Latest Updates
-
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்!!!
பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்/பி.சி.ஓ.எஸ் (PCOS)எனப்படும் சினைப்பைக் கட்டிகள் என்பது பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் வருவதில்லை. ஹார்மோன் மாற்றங்களினால் வரும் இந்த குறைபாடு உடனடியாக கண்டறியப்பட முடியாதது. பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பைக் கட்டிகள் இருப்பது குறித்த அறிகுறிகள் மெல்ல தான் தெரிய ஆரம்பிக்கும்.
பெண்கள் பருவமடைந்ததும், அவர்களது தொடக்க டீன் ஏஜ் பருவத்தில், முதலாவது மாதவிலக்கிற்குப் பிறகு ஹார்மோன் மாற்றங்களால் பி.சி.ஓ.எஸ் ஆரம்பிக்கிறது. உடல் எடை அதிகரிப்பதைத் தொடர்ந்து இதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். பி.சி.ஓ.எஸ் இருந்தால். ஒன்றிரண்டு அறிகுறிகளோ அல்லது பல அறிகுறிகளோ தென்படலாம். பி.சி.ஓ.எஸ் காரணமாகத் தென்படும் அறிகுறிகளைத் தவறாக பிற நோய்களுக்கான அறிகுறிகள் எனக் கொள்வது சகஜமான ஒன்று.
ஆனால் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையுள்ள பெண்களை மருத்துவரிடம் ஆலோசனைக்கு வரச் செய்யும் அறிகுறிகளுள் முதன்மையானவை, இதோ:
* மாதவிலக்குப் பிரச்சினைகள்
* முகத்திலும் உடலிலும் ஆண்கள் போல ரோமம் வளர்தல்.
* மலட்டுத்தன்மை
* அதிக எடை மற்றும் மேலுடம்பு மட்டும் குண்டாதல்
அதுமட்டுமின்றி வேறு சில அறிகுறிகளும் உள்ளன. இப்போது அத்தகைய சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான தொடக்க மற்றும் பிந்தைய அறிகுறிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

சொற்பமான மாதவிலக்கு அல்லது மாதவிலக்கே ஏற்படாமை:
ஓராண்டிற்கு ஒன்பது மாதவிலக்குகளுக்கும் குறைவாக ஏற்படுதல் (அதாவது ஒரு மாதவிலக்கு சுழற்சிக்கும் அடுத்த மாதவிலக்குச் சுழற்சிக்கும் இடையேயான இடைவெளி 35 நாளுக்கும் அதிகமாக இருத்தல்) அல்லது மாதவிலக்கே ஏற்படாமல் நின்று போதல் ஆகியவை இதில் வகைப்படுத்தப்படும்.
பி.சி.ஓ.எஸ் உள்ள சில பெண்களுக்கு மாதவிலக்கு தவறாமல் உண்டாகும். ஆனால் மாதந்தோறும் சினை உற்பத்தி நடக்காது. அதாவது அவர்களது சினைப்பைகளிலிருந்து மாதந்தோறும் முட்டை வெளிப்படாமல் போகும்.

அதிகப்படியான இரத்தப் போக்கு
ஒழுங்கற்ற மாதவிலக்கு மற்றும் மாதவிலக்கின் போது மிக அதிகமான உதிரப் போக்கு ஏற்படுதல். பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களில் 30% பேருக்கு இந்த அறிகுறி உள்ளது.

முடி அதிகமாக உதிர்தல் மற்றும் முளைத்தல்
தலைமுடி மிக அதிகமாக உதிர்தல் மற்றும் முகம், மார்பு, முதுகு, வயிறு மற்றும் கட்டைவிரல்/கால் பெருவிரல்களில் ரோமம் முளைத்தல். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பி.சி.ஓ.எஸ் பிரச்சனை உள்ள 70% பெண்களுக்கு ஆண்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் இத்தகைய ரோமப் பிரச்சனை உள்ளது எனப் பதிவுகள் உள்ளன.

முகப்பருக்கள் மற்றும் எண்ணெய் பசையுள்ள சருமம்
பி.சி.ஓ.எஸ் பிரச்சனை உள்ள பெண்களின் உடலில் ஆண்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால், முகப்பருக்கள் ஏற்படுகின்றன மற்றும் சருமம் எண்ணெய் பசையுள்ளதாக மாறுகிறது.

மனத்தளர்ச்சி மற்றும் மனநிலை மாற்றம்
பி.சி.ஓ.எஸ் பிரச்சனையுடன் வாழும் பெண்களது நல்வாழ்வு, பாலுறவில் நாட்டம், பாலுறவில் திருப்தியடைதல், ஆகியவை பாதிக்கப்பட்டு மொத்தத்தில் அவர்களது வாழ்க்கைத் தரமே பாதிக்கப்படும். இதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு, மனத்தளர்ச்சி அடையும் நிலை ஏற்படும்.

உடல் எடை அதிகரித்தல்
உடல் எடை அதிகரித்தல், இடுப்பை விட அடிவயிற்றில் அதிக சதை போடுதல். இது உடலில் ஆண்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால் ஏற்படலாம்.

தலையில் வழுக்கை
ஆண்களைப் போல் தலையில் வழுக்கை உண்டாதல், தலைமுடி மென்மையாதல். இதுவும் உடலில் ஆண்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால் ஏற்படலாம்.

கருச்சிதைவு
இதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. உடலில் அதிக அளவு இன்சுலின் இருப்பதாலோ, தாமதமான சினைமுட்டை உற்பத்தியாலோ (ovulation), கருமுட்டையின் (egg) தரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையினாலோ, அல்லது கருமுட்டையானது கருப்பையினுள் பொதிந்திருக்கும் அமைப்பினாலோ கருச்சிதைவு ஏற்படலாம் என நம்பப்படுகிறது.

மலட்டுத்தன்மை
கருவுற முடியாமல் போவதற்கு, சினைப்பைகளிலிருந்து சினைமுட்டையானது வெளிப்படாததனால் இந்த நிலை ஏற்படுகிறது.

அதிகமான இன்சுலின்
இரத்தத்தில் அதிக அளவு இன்சுலின் இருத்தல். ஹைப்பர் இன்சுலினீமியா எனப்படும் அதிக அளவு இன்சுலின் இருக்கும் அறிகுறிகள். உடலின் மேல் பகுதி மட்டும் குண்டாதல், கைகளின் கீழ்ப்பகுதி, கழுத்து, கவடு (இடுப்பும் தொடையும் சேருமிடம்), பிறப்புறுப்புப் பகுதி ஆகியவற்றில் வெல்வெட் போன்ற கருமையான சருமப்படை தோன்றுதல் ஆகியவை அதிக அளவு இன்சுலின் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

மூச்சுவிடுவதில் சிரமம்
தூங்கும் போது மூச்சு விடுவதற்கு சிரமப்படும் நிலையானது, அதிகமாகக் குண்டாக இருப்பதினாலோ, அதிக அளவு இன்சுலின் இருப்பதினாலோ ஏற்படலாம்.

அதிக இரத்த அழுத்தம்
பி.சி.ஓ.எஸ் பிரச்சனையுள்ள பெண்களிடையே பொதுவாகக் காணப்படும் அறிகுறிகளுள் ஒன்று அதிக இரத்த அழுத்தம் ஆகும். அதுவும் இப்பெண்கள் இயல்பை விட அதிக எடை கொண்டவர்களாக இருந்துவிட்டால், இது நிச்சயம் ஏற்படும். ஆகவே இந்த பிரச்சனையை அறிய இரத்த அழுத்தத்தினை மருத்துவர் பரிசோதிப்பார்கள்.



Click it and Unblock the Notifications
