றுநோய், நீரிழிவு, அல்சைமர் உள்ளிட்ட நோய்களுக்கு எதிராகவும் செயல்படும் ஆப்பிள், நம் உடலில் தேவையில்லாத கொலஸ்ட்ரால்களைக் குறைத்து நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

ஆப்பிளைத் தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. தோலில்தான் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் உள்ளன. மேலும், இயற்கை உரத்தில் விளைந்த ஆப்பிளைச் சாப்பிடுவதே நல்லது. ஆப்பிளைத் தினமும் சாப்பிடுவதால் நமக்குக் கிடைக்கும் 10 நன்மைகள் இதோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலஸ்ட்ராலைக் குறைக்க...

கொலஸ்ட்ராலைக் குறைக்க...

எளிதில் கரையக் கூடிய பெக்டின் என்னும் நார்ச்சத்து ஆப்பிளில் உள்ளது. இது உடலிலுள்ள மோசமான கொலஸ்ட்ரால்களை வெகுவாகக் குறைக்கிறது. இதனால் பலவிதமான இதய நோய்களும் குறைகின்றன.

அல்சைமர் நோயைத் தவிர்க்க...

அல்சைமர் நோயைத் தவிர்க்க...

ஆப்பிளில் குவெர்செட்டின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடெண்ட் அதிகம் உள்ளது. இது அல்சைமர் என்னும் மோசமான நரம்பு வியாதியைத் தடுப்பதில் வல்லது.

நீரிழிவை விரட்ட...

நீரிழிவை விரட்ட...

அதிகம் பழங்கள் சாப்பிட்டால் நீரிழிவு வந்து விடுமோ என்று பயப்படத் தேவையில்லை. ஆனால், தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...

ஆப்பிளில் உள்ள வைட்டமின்-சி, நமக்குத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

கண் புரையைத் தவிர்க்க...

கண் புரையைத் தவிர்க்க...

ஆப்பிள் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், கண்களில் ஏற்படும் புரைகளைத் தவிர்க்க முடியும்.

சருமப் பாதுகாப்பிற்கு...

சருமப் பாதுகாப்பிற்கு...

தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வருவதால் டாக்டரிம் போகத் தேவையில்லை என்பது மட்டுமல்ல, அழகுக் கலை நிபுணரிடம் செல்வதையும் தவிர்க்கலாம். ஆம், ஆப்பிளில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்ட்டின் ஆகியவை சருமத்தைப் பளபளப்பாக வைக்க உதவுகின்றன.

சீரான சுவாசத்திற்கு...

சீரான சுவாசத்திற்கு...

ஆப்பிளில் உள்ள பைட்டோகெமிக்கல்கள், ஆஸ்த்மா மற்றும் அலர்ஜி பிரச்சனைகளை அடியோடு விரட்டுகின்றன. மூக்கில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கி, சீரான சுவாசத்திற்கு இது வழி வகுக்கிறது.

எடை குறைப்பிற்கு...

எடை குறைப்பிற்கு...

ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதாலும், ஜூஸாக்கி சாப்பிடுவதாலும் உடல் எடை குறைகிறது. ஆப்பிளில் உள்ள பாலிபீனால் மற்றும் பெக்டின் ஆகியவை செய்யும் மாயம்தான் இது!

புற்றுநோயை விரட்டுவதற்கு...

புற்றுநோயை விரட்டுவதற்கு...

ஆப்பிள் பழத்தில் உள்ள குவெர்செட்டின் மற்றும் ட்ரைடெர்பினாய்டுகள் ஆகியவை, நுரையீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.

எலும்பு பாதுகாப்பிற்கு...

எலும்பு பாதுகாப்பிற்கு...

ஆப்பிளில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளைப் பாதுகாப்பதில் வல்லவை; எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Amazing Facts About Apples You Didn't Know

Here are some of the most interesting and important health benefits of apples that will help you know the importance of including apples in your diet.
Desktop Bottom Promotion