Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் சூரியன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்!
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு வீட்டிற்குள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்!!!
பல பேருக்கு உடற்பயிற்சி என்றால் ஏதாவது உடற்பயிற்சி மையத்திற்கு செல்லுதல் அல்லது காலையும் மாலையும் நடை பயிற்சி மேற்கொள்ளுதல் என்பதே. ஆனால் அது மட்டுமே உண்மையாகி விடாது. உடற்பயிற்சி செய்வதற்கு இன்னும் பல வழி முறைகள் உள்ளது. நம் வீட்டினுள்ளேயே பல உடற்பயிற்சிகளை செய்து சர்க்கரை நோயை குணப்படுத்த பயன்படுத்தலாம். சர்க்கரை நோய்க்காக வீட்டினுள் செய்யப்படும் உடற்பயிற்சிகள் பற்றி பலருக்கு தெரியாவிட்டாலும் அவைகள் உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும். உடற்பயிற்சி மையங்களுக்கு செல்வதை விட இந்த வழிமுறைகள் நல்ல பயன் அளிக்கும்.
உடற்பயிற்சிகள் சர்க்கரை நோய்க்கு நல்ல சிகிச்சையாக அமையும். ஏரோபிக்ஸ் போன்ற உடற்பயிற்சியில் ஈடுபடும் போது உங்களின் முக்கிய தசைகள் அனைத்தும் செயலாற்றும். அதனால் இதயத் துடிப்பும் மேம்படும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். அதற்கு காரணம் இரத்த ஓட்டத்தில் இருந்து நேரடியாக க்ளுகாஸை உள்ளிழுத்து விடும். பொதுவாக உடற்பயிற்சியின் தாக்கம் 72 மணி நேரம் வரை நீடிக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக உடற்பயிற்சியில் சீரான முறையில் ஈடுபட வேண்டும்.
சர்க்கரை நோய்க்கு வீட்டினுள் செய்யும் உடற்பயிற்சியை தவிர்க்க காரணங்கள் கூற முடியாது. ஏனென்றால் மழை வந்து விட்டது அல்லது இருட்டி விட்டது என்று அவ்வகை உடற்பயிற்சிக்கு காரணங்கள் காட்ட முடியாது அல்லவா? என்ன தான் வீட்டினுள் உடற்பயிற்சி செய்தாலும் கூட அது வெளியில் செய்வதை போல இருப்பதில்லை அல்லவா? அதனால் அதிகமாக தண்ணீர் குடியுங்கள். மேலும் மருத்துவ ஆலோசகரிடம் பாதுகாப்பு குறித்து அறிவுரை வாங்கிக் கொள்வதும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது கட்டாயமாகும். சரி சர்க்கரை நோய்க்காக வீட்டினுள் செய்யப்படும் சில உடற்பயிற்சிகளை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா? அவைகளை பின்பற்றி மாற்றங்களை உணருங்கள் நண்பர்களே!

ட்ரைசெப்ஸ் ட்ரிப்
நாற்காலியின் நுனியில் அமர்ந்து அதன் விளிம்பை பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் தோல் பட்டையை அகன்று விரித்துக் கொள்ளுங்கள். கால்களை விரித்து கொண்டு மெதுவாக முன்னோக்கி நகருங்கள். உங்கள் கைகளை தரையை நோக்கி மடக்கி உங்கள் பின்புரத்தை மேலே தூக்குங்கள். சர்க்கரை நோய்க்கான சிறந்த உடற்பயிற்சியாகும் இது.

புஷ் அப்ஸ்
சர்க்கரை நோய்க்கான சிறந்த உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்றாகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்; தரையை நோக்கி கீழே படுத்து கைகளையும் தரையில் வையுங்கள். கால்களை சரியான தோரணையில் வைத்து வயிற்றை இறுக்கமாக வைத்திருங்கள். உங்கள் பின்புறத்தை நேராக வைத்து கைகளை கொண்டு உடம்பை மேலேயும் கீழேயும் தள்ளுங்கள். இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து பத்து முறையாவது செய்தால் நல்ல பயன் அளிக்கும்.

கொஞ்சம் வீட்டு வேலையிலும் ஈடுபடுங்கள்
வீட்டினுள் செய்யும் உடற்பயிற்சிகளில் சுலபமானது என்றால் வீட்டு வேலைகள் தான். தூசி தட்டுதல், தரையை துடைத்தல், துணிகளை துவைத்தல் போன்ற வேளைகளில் ஈடுபட்டால் அது வெளியிலே செய்யும் உடற்பயிற்சிக்கு ஈடாக அமையும். கொஞ்சம் கொஞ்சம் வீட்டு வேலைகள் செய்து அதன் பயன்களை பெறுங்கள்.

பிளான்க்
பிளான்க் (பலகை முறை) வகை உடற்பயிற்சி உங்கள் வயிறு, முதுகு மற்றும் முக்கிய பாகங்களுக்கு நன்மையை அளிக்கும். யங்கள் கைகளை தலைக்கு பின்னால் கட்டி தரையில் படுத்து கொள்ளவும். அதன் பின் உங்கள் வயிற்று தசைகளை இறுக்கி உங்கள் உடலை தரைக்கு எதிராக அமுக்குங்கள். இதே தோரணையில் 10 நொடிகள் அல்லது அதற்கு மேலாக தொடருங்கள். இதனை பல முறை செய்யுங்கள். சர்க்கரை நோய்க்கு இதுவும் கூட ஒரு நல்ல உடற்பயிற்சியே.

உடற்பயிற்சி சாதனங்களை பயன்படுத்துங்கள்
திடத்தை அதிகரிக்கும் கருவிகளை பயன்படுத்துங்கள். சர்க்கரை நோய்க்கு திடத்தை அதிகரிப்பதென்பது ஒரு முக்கியமான உடற்பயிற்சியாகும். இதனை வாரம் மூன்று அல்லது நான்கு முறையாவது செய்ய வேண்டும். இவ்வகை உடற்பயிற்சிக்கு சில டம்பெல்ஸ் இருந்தாலே போதுமானது. செலவு அதிகமில்லாத உடற்பயிற்சியாகவும் இது அமையும்.

ஏரோபிக் உடற்பயிற்சிகள்
ஏரோபிக் உடற்பயிற்சிகளை வாரம் 4-5 முறை செய்தால் மிகுந்த பயனை அளிக்கும். த்ரெட்மில் வாங்கவும் அதை பயன்படுத்தவும் அதிகமாக யோசிக்காதீர்கள். த்ரெட்மில்லில் பல வகை வேக கட்டுப்பாடு உள்ளது. அதே போல் தேவையான நேரத்தில் நடக்க கூடிய சௌகரியமும் உள்ளது. சர்க்கரை நோய்க்கு இதுவும் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும்.

முன்னெச்செரிக்கை
சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்த ஒரு உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாகவும் மருத்துவரை அணுக வேண்டும். அதுவும் இரத்த க்ளுகோஸ் அளவு திடீரென குறையும் சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் எடுத்துக் கொள்வதால் அவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்வதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும். அதனால் எந்த ஒரு உடற்பயிற்சியிலும் ஈடுபடுவதற்கு முன்பாக போதிய முன்னெச்செரிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் வெறும் வயிற்றில் எந்த ஒரு உடற்பயிற்சியிலும் ஈடுபட கூடாது. அதிகமாக தண்ணீர் குடித்து நீர்ச்சத்துடன் இருங்கள். எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலுடன் செல்லுங்கள்.



Click it and Unblock the Notifications