Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
40 வயதைக் கடக்கும் பெண்கள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின்கள்!!!
பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். ஆகவே வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் சாப்பிட வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டு வலி, கால் வலி மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
ஆகவே இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட் கொள்ள வேண்டும். அதிலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வைட்டமின்களை 40 வயதிற்கு மேல் தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலை நன்கு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள முடியும்.
சரி, இப்போது 40 வயதான பெண்கள் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய வைட்டமின்கள் என்னவென்று பார்ப்போமா!!!

வைட்டமின் பி12
40 வயதான பெண்களுக்கு வைட்டமின் பி12 மிகவும் இன்றியமையாத வைட்டமின்களில் ஒன்றாகும். அதிலும் சர்ஜரி நடந்திருந்த அல்லது இதயத்தில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு, இச்சத்து மிகவும் முக்கியமானது. ஆகவே வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த மாட்டிறைச்சி, கானாங்கெளுத்தி மற்றும் முட்டைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி
இது மற்றொரு அவசியமான வைட்டமினாகும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முக்கியமான வைட்டமின்களாகும். ஏனெனில் இவை தான் ஒரு நாளைக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுக்கிறது. எனவே பசலைக்கீரை, சால்மன், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் எடுத்துக் கொண்டால், இச்சத்துக்களைப் பெறலாம்.

வைட்டமின் டி
தினமும் காலையில் 15 நிமிடம் சூரிய ஒளி உடலில் படுமாறு இருந்தால், அது உடலில் ஏற்படும் சோர்வை நீக்கிவிடும். அதுமட்டுமல்லாமல், சால்மன் அல்லது பாலை அதிகம் குடித்தால், அது உடலில் வைட்டமின் டி-யின் அளவை அதிகரிக்கும்.

வைட்டமின் Q10
இந்த வைட்டமினை அவசியம் 40 வயதான பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய வைட்டமினானது மீன், கல்லீரல், நவதானியங்கள் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.

இரும்புச்சத்து
இறுதி மாதிவிடாயினால் பெண்கள் அதிகப்படியான இரும்புச்சத்துக்களை இழக்க நேரிடும். இதனால் பல பெண்கள் இரத்தசோகைக்கு உள்ளாவார்கள். எனவே இந்த நிலையை தவிர்க்க, பெண்கள் கீரைகளையும், ப்ராக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி
வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்வதால், வயதான காலத்தில ஏற்படும் பார்வைக் கோளாறு ஏற்படாமல் இருக்கும். ஆகவே தினமும் ஒரு ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.

வைட்டமின் ஏ
40 வயதைக் கடக்கும் போது பெண்கள், வைட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இத்தகைய வைட்டமின் ஏ சத்தானது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.

மக்னீசியம்
அவகேடோ மற்றும் வாழைப்பழத்தில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துள்ள உணவை உட்கொண்டால், நரம்பு மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.

ஜிங்க்
ஜிங்க் சத்து ஆண்களுக்கு தான் மிகவும் முக்கியமானது என்று நினைக்க வேண்டாம். இது பெண்களுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களில் ஒன்றாகும். எனவே காளான், பீன்ஸ் போன்றவற்றை உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள்.

வைட்டமின் ஈ
நட்ஸ், டோஃபு மற்றும் ப்ராக்கோலியில் வைட்டமின் ஈ அளவுக்கு அதிகம் இருப்பதால், வாரத்திற்கு ஒரு முறை பெண்கள் உணவில் சேர்த்து வந்தால், வயதாவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும்.



Click it and Unblock the Notifications