Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!

நல்லா நடங்க
அமெரிக்க நரம்பியல் அகாடமி(American Academy of Neurology)யின் புதிய கண்டுபிடிப்பு ஒன்று ஒரு வார காலத்தில் ஆறு முதல் ஒன்பது மைல்கள் வரை நடக்கும் முதியோர் தங்கள் நினைவு சக்தியை தக்க வைத்துக் கொள்வதாகக் கூறுகின்றன. அதேபோல் ஃப்ராங்க் லாலிஸ் (Frank Lawlis) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த மனவியல் வல்லுனர் நன்றாக மூச்சுப் பயிற்சியில் ஈடுபடும் முதியவர்கள் உணவு உட்கொள்வதிலும் கவனமாக இருந்தால் மூளைத் திறன் குறையாமல் இருப்பார்கள் என்று தனது ஆராய்ச்சி ஒன்றின் முடிவாகச் சொல்லி இருக்கிறார்.
இசையில் மூழ்குங்கள்
கான்சாஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ப்ரெண்டா ஹன்னா பேடி என்ற ஆராய்ச்சியாளர் வாழ்நாள் முழுவதும் இசையில் முழுமூச்சாக ஈடுபடும் மனிதர்களின் மூளை சிறப்பாக செயல்படுகிறது என்று கூறுகிறார். புத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல பொழுது போக்கு மட்டுமல்ல அது மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். எனவே புத்தகங்கள் படிப்பதும் உதவும்.
புதுசா கத்துக்கங்க
எப்போதும் வழக்கமான செயல்களையே செய்து கொண்டிராமல் புதிய புதிய முயற்சிகளிலும், செயல்களிலும் ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும் இளமையாகவும் திறனுள்ளதாகவும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆர்னால்டு ஸீபெல் என்ற ஒரு மூளை ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குனர் புதியனவற்றைக் கற்க அதிக ஆர்வம் காட்டுபவர்களின் மூளை தன் திறனை இழக்காமல் இழக்காமல் பெருமளவு தக்க வைத்துக் கொள்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்
மூளைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறுக்கெழுத்துப் போட்டிகள், விடுகதைகள், ஆகியவை மூளைக்கு முறையாக வேலை தந்து அதன் திறனைத் தக்க வைத்துக் கொள்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
சுறுசுறுப்பா இருங்க
ஜார்ஜ் ரோச்செல்லெ என்ற அமெரிக்க நரம்பியல் மருத்துவர் நல்ல உறக்கம், சுறுசுறுப்பான தன்மை ஆகிய இரண்டும் இருக்கும் முதியவர்களின் மூளைத் திறன் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார்.
சுறுசுறுப்பாக இருப்பது போலவே தேவையான அளவு ஓய்வும், உறக்கமும் மூளையின் திறன் குறையாமல் இருக்க மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
நல்ல பழக்கங்கள்
புகைபிடித்தல் மற்றும் அதிகமாய் மதுவருந்துதல் போன்ற பழக்கங்கள் நாளடைவில் மூளைத் திறனை மழுங்கடிக்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தீய பழக்கங்களை விட்டொழித்து நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிக முக்கியம்.
இலினாய் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆர்ட் க்ரேமர் என்ற விஞ்ஞானியும், பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தைச் சேர்ந்த கிர்க் எரிக்சன் என்ற விஞ்ஞானியும் இணைந்து நடத்திய ஆய்வில் மனிதர்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும் மூளையின் ஆற்றலைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். ஓயாத கவலை, மன அழுத்தம், அதிகமாகக் குடித்தல் ஆகியவை மூளையின் செயல்பாட்டுத் திறனைப் பெருமளவு குறைத்து விடுவதாகக் கூறுகின்றனர்.
பயணம் செய்யுங்கள்
உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத் தவிர்ப்பதும் நல்லது. அடிக்கடி பயணிப்பது, பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வது, அதிகமாய் கவலைப்படாமல், பதட்டப்படாமல் இருப்பது, போன்றவையும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது என்கின்றன விஞ்ஞான ஆராய்ச்சிகள்.
வயதாக வயதாக மனிதன் சில பல செயல்களில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வதும், வயதாகி விட்டதால் சில செயல்பாடுகள் முன்பு போல் இருக்க முடியாது என்று நம்ப ஆரம்பிப்பதும் மூளையின் ஆற்றல் குறைய முக்கிய காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவே மனதளவில் முதுமையடைந்து விடாமல் இருந்தால் மூளை என்றும் முதுமை அடைந்து விடுவதில்லை, அதன் ஆற்றல் குறைவதில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications