For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாக்லெட் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமா இருக்குமாம்!!!

By Super
|

சாக்லெட் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலம் கொள்வர். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து நீட்டும். பெரியவர்களும் குழந்தைகளுக்கு நிகராக சாக்லெட் சாப்பிட ஆசை கொள்வர். இருந்தாலும் உடல் பருமன் மற்றும் பல உடல் உபாதைகள் காரணமாக பெரியவர்கள் சாக்லெட் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவார்கள். மேலும் குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஆகிவிடும் என்று காரணம் சொல்லி, சாக்லெட் வாங்கிக் கொடுப்பதை குறைத்துக் கொள்வார்கள்.

சாக்லெட்டில் அதிக கலோரி நிறைந்துள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும் என்று எண்ண வேண்டாம். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான் அவ்வாறு ஆகும். ஆனால் அளவாக சாப்பிட்டு வந்தால், எந்த பிரச்சனையும் இருக்காது. மேலும் சாக்லெட் சாப்பிட்ட பிறகு நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் இதை அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு இரவு தூங்கும் முன் சாக்லெட் சாப்பிட கொடுக்க வேண்டாம்.

அப்புறம் என்ன... சாக்லேட்டின் மருத்துவ நலன்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய நோய்களை தடுக்கிறது

இதய நோய்களை தடுக்கிறது

சாக்லெட்டில் உள்ள சில இரசாயனங்கள் இதய அமைப்பு சீராக இயங்குவதற்கு வழிவகுப்பதால் இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. அதிலும் டார்க் சாக்லெட் மாரடைப்பு அபாயத்தை 50 சதவீதமும், இதய நோய்களை 10 சதவீதமும் குறைக்கும். எனவே தினமும் ஒரு துண்டு சாக்லெட் சாப்பிடுவது ஒரு பொருட்டல்ல.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

சாக்லெட், சில காய்கறிகள் போல தாவரங்களிலிருந்து வருவதால், இந்த இரண்டிற்கும் ஒத்த தன்மைகள் மற்றும் பயன்கள் உண்டு. சாக்லெட்டில் உள்ள ஃப்ளேவோனாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்படுகின்றது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நைட்ரிக் ஆக்ஸைடை உற்பத்தி செய்து, அதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது. மேலும் இது உடலின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது.

கொழுப்பை குறைக்கிறது

கொழுப்பை குறைக்கிறது

சாக்லெட் உடலில் கொழுப்பைக் குறைக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பான எல்டிஎல்-ஐ குறைப்பதில் உதவுகிறது. அதிகப்படியான கொழுப்பை குறைக்க நினைத்தால் சாக்லேட் சாப்பிட வேண்டும். மேலும், இது உடலில் 'நல்ல' கொழுப்பு அதிகரிக்க உதவுகிறது.

மன அழுத்தத்தை எதிர்க்கிறது

மன அழுத்தத்தை எதிர்க்கிறது

ஆம், சாக்லெட்டால் மனநிலையை மேம்படுத்த முடியும். ஏனெனில் மன அழுத்தத்தை குறைக்கும் செரடோனின் இதில் அதிகம் உள்ளது.

குறைந்த கொழுப்பை கொண்டுள்ளது

குறைந்த கொழுப்பை கொண்டுள்ளது

சாக்லெட்டின் முக்கிய மூலப்பொருள் கொக்கோ தூள். இதில் குறைந்த கொழுப்பே உள்ளது. "சாக்லெட் சாப்பிட விரும்புகிறேன். ஆனால் எடை போட விரும்பவில்லை" என்று எண்ணுபவர்கள் குறைந்த கொழுப்பு கொண்ட சாக்லெட் சாப்பிட வேண்டும். ஆனால் அதையும் அளவோடு சாப்பிட வேண்டும். மேலும், சாக்லெட்டில் கொக்கோ 60 சதவீதத்திற்கு மேல் இருப்பதை தேர்ந்துதெடுத்து சாப்பிட வேண்டும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

சாக்லெட்டில் உள்ள ஃப்ளேவோனாய்டு, அதனை சாப்பிட்ட பிறகு 2-3 மணிநேரத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சுறுசுறுப்புடன் வைக்கிறது. ஃப்ளேவோனாய்டுகள் மூளையில் உள்ள இரத்த நாளங்களை விரியச் செய்வதன் மூலம், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. ஆகவே அதற்கு ஒரு துண்டு சாக்லெட் போதுமானது.

நாள்பட்ட சோர்வை தவிர்க்கிறது

நாள்பட்ட சோர்வை தவிர்க்கிறது

ஒரு நபரின் உடல் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை அச்சுறுத்தும் விதமாக நாள்பட்ட சோர்வு உள்ளது. அதில் தலைவலி, உடல் வலி, இதயம் மற்றும் சுவாச பிரச்சனைகளும் இருக்கக்கூடும். ஆனால் தினமும் 50 கிராம் சாக்லெட் எடுத்துக் கொண்டால், நாள்பட்ட சோர்வு நீங்கிவிடும்.

இளமையை தக்க வைக்கும்

இளமையை தக்க வைக்கும்

சாக்லெட் சாபிட்டால் சில காலத்திற்கு முதுமையை ஒத்தி வைக்கலாம். அதாவது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், வரிகளையும் சாக்லெட் குறைக்கின்றது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.

மகிழ்ச்சியான குழந்தை பிறக்க வழிவகுக்கிறது

மகிழ்ச்சியான குழந்தை பிறக்க வழிவகுக்கிறது

சாக்லேட்டின் ஆரோக்கிய பலன்களை கண்டறிவதற்காக நடத்திய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான உண்மை கண்டு பிடிக்கப்பட்டது. சாக்லெட் சாப்பிட்ட கர்ப்பிணி பெண்கள், சாக்லேட் சாப்பிடாத பெண்களை விட மகிழ்ச்சியான நிலையில் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அதாவது சாக்லேட் சாப்பிடும் தாய்மார்களுக்கு பிரசவத்தின் போது மிகவும் குறைவான அளவிலேயே பயம் தெரிந்ததாம்.

அகால மரணம் குறைகிறது

அகால மரணம் குறைகிறது

சாக்லேட் அதிகம் சாப்பிட இது மிக முக்கிய காரணம் ஆகும். வாழ்க்கை முழுவதும் சாக்லெட் சாப்பிட்ட மக்கள், சாக்லெட் சாப்பிடாதவர்களை விட சுமார் ஒரு வருடம் அதிகமாக வாழ்கின்றனர். இந்த உண்மை பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சாக்லெட் கிட்டத்தட்ட 8 சதவீதம் அகால மரணத்தை குறைக்கின்றது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Health Benefits Of Chocolate | சாக்லெட் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமா இருக்குமாம்!!!

Now you need to stop feeling guilty about that bar of chocolate you ate last night because we are going to tell you about the health benefits of chocolates.
Desktop Bottom Promotion