For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சின்ன கவலையும் உயிரை குடிக்கும்: ஆய்வில் தகவல்

By Mayura Akilan
|

Stress
மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் உயிருக்கு ஆபத்தாகும் என்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கவலை, மனச்சோர்வு, தனியாக இருப்பது போன்ற உணர்வு மனிதர்களுக்கு விரைவில் மரணத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் 68000 பேரிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதயநோய், புற்றுநோய் மற்றும் பல நோய்களினால் பாதிப்பிற்குள்ளாகி குறைந்த வயதிலேயே மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்து வந்தது.

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து 35 வயதிற்கு மேற்பட்ட 68 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். கடந்த 1994 ம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டுவரை 10 ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆய்வில் பல உண்மைகள் கண்டறியப்பட்டன.

உடல்ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு மனரீதியான சிக்கல்கள் காரணமாக அமைகின்றன. மது அருந்துதல், புகைப்பழக்கம், போதைப்பழக்கத்தினால் குறைந்த வயதில் சிலர் மரணத்தை தழுவினாலும், சைக்கலாஜிகல் ரீதியான சிக்கல்களினால் பாதிக்கப்படும் பலர் விரைவில் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

தனியாக இருப்பது போன்ற அச்சம், மனச்சோர்வு, போன்றவை நோய்களை தோற்றுவிக்கின்றன. இதனால் பெரும்பாலானோர் குறைந்த வயதில் மரணமடைந்து விடுகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே சிறிய அளவில் மனரீதியான சிக்கல்கள் ஏற்பட்டாலே அவற்றினை தீர்ப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஏனெனில் மனரீதியாக ஏற்படும் சிறு பிரச்சினைதான் உடல்ரீதியான நோய்களுக்கு வழிவகுக்கின்றன என்கின்றனர் நிபுணர்கள்.

எனவே சிறு பிரச்சினைதானே என்று கவனிக்காமல் விட்டு விடாமல் பிரச்சினைகளை களைய முற்படவேண்டும் என்கிறார் ஆய்வினை மேற்கொண்ட டாக்டர் ரஷ்.

English summary

Study Shows Mild Mental Health Issues Could Increase Risk Of Death | சின்ன கவலையும் உயிரை குடிக்கும்: ஆய்வில் தகவல்

A new study shows that mild mental health issues could increase the risk of death. Even a condition as mild or feeling anxious, depressed or lonely could increase the risk of an early death, says to the new study.
Story first published: Thursday, August 2, 2012, 14:32 [IST]
Desktop Bottom Promotion