Latest Updates
-
Aadi Perukku 2026: ஆடிப்பெருக்கு எப்போது? அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
பூமியின் அழிவு எப்போது வரப்போகிறது தெரியுமா? அதுவும் இப்படித்தான் நடக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
இந்த 4 ராசிக்காரங்க அவங்கள பிடிச்சவங்களுக்காக உயிரையும் கொடுப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
World Lung Cancer Day 2026: அலட்சியம் செய்யக்கூடாத நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை பகிர்ந்த டாக்டர்! -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
800 மாவட்டங்கள் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் உள்ளது தெரியுமா? -
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க...
அலர்ஜிகளை போக்கக்கூடிய சில பாரம்பரிய மருந்துகள்!!!
அலர்ஜிகள்/ஒவ்வாமை என்பது பொதுவாக ஏற்படும் ஒரு பிரச்சனை தான். அத்தகைய அலர்ஜிகள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உணவு, மருந்து, பூச்சிக்கடி, செல்லப் பிராணிகளின் ரோமங்கள் மற்றும் இதர ஒவ்வாமை ஊக்கிகள் போன்ற காரணிகளால் அலர்ஜிகள் ஏற்படுகிறது. அலர்ஜி தாக்கத்தின் போது ஹிஸ்டமின் என்ற ரசாயன பொருள் இரத்தத்தில் வெளிப்படுவதே, இந்நேரத்தில் ஏற்படும் முக்கிய உயிர் வேதியியல் மாற்றமாகும். இதனால் நம் கண்கள், மூக்கு, தொண்டை மற்றும் இரைப்பைப் குடல் பாதை பாதிப்புக்கு உள்ளாகிறது.
சரும அரிப்பு, சொறி, மூக்கு ஒழுகுதல், மூச்சுத்திணறல், தும்மல் மற்றும் கண் எரிச்சல் போன்றவைகள் தான் அலர்ஜிகளின் அறிகுறிகளாகும். அலர்ஜிகளுக்கு காலா காலத்தில் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால், கடும் அலர்ஜிக்கு உள்ளாக நேரிடும். கடும் அலர்ஜிக்கு உள்ளானவர்கள், உணவு விழுங்குவதில் கஷ்டப்படுவது, மூச்சுத்திணறல், மயக்கம், உதடு, நாக்கு மற்றும் தொண்டையில் அலர்ஜிகள் மற்றும் இரைப்பைக் குடல் பாதை பாதிப்புக்கு உள்ளாவார்கள். சில நேரங்களில், சுய நினைவை கூட இழக்கச் செய்துவிடும்.
அலர்ஜிகளுக்கான இயற்கை சிகிச்சைகள்:
அலர்ஜிகளுக்கு ஆன்டி-ஹிஸ்டமின், ஸ்டீராய்டுகள் போன்ற பல வகையான சிகிச்சைகள் முறைகள் உள்ளது. இது போக சிலவகையான இயற்கை மருத்துவத்தின் மூலமும் அலர்ஜிகளை போக்கலாம். இத்தகைய அலர்ஜிக்கான சிகிச்சைகள் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில், முதலில் ஒவ்வாமை ஊக்கியை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு, வேர்க்கடலை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்பட்டால், அவ்வகை உணவை தவிர்த்தால், அலர்ஜி வராமல் தடுக்கலாம் அல்லவா?
சரி, இப்போது அலர்ஜிகளை போக்கக்கூடிய சில பாரம்பரிய மருந்துகளை பார்க்கலாமா...

தேன்
அலர்ஜிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறந்த இயற்கை மருந்தாக தேன் விளங்குகிறது. மகரந்தம் மற்றும் இதர பொருட்களால் உருவாக்கப்படுபவை தான் தேன். அதிலும் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பை தூண்டிவிட்டு, அலர்ஜி செயல்பாடுகளுக்கு எதிராக விளங்கச் செய்யும் மகரந்த செடிகளால் உருவாக்கப்பட்ட நாட்டு தேன் மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும்.

க்யூயர்சிடின்
க்யூயர்சிடின் என்பது ஆப்பிள், பெர்ரி, வெங்காயம் மற்றும் ப்ளாக் டீ போன்ற உணவு பொருட்களில் உள்ள ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாகும். க்யூயர்சிடின் ஹிஸ்டமின் சேர்க்கையை தடுப்பதால், அலர்ஜிக்கான அறிகுறிகளை குறைக்கும்.

இயற்கையான ஹிஸ்டமின் எதிர்ப்பிகள்
வைட்டமின் சி என்பது இயற்கை ஹிஸ்டமின் எதிர்ப்பிகளாகும். அதனால் வைட்டமின் சி அடங்கியுள்ள உணவை அதிகமாக உட்கொண்டால், அலர்ஜிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக விளங்கும். இயற்கையான ஹிஸ்டமின் எதிர்ப்பிகளை போலவே, ஹிஸ்டமின் எதிர்ப்பி மருந்துகளும், அலர்ஜிகளுக்கு சிகிச்சை அளிக்க உபயோகப்படுகிறது.

இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்
இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும். அதனால் சில பழங்களையும், காய்கறிகளையும் அலர்ஜியை குணப்படுத்த பயன்படுத்தலாம். அதில் திராட்சை, வாழைப்பழம், ஆப்பிள், தக்காளி, கேரட் மற்றும் வெங்காயம் போன்றவைகள் அடங்கும்.

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளிப்பது
அலர்ஜியால் வீங்கிய தொண்டையை சரிசெய்ய சிறந்த இயற்கை வைத்தியமாக விளங்குகிறது உப்புத் தண்ணீர். உப்புத் தண்ணீரில் வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். அத்துடன் உப்பு நீர் கலந்த ஸ்ப்ரேவை மூக்கில் பயன்படுத்தினால், மூக்கில் உள்ள மகரந்தம் மற்றும் இதர ஒவ்வாமை ஊக்கிகளை நீக்கி, அலர்ஜியை குறைக்கலாம்.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் அலர்ஜியால் ஏற்படும் சேர்க்கையை தடுக்கும். வால்நட், சணல் எண்ணெய் மற்றும் மீன் எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் அதிகம் உள்ளன.

க்ரீன் டீ
க்ரீன் டீயில் இயற்கை ஹிஸ்டமின் எதிர்ப்பி உள்ளதால், அலர்ஜியை நீக்க அது பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் தினமும் 1-2 கப் க்ரீன் டீ பருகினால், அலர்ஜிகள் ஓடியே விடும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
அலர்ஜியால் ஏற்படும் அரிப்பை நீக்கும் பண்புகள் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ளது. எனவே இதனை உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் தண்ணீரில் கலந்தும் அலர்ஜி உள்ள இடங்களில் தடவலாம். மேலும் இது பாக்டீரியா மற்றும் கிருமிகளை நீக்கவும் பயன்படுகிறது.

இஞ்சி
தேனை போலவே இஞ்சியும் கூட அலர்ஜியை போக்க உதவும் சிறந்த இயற்கை மருந்தாகும். இஞ்சியும் கூட இயற்கை ஹிஸ்டமைன் எதிர்ப்பி மற்றும் இரத்தச் சேர்க்கை நீக்கும் மருந்தாக விளங்குகிறது. எனவே ½ துண்டு இஞ்சியை டீ அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால், அது அலர்ஜிகளை குணப்படுத்தி, மேலும் வராமலும் தடுக்கும்.

பூண்டு
பூண்டுகளில் ஆன்டி-வைரல் பண்புகள் அடங்கியிருப்பதால், இதுவும் கூட அலர்ஜிகளை போக்க பெரிதும் உதவுகிறது. அதிலும் சமைத்த பூண்டுகளை விட, அப்படியே சாப்பிடுவதில் தான் பயன் அதிகம். ஆகவே அலர்ஜி இருக்கும் போது, தினமும் 3-4 பூண்டுகளை தேனில் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

புதினா
இயற்கையாக இரத்தச் சேர்க்கையை நீக்கும் மருந்தாக புதினா விளங்குவதால், வைரல் தொற்றுகள் மற்றும் அலர்ஜிகளுக்கான அறிகுறிகளை குறைக்க உதவியாக இருக்கும். அதுவும் புதினா டீ சைனஸ் பிரச்சனையை நீக்கி, இருமலில் இருந்து காக்கும்.



Click it and Unblock the Notifications