Latest Updates
-
கோதுமை ரவா பொங்கலும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குதூகலமான நாளாக இருக்குமாம் -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கர்நாடகா பேமஸ் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
உங்க முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க! -
வெயில் காலத்தை சமாளிக்க உதவும் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை மாற்றப்போகும் ஸ்டார் வேட்பாளர்களும் அவர்களின் தொகுதிகளும் -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடங்களில் மருந்துகளை வெச்சு யூஸ் பண்ணாதீங்க, இல்ல மருத்துவ செலவு அதிகரிக்கும்! -
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நுங்கு சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
வாழ்வை வளப்படுத்தும் அற்புத எண்ணெய்கள்!!!
மனிதர்கள் பயன்படுத்தும் பொருள்களில் ஒரு முக்கியமான பொருளாக எண்ணெய் விளங்கி வருகிறது. எண்ணெய், சமைப்பதற்குப் பயன்படும் பொருளாக மட்டும் இல்லாமல் ஒரு மருத்துவக் குணம் கொண்ட பொருளாகவும் இருக்கிறது. ஆனால் அத்தகைய எண்ணெயில் சில எண்ணெய்களில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கும். அந்த எண்ணெய்களை உணவுகளில் சேர்த்தால், உடலில் கொழுப்புக்கள் அதிகரித்து, இதய நோய் விரைவில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேலும் சில எண்ணெய்கள் உடலுக்கு மசாஜ் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. அந்த மசாஜ் எண்ணெய்களில் உள்ள நறுமணம், மனதை புத்துணர்ச்சியடையச் செய்வதோடு, உடலில் உள்ள பிடிப்புக்கள் மற்றும் வலிகளை எளிதில் போக்குகிறது. இப்போது கீழே 10 வகையான எண்ணெய்களையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, நன்மையைப் பெறுங்கள்.

ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய் உடலுக்கு சக்தியையும் அதே நேரத்தில் புத்துணர்ச்சியையும் தருகிறது. அதாவது மூளையை வலுப்படுத்தி, நினைவாற்றைப் பெருக்கி, கவனம் சிதறி விடாமல், மிகவும் அறிவாற்றலுடன் இருக்க இந்த எண்ணெய் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த எண்ணெயில் இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற சத்துகள் அதிகம் இருக்கின்றன.

பப்பளிமாஸ் எண்ணெய்
பப்பளிமாஸ் எண்ணெய் (Grapefruit oil) ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக இருக்கிறது. சிறுநீர் உற்பத்தியை சீராக்கி, அதை சரிவர வெளியேற்றுகிறது. மேலும் சிறுநீர் கற்களை அகற்றி, சிறுநீரகத்தை வலுப்படுத்தி, சீராக இயங்க வழி செய்கிறது. மேலும் இந்த திராட்சைப் பழ எண்ணெய், தீமை விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் போன்றவற்றை அழிக்கும் சக்தியாக இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

துளசி எண்ணெய்
துளசி எண்ணெய், இருமல் மற்றும் சளி ஆகியவற்றைக் குணப்படுத்தும் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஒரு சிறிய துளி எண்ணெயைக் குடித்தால், உடனடியாக வறட்டு இருமலும், சளியும் நின்றுவிடும்.

சேஜ் எண்ணெய்
கிளரி சேஜ் எண்ணெய் செரிமானத்தில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யும் நிவாரணியாக இருக்கிறது. செரிமான உறுப்புகளில் ஏற்படும் வாயு தொல்லைகளைக் குறைத்து, சாப்பிடும் உணவு மிக எளிதாக செரிக்க இந்த எண்ணெய் உதவுகிறது. இந்த எண்ணெயை முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாகும். மேலும் பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகளையும் இந்த எண்ணெய் தீர்த்து வைக்கும்.

வென்னிலா எண்ணெய்
வென்னிலா எண்ணெய் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இந்த எண்ணெய் புற்று நோயைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த எண்ணெய் மனச்சோர்வு மற்றும் இனி்சோமேனியா போன்றவற்றை நீக்குகிறது. இந்த எண்ணெய் இனிப்பாக மற்றும் நல்ல ருசியாக இருக்கிறது. அதே நேரத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.

ரோஸ் எண்ணெய்
உடலை பலவிதமான நோய்களிலிருந்து காப்பாற்ற இந்த ரோஸ் எண்ணெய் உதவுகிறது. குறிப்பாக மன இறுக்கம், மனச் சோர்வு, கோபம், வெறுப்பு, பகை போன்ற உணர்வுகளைக் குறைத்து உடலும், மனமும் புத்துணர்ச்சி பெற இந்த எண்ணெய் உதவுகிறது.

கிராம்பு எண்ணெய்
கிராம்பு எண்ணெயை, இந்த இயற்கை வழங்கியிருக்கு அதிசயங்களில் ஒன்று அழைக்கலாம். பற்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் செப்டிக் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. பல்வலி மற்றும் பல்சிதைவு போன்றவற்றைக் குணப்படுத்த இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். மேலும் இந்த எண்ணெயில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடல் பலவீனத்தைக் களைந்து உடலுக்கு வலிமையை வழங்குகிறது.

பெப்பர்மிண்ட் எண்ணெய்
செரிமானக் கோளாறுகளைக் குணப்படுத்த பெப்பர்மிண்ட் எண்ணெய் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய் வயிறு வீக்கத்தைக் குணப்படுத்தும். மேலும் இந்த எண்ணெய் தலைவலியை நீக்குகிறது. பெண்கள் சீரான மாதவிடாய் சுழற்சியைப் பெற உதவுகிறது. மேலும் இதை சருமத்தில் பூசினால் அரிப்புகள் கூட காணாமல் போய்விடும்.

லாவண்டர் எண்ணெய்
லாவண்டர் எண்ணெய் பல காலங்களாக ஒரு தெரபியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெயை முகத்தில் பூசினால், முகச் சுருக்கங்கள் நீங்கி முகம் பளபளப்பாக மாறும். அதோடு சிறிய காயங்கள், தீ காயங்கள், மற்றும் ஏதாவது பூச்சுகள் கடித்தால் அந்த இடங்களில் இந்த எண்ணெயைப் பூசினால் அது உடனே வலியை நீக்கிவிடும். அதோடு அந்த காயங்களில் நீர் கோர்க்காமல் பார்த்துக் கொள்ளும்.

எலுமிச்சை எண்ணெய்
எலுமிச்சை எண்ணெயை எல்லா தேவைகளுக்காகவும் பயன்படுத்தலாம். சிறந்த நறுமணத்தைக் கொண்டிருக்கும் எலுமிச்சை எண்ணெய் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமங்களை வைத்திருக்கிறது. எனவே இந்த எலுமிச்சை எண்ணெயைப் பயன்படுத்தினால், உடலில் உள்ள எல்லா நோய்களும் பறந்து ஓடிவிடும். உடலில் ஏற்படும் எல்லாவிதமான நோய்களையும் போக்கும் ஆயுதமாகவும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications











