Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஊட்டச்சத்து பற்றிய கட்டுக்கதைகள்!!!
இன்றைய சூழலில் நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு வகை உணவும், நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து தரக்கூடிய உணவாகவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இன்று பரவி வரும் நோய்களிலிருந்து நமது உடலை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆகவே, நமக்கு அன்றாடம் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவை சரிவர இருக்கும் உணவை உட்கொள்ள வேண்டும். மேற்கூறிய ஊட்டச்சத்து நிறைந்த உணவும், சிறிது நேர உடற்பயிற்சியும் செய்து வந்தால், ஆரோக்கியமான உடல்வளத்தை பெறலாம்.
பழங்கதைகள் பல இருக்கின்றது. மேலும், பெரும் பழங்கதைகளும் பல இருக்கின்றன. உணவு பழக்கங்கள் என்று எடுத்து கொண்டோமானால், அடையாள முத்திரைகளையும், உரிமைதுறப்புகளையும், பெரும்பாலும் நாம் காலம் காலமாக கேட்டு வந்தவற்றையும் தான் பின்பற்றுகின்றோம். ஆனால், நாம் கட்டுக்கதைகளில் இருக்கும் உண்மையை பிரித்துப் பார்க்க கற்று கொண்டோமானால், அதேபோல் நமது ஆரோக்கிய வாழ்க்கைக்கும், உடல் எடை குறைப்பிற்கும் தடையாக இருக்கும் பழக்கங்களை துறப்பது எளிதாக இருக்கும். இதோ சில முற்றிலும் பொய்யான, பொருத்தமற்ற ஊட்டச்சத்து பற்றிய பழங்கதைகளைப் பார்க்கலாம்.

முட்டை உடல்நலமற்றது
இந்த நன்கு அறிந்த உண்மைக்கு முரண்பாடாக, முட்டைகள் நமது உடலில் "நல்ல" கொழுப்பை உயர்த்துகின்றது. மேலும், இவை இதய நோய்கள் வரும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றது என்பது பொய்யான கருத்தாகும். மாறாக முட்டைகள் சாப்பிடுவதால், முழு நிறைவு நிலையை நமக்கு அளிக்கின்றது மற்றும் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகின்றது. முட்டைகளில் தனித்தன்மை வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்து இருப்பதால், கண்களை பாதுகாக்கின்றது.

நிறைவுற்ற கொழுப்புச்சத்து உடலுக்கு கெட்டது
ஆய்வுகள் இந்த கோட்பாட்டை தவறு என்று நிரூபித்துள்ளது. நிறைவுற்ற கொழுப்புச்சத்திற்கும், இதய நோய்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. உண்மை என்னவென்றால், நிறைவுற்ற கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், இது நமது உடலில் HDL எனப்படும் இரத்தத்தில் உள்ள "நல்ல" கொழுப்புச்சத்தின் அளவை உயர்த்துகின்றது. அதிலும் மாமிசம், தேங்காய் எண்ணெய், பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணெய் போன்ற உணவு வகைகளை தேவையான அளவில் உட்கொண்டால் நமது உடலுக்கு நல்லது.

அனைவரும் தானியங்களை சாப்பிட வேண்டும்
காய்கறிகளை ஒப்பிடுகையில் தானியங்களில் ஊட்டச்சத்து சற்று குறைவாகவே உள்ளது. இவற்றில் அதிக அளவில் பைடிக் அமிலம் இருப்பதால், அவை குடலில் உள்ள தேவையான கனிமப்பொருட்களை பிணைப்பதோடு, அவற்றை உட்கொள்ளுதலையும் தடுக்கின்றது. மேலும், இவற்றில் அதிக அளவில் க்ளூடோன் இருகின்றது. க்ளூடோன் எல்லோருக்கும் கெடுதல் செய்வது இல்லை என்றாலும், க்ளூடோன் ஒத்துகொள்ளாதவர்களுக்கு உடல்நலக் கேடுகளை உண்டாக்கும்.

புரோட்டீன் அதிகம் உள்ள உணவு உடலுக்கு கேடு விளைவிக்கும்
இந்த உண்மை நம்மை பெரிதும் பாதிக்காது. புரோட்டீன் வகை உணவுகள் நமது எலும்பு வளத்தை மேம்படுத்துவதோடு, எலும்பு முறிவுகள் ஏற்படும் ஆபாயத்தையும் குறைக்கச் செய்கின்றது. மேலும், சிறுநீரக நோய்களுக்கும், அதிக புரோட்டீன் உணவுகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மாறாக, இவை அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகளை குறைக்கச் செய்கின்றது.

நாள் முழுவதும் சிறு இடைவேளையில் பலமுறை உணவு உட்கொள்ள வேண்டும்
ஒரு நாளில் சிறு இடைவேளையில் பலமுறை உணவு உட்கொண்டால், அவை அதிக வளர்சிதை மாற்றதை உயர்த்தும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. முடிவாக, நாம் பலமுறை உணவு சாப்பிட்டாலும், நாம் உட்கொண்ட மொத்த அளவு உணவுக்கான வலிமையை தான் கணக்கிட முடியும். மேலும் சாப்பிடாமல் இருப்பது மற்றும் ஒருசில வேளைகள் உணவருந்தாமல் இருப்பது, நமது உடலுக்கு நல்லது.

சர்க்கரையில் "வெற்று" கலோரிகள் தான் இருக்கின்றது
சர்க்கரையில் நிறைய கலோரிகள் இருந்தாலும், அவை தேவையற்ற ஊட்டச்சத்து நிரம்பியது என்பது நாம் அறிந்த பாதி உண்மையாகும். சர்க்கரையில் அதிக ஃபுருக்டோஸ் இருப்பதால், அவை சீக்கிரமாக கொழுப்புச்சத்து உயர்த்தக்கூடிய மெட்டபாலிசத்தை பாதிக்கிறது. முடிவாக பார்த்தோமென்றால், அதில் உள்ள வெற்று கலோரிக்களை தாண்டி, அது கொடுக்கும் விளைவுகள் அதிகம். சர்க்கரை நமது மெட்டபாலிசத்தை அழித்து, உடல் எடை அதிகரிப்பு மற்றும் வேறு சில கொடிய நோய்கள் வர பெரிதும் காரணமாக இருக்கின்றது.



Click it and Unblock the Notifications
