Latest Updates
-
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா?
உடம்பு சரியில்லைன்னா, உடனே மெடிக்கல் ஷாப்புக்கு போகாதீங்க... கிச்சனுக்கு போங்க...
இன்றைய காலத்தில் மருந்து மாத்திரைகள் அதிகம் மார்க்கெட்டில் வந்துள்ளன. உடலில் எந்த ஒரு சிறிய பிரச்சனை என்றாலும், உடனே மருந்து கடைக்குச் சென்று, மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும். ஆனால் அவ்வாறு சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளை நாடினால், அது உடலுக்கு பிற்காலத்தில் வேறு சில பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
குறிப்பாக பலர் தலை வலி அல்லது மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு மாத்திரைகளை வாங்கி போடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இப்படி போட்டால், அது பழக்கமாகிவிடுவதோடு, அந்த பழக்கம் ஒரு அடிமை போன்று ஆக்கிவிடும். அதிலும் பெண்கள் வயிற்று வலிக்கு எல்லாம் மாத்திரை போட்டால், பிற்காலத்தில் கருத்தரிக்கும் போது பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஆகவே எந்த ஒரு வலியானலும் முதலில் மாத்திரைகள் போடுவதை தவிர்த்து, அதற்கு இயற்கை வலி நிவாரணிகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில் நமது சமையலறையில் நிறைய வலி நிவாரணிகள் இருக்கின்றன. அவை தற்காலிகமாக மட்டும் வலியை குறைப்பதில்லை, வாழ்நாள் முழுவதும் தான். மேலும் இவை வலியை குறைப்பதோடு, உடலுக்கு பல நன்மைகளையும் இலவசமாக கொடுக்கின்றன.
இப்போது சமையலறையில் இருக்கும் இயற்கை வலி நிவாரணிகள் என்னவென்று பார்ப்போமா!!!

கிராம்பு
பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது உடனே கிராம்பை மென்றால், பல் வலி போவதோடு, ஈறுகளில் இருக்கும் காயங்களும் குணமாகும். எப்படியெனில் இதில் யூஜினால் என்னும் வலியை போக்கும் பொருள் உள்ளது.

தசை வலி
உடல் தசைகள் வலியுடன் இருந்தால், சிறிது இஞ்சியை அப்படியே கடித்து சாப்பிட்டால், வலி நீங்குவதோடு, மூட்டுகளில் இருக்கும் வீக்கங்கள் நீங்கி, உடல் வலிமையோடு இருக்கும்.

பூண்டு
சிலருக்கு அதிகப்படியான சளியால், காதுகளில் வலி உண்டாகும். அத்தகையவர்கள் தேங்காய் எண்ணெயில் சிறிது பூண்டு சேர்த்து கொதிக்க விட்டு, ஓரளவு வெப்பத்துடன் காதுகளில் ஊற்றினால், பூண்டில் உள்ள செலினியம் மற்றும் சல்பர், காதுகளில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து, காயங்களை குணப்படுத்தும்.

உப்பு
தொண்டை வலியால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் தொண்டை வலியை குணப்படுத்த, வெதுவெதுப்பான நீரில், உப்பு சேர்த்து தொண்டையில் சிறிது நேரம் வைத்து கொப்பளித்து (Gargling) வந்தால், தொண்டையில் ஏதேனும் நோய்க்கிருமிகள் இருந்தால் போய்விடும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது பூண்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஓட்ஸ்
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு ஓட்ஸ் சிறந்த நிவாரணியாக இருக்கும். ஏனென்றால், அதில் வலியைப் போக்கும் மெக்னீசியம் மற்றும் ஜிங்க் அதிக அளவில் உள்ளது.

ப்ளூபெர்ரி
சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்றினால் உண்டாகும் வலிக்கு ப்ளூபெர்ரி சிறந்ததாக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், பெருங்குடல் மற்றும் சிறுநீரகப் பாதையில் உள்ள நோய்க்கிருமிகளை அழித்து, வலியைக் குறைக்கும். எனவே இதனை தினமும் சாப்பிடுவது சிறுநீரக பாதைக்கு ஆரோக்கியமானது.

மிளகுக்கீரை
உடல் வலிக்கு மிளகுக்கீரை நல்ல நிவாரணத்தை தரும். அதற்கு வெதுவெதுப்பான குளிக்கும் நீரில், 10 துளிகள் மிளகுக்கீரை எண்ணெயை ஊற்றி குளித்தால், நரம்புகள் புத்துணர்ச்சியடைவதோடு, உடல் வலியும் நீங்கிவிடும்.

அன்னாசி
செரிமானப் பிரச்சனையால் வயிற்று வலி ஏற்படுபவர்களுக்கு, அன்னாசி ஒரு சிறந்த பழம். ஏனெனில் இதில் உள்ள புரோடியோலிடிக் நொதிகள், செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைத்து, வலியைக் குறைக்கும்.

மஞ்சள் தூள்
மூட்டுவலியால் அவஸ்தைப்படுபவர்கள், உணவில் மஞ்சள் தூளை சேர்த்து வந்தால், அதில் உள்ள குர்குமின் என்னும் பொருள், வலியை உண்டாக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை முற்றிலும் தடுத்துவிடும்.

யூலிப்டஸ் ஆயில்
தலைவலி வந்தால், அப்போது யூகலிப்டஸ் ஆயிலை தடவினால், தலைவலி குறைந்துவிடும். யூகலிப்டஸ் ஆயிலில் நோய் அழற்சி எதிர்ப்பு பொருள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது தலைவலியை மட்டுமின்றி, தசை வலி, சுளுக்கு மற்றும் நரம்பு அழுத்தங்களையும் போக்கும்.



Click it and Unblock the Notifications











