Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
அபாயகரமான நோய்களில் இருந்த தற்காத்துக்கொள்ளுங்கள் பெண்களே !

ஐந்து ஆபத்தான நோய்கள்
பெண்களுக்கு எலும்பு உடைதல் நோய், கருப்பை, மார்பக புற்றுநோய், இதயநோய், மன அழுத்தம், கருமுட்டை குறைபாடு ஆகிய ஆபத்தான ஐந்து நோய்கள் தாக்குகின்றன. இந்த நோய்களில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்வது என்று ஆலோசனை அளித்துள்ளனர் மகளிர் மருத்துவர்கள்.
எலும்பு உடைதல் நோய்
பெண்கள் இயற்கையிலேயே மென்மையானவர்கள். நாற்பது வயதை கடந்த உடனே அவர்களின் உடலும், எலும்பும் நாளடைவில் மெலிவடைந்து விடும். இதனால் லேசாக கீழே விழுந்தாலோ எழும்புகள் உடைந்து விடும். எனவே உடலில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எலும்பு பாதிப்பு நோய் ஏற்பட்டவர்கள் லேசாக எலும்பு பாதிப்பு ஏற்பட்டலே அப்புறம் நீண்டகாலத்திற்கு வீல் சேரை தேட வேண்டியிருக்கும். எனவே பெண்களே உங்கள் எலும்புகளின் மீது நீங்கள் அக்கறை கொள்ளுங்கள்.
இதயநோய்
கடந்த பத்து ஆண்டுகளில் இதயநோயினால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கத்தினால் பெரும்பாலான பெண்களின் உடல் பருமனாகிறது. இதனால் உயர்ரத்த அழுத்தம், இதயபாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே பெண்களே சரியான உணவுகளை உட்கொண்டு இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
மனஅழுத்தம் கவனிங்க
மன அழுத்தம் என்பது பெண்களை பாதிக்கும் மிகப்பெரிய நோயாக உள்ளது. நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் பிரச்சினை, ஹார்மோன் மாறுதல் போன்றவைகளினால் பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. எனவே மெனோபாஸ் பருவத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்களேன். உங்களுக்கான மன அழுத்தப் பிரச்சினைக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.
புற்றுநோய் தாக்குதல்
இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் மார்பகப்புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். இருபதோ, நாற்பதோ எந்த வயது பெண்களாக இருந்தாலும் தினசரி 5 நிமிடம் செலவழித்து தங்கள் மார்புகளை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதேபோல் 35 வயதை கடந்த பெண்கள் ஆண்டிற்கு ஒருமுறை முழு உடல் பரிசோனை செய்து கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டிற்கு ஒருமுறை கருப்பை வாய் புற்றுநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறதாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கின்றது.
கருமுட்டை உற்பத்தி
முறையற்ற மாதவிடாய் கோளாறுகள் இன்றைக்கு இளம் வயது பெண்களையும் தாக்குகின்றன. இதற்கு காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம்தான் என்கின்றனர் மருத்துவர்கள். முறையற்ற மாதவிடாய் கோளறுகளால் கருமுட்டை உற்பத்தியில் குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதனால் திருமணத்திற்குப்பின்னர் குழந்தை உருவாவதில் பிரச்சினைகள் எழும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. எனவே இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க சத்தான சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications