Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
வைட்டமின் ஏ அதிகம் இருக்கும் உணவுகள்!!!
உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை டயட்டில் அதிகம் சேர்க்க வேண்டும். இவ்வாறு ஊட்டச்சத்துள்ள மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடல் மட்டுமின்றி, சருமமும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும். சொல்லப்போனால் ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளாரா என்பதை சருமத்தை வைத்தே சொல்லலாம். எனவே ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவதற்கு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
ரெட்டினாய்ட்அ மருந்துகளில் இருப்பது போன்று வைட்டமின் ஏ-யிலும், சருமத்தில் ஏற்படும் அழற்சிகள் மற்றும் காயங்களான முகப்பருக்களை சரிசெய்யும் தன்மை நிறைந்துள்ளது. மேலும் நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இத்தகைய உணவுகள் உடலில் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, சருமத்தையும், உடலையும் நன்கு இளமையுடன் வைத்துக் கொள்ள பெரிதும் துணையாக உள்ளது. எப்படியெனில் இதில் உள்ள வைட்டமின் ஏ, உடலில் உள்ள டாக்ஸின்களால் சரும செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கிறது.
சரி, இப்போது அத்தகைய வைட்டமின் ஏ நிறைந்துள்ள ஒருசில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் அந்த உணவுகளை அதிகம் சாப்பிட ஆரம்பியுங்கள்.

கேரட்
கேரட்டில் வைட்டமின் ஏ சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம். 100 கிராம் பேரட்டில் 836mcg வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. எனவே முடிந்த அளவில், இதனை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

ஈரல்
ஆடு, கோழி போன்றவற்றின் ஈரலில் கூட வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்தால், இறைச்சியிலிருந்து பெறப்படும் வைட்டமின் ஏ சத்தானது உடலால் எளிதில் உறிஞ்சப்படும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு
கிழங்கு வகைகளில் சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ சூப்பராக உள்ளது. அதிலும் அவை பீட்டா கரோட்டீன் என்றதாக உள்ளதால், அதனை சாப்பிடும் போது, அது உடலில் வைட்டமின் ஏ ஆக மாறிவிடுகிறது.

பசலைக் கீரை
இந்த கீரையின் நன்மைக்கு அளவே இல்லை. ஏனெனில் இதிலும் வைட்டமின் ஏ அதிகம் அடங்கியுள்ளது. எனவே நல்ல அழகாக சருமம் வேண்டுமெனில் பசலைக் கீரையை சேர்த்துக் கொள்ளவும்.

சீஸ்
சீஸ் மற்றும் இதர பால் பொருட்களிலும் வைட்டமின் ஏ அதிகமாக நிறைந்துள்ளது. இத்தகைய உணவு உடலை ஆரோக்கியத்துடன் வைப்பதோடு, சருமத்தையும் அழகாக வைக்க உதவுகிறது.

முலாம் பழம்
கோடைகாலத்தில் முலாம் பழம் அதிகம் கிடைக்கும். இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதோடு, வைட்டமின் சத்தும் அதிகமாக உள்ளது.

முட்டை
அனைவருக்கும் முட்டையில் புரோட்டீன் மட்டும் தான் அதிகம் உள்ளது என்று தெரியும். ஆனால் இதில் வைட்டமின் ஏ சத்தும் அதிகம் உள்ளது. குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

அவகேடோ
அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இந்த கொழுப்புக்கள் வைட்டமின் ஏ சத்து எளிதில் உறிஞ்சுவதற்கு பெரிதும் துணையாக உள்ளது. எனவே இதனை ஜூஸாகவோ அல்லது அப்படியேவோ சாப்பிடலாம்.

சால்மன்
மீன்களில் சால்மனில் வைட்டமின் ஏ, உடலுக்கு வேண்டிய அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் குறைவான அளவில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் இருப்பதால், இதனை சாப்பிட்டால், சருமம் மற்றும் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பப்பாளி
பொதுவாக பப்பாளி அதிகம் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று தெரியும். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. ஆகவே தொடர்ந்து பப்பாளியை சாப்பிடுங்கள்.

ப்ராக்கோலி
100 கிராம் ப்ராக்கோலியில் 31mcg வைட்டமின் ஏ உள்ளது. மேலும் இந்த காய்கறியை சாப்பிட்டால், சருமம் இறுக்கமடையும். எனவே சரும சுருக்கத்தைப் போக்க நினைப்பவர்கள், ப்ராக்கோலியை எடுத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

மாம்பழம்
பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தில் ஒருவருக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அதிலும் வைட்டமின் ஏ சத்தும் ஒன்று. எனவே சருமத்தை பொலிவோடும், ஆரோக்கியமாகவும் வைப்பதற்கு மாம்பழத்தை சாப்பிட வேண்டும்.



Click it and Unblock the Notifications